என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The student was killed"

    • விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்
    • அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்

    போளூர்:

    போளூர் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் பாபு, இவர் எதப்பட்டு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி மஞ்சுளா, கட்டுப்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர்.

    இவர்களது கடைசி மகன் அரவிந்த் (16) ஆரணியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் வீட்டு மாடியில் அரவிந்த் மற்றும் நண்பர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் மேல் செல்லும் உயிர் அழுத்த மின் கம்பி அரவிந்த் மேல் பட்டு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடிக்க உடல் கருகி இறந்தார். இது குறித்து போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்

    ஜெயபிரகாஷ் விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி போளூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

    இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து போளூர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. நேரில் சென்று அரவிந்த் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

    • 30 அடி தொலைவில் கரை ஒதுங்கிய உடல் மீட்பு
    • குளித்த போது விபரீதம்

    செய்யாறு:

    செய்யாறு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு சிவா என்ற மகனும், சில்பா என்ற மகளும் உள்ளனர்.

    சிவா செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை நண்பர்களுடன் சிவா செய்யாற்றில் குளிப்பதற்காக சென்றார். ஆற்றில் யானை பள்ளம் என்ற இடத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இடத்தில் ஆழமாக இருந்ததால் சிவா தண்ணீரில் மூழ்கினார்.

    நண்பர்கள் முயற்சி செய்தும் சிவா கிடைக்காததால் அவரது அம்மாவிற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் உறவினர்கள் மற்றும் செய்யாறு தீயணைப்பு படை வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தார். தீயணைப்பு வீரர்கள் இரவு 10 மணி வரை தேடியும் மாணவன் கிடைக்காததால் திரும்பி சென்றனர்.

    பின்னர் இன்று காலை யானை பள்ளத்தில் இருந்து சுமார் 30 அடி தொலைவில் சிவாவின் உடல் கரை ஒதுங்கியது.

    தகவல் அறிந்த செய்யாறு போலீசார் சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த யானை பள்ளத்தில் ஏற்கனவே 3 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

    • தங்கை லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்
    • போலீசார் விசாரணை

    ராணிபேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா காமராஜ் தெருவை சேர்ந்தவர் அன்பழகன்.இவரது மகன் சஞ்சய் (வயது 16). இவரும் இவரது தங்கை நிரஞ்சனா (14) ஆகிய இருவரும் அம்மூர் லாலாப்பேட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை சஞ்சய் தனது தங்கை நிரஞ்சனாவை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு ராணிப்பேட்டையில் இருந்து வாலாஜா நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சஞ்சய் லாரி சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவரது தங்கை நிரஞ்சனா தலையில் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினார்.

    இது குறித்து தகவல் அறந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சிறிய காயங்களுடன் நிரஞ்சனாவை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீச்சல் பழக சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா வெலக்கல்நத்தம் பையனப்பள்ளி சேர்ந்த ஸ்வீட் கடை உரிமையாளர் மகாலிங்கம். இவரது மகன் கோபிநாத் (வயது 21).

    கோயம்புத்தூர் விவசாய கல்லூரியில் பி.எஸ்.சி. வேளாண் படிப்பு படித்து வருகிறார். விடுமுறையில் வந்த கோபிநாத் அவரது நண்பர்களுடன் சுண்ணாம்பு குட்டை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாமல் கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் நீச்சல் பழக சென்றார்.

    நண்பர்கள் தண்ணீரில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தபோது கோபிநாத் மேலிருந்து குதித்தார். அவர் மேலே வரவில்லை மாயமானார்.

    அதனைத் தொடர்ந்து நண்பர்கள் சிறிது நேரம் தேடிப் பார்த்துவிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தார்.

    இதனால் அப்பகுதி பொது மக்கள் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று நேற்று பிற்பகல் 2 மணியளவில் இருந்து கடந்த நான்கு மணி நேரமாக மாணவனை தேடினர்.

    மாணவன் கிடைக்காததால் மேலும் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினரும் வழவழைக்கப்பட்டனர். இரவு 10 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை இதனால் இரவு நேரம் என்பதால் தேடும் பணியை கைவிட்டனர்.

    தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் நாட்டறம்பள்ளி திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் தேடும் பணியில் ஈடுப்பட்டனர் அப்போது காலை 7.15 மணியளவில் மாணவனை பிணமாக மீட்டனர்.

    நாட்டறம்பள்ளி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×