search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvarur accident"

    • தனியார் பள்ளி வேன் ஒன்று திருவாரூரில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றுவதற்காக அகரத்தநல்லூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
    • திடீரென மோட்டார் சைக்கிளும், பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் மாணவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே சேங்காலிபுரத்தை சேர்ந்தவர் ஞானசேகரனின் மகன் ஜெகநாதன் (வயது 19). மணக்கால் அய்யம்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் மகன் (18) இவர்கள் இருவரும் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகின்றனர். ஜெகநாதன் பிஎஸ்சி பயர் அண்ட் சேப்டி 3-ம் ஆண்டும், விக்னேஷ் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டும் படித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை இருவரும் கல்லூரிக்கு சேங்காலிபுரம் பகுதியில் இருந்து ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றனர். அப்போது தனியார் பள்ளி வேன் ஒன்று திருவாரூரில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றுவதற்காக அகரத்தநல்லூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மோட்டார் சைக்கிளும், பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் மாணவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் பள்ளி வேனில் இருந்த 2 பள்ளி மாணவர்கள் சிறுகாயத்துடன் உயிர் தப்பினர்.

    இந்த விபத்து தொடர்பாக திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வேளுக்குடி பகுதியில் வந்தபோது எதிரே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீது வேகமாக மோதியது.
    • சந்திரா, கணபதி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    திருவாரூர்:

    நாகை மாவட்டம் பெருங்கடம்பனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சின்னையன் மனைவி சந்திரா (வயது 70).

    இவர் தனது உறவினர்களான கணபதி (42) அவரது மகன் சந்தோஷ் (16), ராமச்சந்திரன், அவரது மனைவி விஜயலட்சுமி உள்பட 7 பேருடன் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் உள்ள குலதெய்வம் கோவில் திருவிழாவிற்காக சென்றனர்.

    அங்கு திருவிழாவை முடித்து விட்டு மீண்டும் இன்று அங்கிருந்து பெருங்கடம்பனூருக்கு காரில் புறப்பட்டனர். காரை ராமச்சந்திரன் ஓட்டினார்.

    அந்த கார் திருவாரூர் அருகே உள்ள வேளுக்குடி பகுதியில் வந்தபோது எதிரே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீது வேகமாக மோதியது. இதில் சந்திரா, கணபதி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ராமச்சந்திரன், அவரது மனைவி விஜயலட்சுமி, அவர்களது குழந்தை ஜெய்ஹரி சாதனா உள்பட 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூரில் குடிபோதையில் படுத்து தூங்கியவர் லாரி சக்கரம் ஏறி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் பஸ் நிலையம் அருகில் அரசுக்கு சொந்தமான நெல் அறவை மில் உள்ளது. இங்கு ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். நேற்று இரவு மில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியின் அடியில் குடிபோதையில் வந்த அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் படுத்து தூங்கி விட்டாராம்.

    இந்நிலையில் இன்று காலை அந்த லாரி டிரைவர் அடியில் ஒருவர் படுத்து இருப்பது தெரியாமல் லாரியை எடுத்த போது அவர் தலையில் டயர் ஏறி சம்பவ இடத்திலேயே பலியனார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊர் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    ×