என் மலர்

  தமிழ்நாடு

  பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்த 8-ம் வகுப்பு மாணவன் தலை நசுங்கி பலி
  X

  பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்த 8-ம் வகுப்பு மாணவன் தலை நசுங்கி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வழக்கம்போல் மாணவர் திவாகர் இன்று காலை 7.40 மணி அளவில் குதிரைக்கல்மேடு பகுதியில் பள்ளி வேனுக்காக காத்திருந்தார். வேன் வந்ததும் அதில் ஏறி பள்ளிக்கு சென்றார்.
  • வேன் தொடர்ந்து மற்ற மாணவர்களை ஏற்றி செல்ல கோனேரிபட்டி பேரேஜ் நோக்கி சென்றது. அப்போது வேனில் ஏறிய மாணவர் திவாகர் முன்படிக்கட்டு வாசல் அருகே நின்று பயணித்தார்.

  அம்மாபேட்டை:

  ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குதிரைக்கல்மேடு என்ற பகுதியை சேர்ந்தவர் மாதையன், மில் தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி. இவர்களுக்கு திவாகர் (13), ஜீவா (3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

  திவாகர் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் இவர் பள்ளிக்கு சொந்தமான வேனில் சென்று வந்தார்.

  வழக்கம்போல் மாணவர் திவாகர் இன்று காலை 7.40 மணி அளவில் குதிரைக்கல்மேடு பகுதியில் பள்ளி வேனுக்காக காத்திருந்தார். வேன் வந்ததும் அதில் ஏறி பள்ளிக்கு சென்றார்.

  வேன் தொடர்ந்து மற்ற மாணவர்களை ஏற்றி செல்ல கோனேரிபட்டி பேரேஜ் நோக்கி சென்றது. அப்போது வேனில் ஏறிய மாணவர் திவாகர் முன்படிக்கட்டு வாசல் அருகே நின்று பயணித்தார். வேன் கோனேரிபட்டி பேரேஜ் கதவணை மின்நிலைய சோதனை சாவடி அருகே சென்றபோது டிரைவர் திடீர் பிரேக் போட்டார்.

  அப்போது வேனுக்குள் இருந்த மாணவர் திவாகர் நிலைதடுமாறி முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே தவறி விழுந்தார். அப்போது அந்த வேனின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கி நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவர் திவாகர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார். இதைப்பார்த்த மற்ற மாணவர்கள் அலறி சத்தம் போட்டனர். இதையடுத்து டிரைவர் வேனை நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கி சென்று பார்த்தபோது திவாகர் பின்பக்க சக்கரத்தில் சிக்கி இறந்து கிடப்பது தெரிய வந்தது.

  பின்னர் சம்பவம் குறித்து பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

  அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான மாணவர் திவாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் பள்ளி வேன் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×