search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறியல்"

    • பண்ருட்டியில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 29 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் இந்திய கம்யூ. சார்பில் சாலை மறியல் நடந்தது.

    கடலூர்:

    சென்னையில் இந்திய கம்யூ. கட்சி தலைமை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் இந்திய கம்யூ. சார்பில் சாலை மறியல் நடந்தது. இது பற்றிய தகவலறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெ க்டர் கண்ணன் தலைமை யிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் துரை உள்ளிட்ட 29 பேரை கைது செய்தனர்.

    அரியலூர்

    அரியலூர் தமிழ்நாடு சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான சாலை மறியல் நடைபெற்றது. அதன்படி அரியலூரில் அண்ணா சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழரசன், மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். இதில் சிறப்பு ஓய்வூதிய தொகையாக ரூ.6,750 வழங்க வேண்டும். அரசுத்துறை காலி பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 28 பேரை கைது செய்தனர்.

    • சேலத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம், பழைய பென்சன் திட்டம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    • திடீரென அப்பகுதியில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம், பழைய பென்சன் திட்டம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன்படி இன்று காலை கோட்டை பகுதியில் மாவட்ட தலைவர் வடிவேல் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் திடீரென அப்பகுதியில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் தொடர்ந்து மறியல் முயற்சியில் ஈடுபட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 132 பேரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருணம மண்டபத்தில் அடைத்தனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே இன்று குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
    • ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழ மைக்கேல் பட்டி தெற்கு தெரு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வருகின்றனர்.

    இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குழாய், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடைந்துள்ளது. இதனால் காரைக்குறிச்சி ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் தற்காலிகமாக இணைப்பு வழங்கி தண்ணீர் வழங்கி வந்துள்ளார்.ஆனால் இந்த இணைப்பின் மூலம் வரும் தண்ணீர் 200 குடியிருப்பிற்கு போதுமானதாக இல்லை என்றும், உடனடியாக தங்களுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என கூறி, அப்பகுதி பொது மக்கள் அரியலூர் - தா.பழூர் சாலையில் கீழ மைக்கேல் பட்டி கிராமத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து அங்கு வந்த தா.பழூர் போலீசார், காரைக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுத்து போதிய அளவில் தண்ணீர் தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இந்த சாலை மறியலால் அரியலூர் - தா.பழூர் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் திடீர் மறியல்
    • கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகை


    விராலிமலை,


    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த் அன்னவாசல் அருகே குமியான்மலை பகுதிகளில் தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை கேட்டு பலர் விண்ணப்பித்திருந்தனர். அதில் சிலருக்கு மட்டும் உரிமைத்தொகை கிடைத்த நிலையில் பணம் கிடைக்காதவர்கள் கடந்த ஒரு மாத காலமாக கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தனர்.


    ஆனாலும் அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை. இதனால் இ-சேவை மையங்களில் தங்களின் தரவுகள் கிடைக்கப் பெறவில்லை என்றும் பரிசீலனையில் உள்ளது என்றும் மேல் முறையீடு செய்யவும் என்றும் சொல்கிறார்கள். இதையடுத்து மேல் முறையீடு செய்து இந்த மாதமும் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை.


    எனவே தகுதியான பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி  காட்டுப்பட்டி, உருவம்பட்டி, சேரானூர், மரிங்கிப்பட்டி, பின்னங்குடி, ஆணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் 


    பின்னர் சம்பவ இடத்திற்கு குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலர் வராததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் புதுக்கோட்டை பரம்பூர் சாலையில்  குடுமியான்மலை கடைவீதியில் சாலை மறியல் செய்தனர்.


    தகவல் அறிந்த குடுமியான்மலை வருவாய் ஆய்வாளர் சரோஜா, பரம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ரவி, கிளிக்குடி கிராம நிர்வாக அலுவலர் ராமர் அன்னவாசல் போலீஸ்  இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்டோர் சாலை மறியல் செய்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


    அப்போது உரிமைத்தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1/2 மணி நேரத்திற்கு மேலாக, போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.


    • மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

    ஆலந்தூர்:

    சென்னை, ஆதம்பாக்கம், ஜீவன் நகர், 2-வது தெருவில் இருந்து மேடவாக்கம் மெயின் ரோட்டை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்பட உள்ளது. இதில் அங்குள்ள கால்வாய் மீது சிறிய பாலமும் கட்டப்பட இருக்கிறது.

    இந்த நிலையில் சாலை அமையும் பகுதியில் உள்ள சில வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக கூறி அதனை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். வீடுகளை காலி செய்யவும் உத்தரவு பிறப்பித்து இருந்தனர். ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே இன்று காலை தாசில்தார்கள் ராதிகா, காளிதாஸ் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் வீடுகளை இடிக்கும் பணியை தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அ.தி.மு.க.கிழக்கு பகுதி செயலாளர் பரணி பிரசாத், முன்னாள் கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன், நரேஷ் குமார், லோகேஷ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து மேடவாக்கம் சாலையில் திடீர் மறியிலில் ஈடுபட்டனர். இதேபோல் பா.ஜ.க.வை சேர்ந்த வினோத், இன்பா தலைமையிலும் ஏராளமானோர் பொதுமக்களுக்கு ஆதரவாக மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • மகளிர் உரிமைத்தொகை கிடைக்காததால் பெண்கள் ஆத்திரம்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் கடந்த ஒரு மாத காலமாக கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை.இது தொடர்பாக.பயனாளிகளிடம் கேட்டபோது இ சேவை மையங்களில் தங்களின் தரவுகள் கிடைக்கப்பெறவில்லை என்றும் ,பரிசீலனையில் உள்ளது என்றும் மேல் முறையீடு செய்யவும் என்றும் சொல்கிறார்கள்.மேல் முறையீடு செய்து இந்த மாதமும் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை.எனவே தகுதியான பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பாக திடீர் சாலை மறியல் செய்தனர்.தகவல் அறிந்த புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன், தாசில்தார் ராமசாமி, காவல்துறை அதிகாரிகள் சாலை மறியல் செய்தவர்களிடம் உரிமைத்தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலை மார்க்கத்தில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 130 பேர் தங்களுக்கு மகளிர் உரிமை திட்டத்தில் பணம் வரவில்லை.
    • அரசூர் மெயின் ரோட்டில் திடீரென மறியல் போராட்டம் நடத்தினர்.

    திருவையாறு:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த அரசூர் உள்ளிட்ட பலபகுதிகளில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பணம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று காலையில் அரசூர் கிராம மக்கள் 80 பெண்கள் உள்பட 130 பேர் தங்களுக்கு மகளிர் உரிமை திட்டத்தில் பணம் ஏறவில்லை என்று கூறி திருவையாறு மணக்கரம்பை சுப்பிரமணியன் கோவில் அருகே அரசூர் மெயின் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் (பொறுப்பு) நெஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கந்தர்வகோட்டை அருகே கூடுதல் பஸ் வசதி கேட்டு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
    • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புனல் குளம் ஊராட்சியில் தெத்து வாசல் பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரும்பாலும் போக்குவரத்திற்கு பேருந்தை நம்பியே உள்ளனர். இப்பகுதிக்கு போதிய பேருந்து வசதி இல்லை என்றும், உரிய நேரத்தில் பேருந்துகள் வருவதில்லை என்றும், அவ்வாறு வரும் பேருந்துகள் தெத்து வாசல்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிற்பதில்லை என்றும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இன்றும் இந்த பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர், மருத்துவ பரிசோதனைக்கு செல்பவர்கள் என்று அக்கிராம மக்கள் காத்திருந்த னர். ஆனால் வெகு நேர மாகியும் பேருந்து வர வில்லை. இதனால் பொறுமை இழந்து ஆத்திரம் அடைந்த தெத்து வாசல் பட்டி,மஞ்ச பேட்டை கிரா மத்தை சேர்ந்த பொதுமக்கள், சாலை மறியல் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    உரிய நேரத்தில் பேருந்துகள் வராததை கண்டித்தும், அனைத்து பேருந்துகளும் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த கந்தர்வ கோட்டை போலீசார் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் தமிழ்நாடு போக்குவரத்து கழக பேருந்து பணிமனை மேலாளர் வரவழைக்க ப்பட்டார். போலீசாரும், பணிமனை மேலாளரும் கிராம பொதுமக்களிடம், கூடுதல் பேருந்து வசதி, குறித்த நேரத்தில் பேருந்து, பஸ் ஸ்டாப்பில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இந்த சாலை மறியலால் தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் மாற்றுவழி ஏற்படுத்தி தர வேண்டும்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, தேவராயன் பேட்டை அருகே பொன்மான் மேய்ந்த நல்லூர் பகுதியில் தஞ்சை விக்ரவாண்டி நெடுசாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

    பொன்மான் மேய்ந்த நல்லூர் கருப்பூர் இடையே உள்ள சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் மாற்றுவழி ஏற்படுத்தி தர கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    கிராமமக்கள் சென்று வர மாற்றுவழி ஏற்படுத்தி தர நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்காததால் பொன்மான் மேய்ந்த நல்லூர் கிராமமக்கள் பொன்மான்மேய்ந்த நல்லூர் பகுதியில் தஞ்சை விக்ர வாண்டி தேசிய நெடுஞ்சாலையில் பந்தல் அமைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த பாபநாசம் மெலட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அறந்தாங்கி அருகே கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரி பொதுமக்கள் மறியல் நடத்தினர்
    • வெங்காயத்தாமரை படர்ந்து கழிவுநீர் கண்மாயக மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் புகார்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவ ட்டம் அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தைச் சேர்ந்த கண்மாய் ஒன்று உள்ளது.சுமார் 120 ஏக்கர் பரப்பரவு கொண்ட கண் மாய் மூலம் 500 ஏக்கர் வரை விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகி ன்றன.இந்நிலையில் மழைக்கால ங்களில் அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள அருகன்கு ளம், நெடுங்குளம், வண்ணா ன்குளம் ஆகிய குளங்களிலி ருந்து நிரம்பி வழிகின்ற தண்ணீர் வைரிவயல் கண் மாய்க்கு வந்தடையும்.ஆனால் நகர்பகுதியில் உள்ள குளங்களில் ஆக்கிரமி ப்பு செய்து வீடுகள் கட்டப்ப ட்டுள்ளதால், அங்கிருந்து வருகின்ற தண்ணீரில் சாக்க டை கழிவு நீர் கலப்பதாக கூறப்படுகிறது.இதனால் குடிதண்ணீர் போன்று பராமரித்து வந்த கண்மாயில் தற்போது வெங்காயத்தாமரை படர்ந்து கழிவுநீர் கண்மாயக மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கி ன்றனர்.அதோடு மட்டுமல்லாது நகர்புறத்திலிருந்து சேமிக்கப்படுகின்ற குப்பை கள் மற்றும் கோழிக்கழிவு கள் ஆகியன இக்க ண்மாயில் கொட்டப்படுகிறது.இதனால் கண்மாய் தண் ணீரில் பல்வேறு வித மான தொற்றுக்கிருமிகள் உற்ப த்தியாகி, தண்ணீரை பயன்ப டுத்த முடியாத அவல நிலை உள்ளது.விவசாயத்திற்கு பயன்ப டுத்த வேண்டிய தண்ணீர் கழிவுநீராக மாறியதால் கட ந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் விவசாயம் செய்யாமல் தரிசு நிலமாக கிடப்பில் போட்டுள்ளனர்.இது தொடர்பாக துறை அதிகாரிகள் மற்றும் மாவ ட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகி றது.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் மற்றும் அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்தனர்.அதிகாரிகளின் பேச்சுவா ர்த்தையை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

    • ஆழ்குழாய் மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை
    • இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செங்கமேடு ஊராட்சியில் கன்னுத்தோப்பு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி குடிநீர் தேவைக்காக, மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த நான்கு மாதங்களாக ஆழ்குழாய் மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரின்றி பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நெடுந்தொலைவு நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிககையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×