என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடுதல் பஸ் வசதி கேட்டு சாலை மறியல்
- கந்தர்வகோட்டை அருகே கூடுதல் பஸ் வசதி கேட்டு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
- ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புனல் குளம் ஊராட்சியில் தெத்து வாசல் பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரும்பாலும் போக்குவரத்திற்கு பேருந்தை நம்பியே உள்ளனர். இப்பகுதிக்கு போதிய பேருந்து வசதி இல்லை என்றும், உரிய நேரத்தில் பேருந்துகள் வருவதில்லை என்றும், அவ்வாறு வரும் பேருந்துகள் தெத்து வாசல்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிற்பதில்லை என்றும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இன்றும் இந்த பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர், மருத்துவ பரிசோதனைக்கு செல்பவர்கள் என்று அக்கிராம மக்கள் காத்திருந்த னர். ஆனால் வெகு நேர மாகியும் பேருந்து வர வில்லை. இதனால் பொறுமை இழந்து ஆத்திரம் அடைந்த தெத்து வாசல் பட்டி,மஞ்ச பேட்டை கிரா மத்தை சேர்ந்த பொதுமக்கள், சாலை மறியல் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.
உரிய நேரத்தில் பேருந்துகள் வராததை கண்டித்தும், அனைத்து பேருந்துகளும் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த கந்தர்வ கோட்டை போலீசார் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் தமிழ்நாடு போக்குவரத்து கழக பேருந்து பணிமனை மேலாளர் வரவழைக்க ப்பட்டார். போலீசாரும், பணிமனை மேலாளரும் கிராம பொதுமக்களிடம், கூடுதல் பேருந்து வசதி, குறித்த நேரத்தில் பேருந்து, பஸ் ஸ்டாப்பில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இந்த சாலை மறியலால் தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.






