திருவாரூர் அருகே பள்ளி வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி

தனியார் பள்ளி வேன் ஒன்று திருவாரூரில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றுவதற்காக அகரத்தநல்லூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. திடீரென மோட்டார் சைக்கிளும், பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் மாணவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் பலியான கல்லூரி மாணவர்கள்.
விபத்தில் பலியான கல்லூரி மாணவர்கள்.
Published on

திருவாரூர்:

திருவாரூர் அருகே சேங்காலிபுரத்தை சேர்ந்தவர் ஞானசேகரனின் மகன் ஜெகநாதன் (வயது 19). மணக்கால் அய்யம்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் மகன் (18) இவர்கள் இருவரும் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகின்றனர். ஜெகநாதன் பிஎஸ்சி பயர் அண்ட் சேப்டி 3-ம் ஆண்டும், விக்னேஷ் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டும் படித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை இருவரும் கல்லூரிக்கு சேங்காலிபுரம் பகுதியில் இருந்து ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றனர். அப்போது தனியார் பள்ளி வேன் ஒன்று திருவாரூரில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றுவதற்காக அகரத்தநல்லூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மோட்டார் சைக்கிளும், பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் மாணவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் பள்ளி வேனில் இருந்த 2 பள்ளி மாணவர்கள் சிறுகாயத்துடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்து தொடர்பாக திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com