என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்குவாரியில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி
    X

    கல்குவாரியில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி

    • நீச்சல் பழக சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா வெலக்கல்நத்தம் பையனப்பள்ளி சேர்ந்த ஸ்வீட் கடை உரிமையாளர் மகாலிங்கம். இவரது மகன் கோபிநாத் (வயது 21).

    கோயம்புத்தூர் விவசாய கல்லூரியில் பி.எஸ்.சி. வேளாண் படிப்பு படித்து வருகிறார். விடுமுறையில் வந்த கோபிநாத் அவரது நண்பர்களுடன் சுண்ணாம்பு குட்டை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாமல் கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் நீச்சல் பழக சென்றார்.

    நண்பர்கள் தண்ணீரில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தபோது கோபிநாத் மேலிருந்து குதித்தார். அவர் மேலே வரவில்லை மாயமானார்.

    அதனைத் தொடர்ந்து நண்பர்கள் சிறிது நேரம் தேடிப் பார்த்துவிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தார்.

    இதனால் அப்பகுதி பொது மக்கள் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று நேற்று பிற்பகல் 2 மணியளவில் இருந்து கடந்த நான்கு மணி நேரமாக மாணவனை தேடினர்.

    மாணவன் கிடைக்காததால் மேலும் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினரும் வழவழைக்கப்பட்டனர். இரவு 10 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை இதனால் இரவு நேரம் என்பதால் தேடும் பணியை கைவிட்டனர்.

    தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் நாட்டறம்பள்ளி திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் தேடும் பணியில் ஈடுப்பட்டனர் அப்போது காலை 7.15 மணியளவில் மாணவனை பிணமாக மீட்டனர்.

    நாட்டறம்பள்ளி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×