search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கன்று"

    • புதுக்கோட்டையில் பள்ளிகளில் தூய்மை சேவை பணிகள் நடைபெற்றது
    • மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    நபார்டு வளர்ச்சி வங்கி முன்னோடி வங்கி, பள்ளிக்கல்வித்துறை, சூழலியல் உரிமைக்கான இளையோர் அமைப்பு, கிரின்கேர் பவு ண்டேசன் ஆகியவை இணைந்து  புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, முதன்மை கல்வி அலுவலக வளாகம் ஆகியவற்றில் ஒரு முறை ஒரு மணி நேரம் என்ற தலைப்பின் கீழ் பள்ளி வளாகங்கள் தூய்மை செய்யும் பணி மற்றும் மர க்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நபார்டு வங்கியின் மாவட்ட வள ர்ச்சி மேலாளர். தீபக்கு மார் வரவேற்று பேசினார்.

    முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் தலைமை வகித்தார். ராணியார் அரசு மகளிர் மேல்நிலை ப்பள்ளி யின் தலைமையாசிரியர் தமிழரசி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவி யாளர் ( உயர்நிலை) ராஜு, மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்  மெ.சி.சாலை செந்தில்,பள்ளித்துணை ஆய்வா ளர் மாரிமுத்து, சூழலியல் உரிமைக்கான இளையோர் அமைப்பின் ஆதப்பன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.நிகழ்ச்சியில் பள்ளி வளா கங்கள் சுத்தம் செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு தூய்மையை பாதுகாப்பதில் தன்னார்வலர்களின் இன்றியமையா பங்கு பற்றி எடுத்துக்கூறப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கிரி ன்கேர் பவுண்டேசன் ஒரு ங்கிணைப்பாளர் ரெங்க சாமி, திருவருள் மற்றும் பலர் சூழலியல் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • துளிகள் அமைப்பு சார்பில் 128-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா படியூரில் நடைபெற்றது.
    • மரக்கன்றுகள் நடும் விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    காங்கயம்:

    காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் 128-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா படியூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு படியூர் ஊராட்சி தலைவர் ஜீவிதா சண்முக சுந்தரம் , படியூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பேக்கேஜ் அன்ட் கோ ஜீவசேகரன், காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தம், சாம்சன் சிஎன்ஓ. இன்டஸ்ட்ரீஸ் மோகன்குமார், படியூர் ஊராட்சி துணை தலைவர் புவனேஸ்வரி வலுப்பூரான் , படியூர் கே.கே.கே.ஆயில்மில் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  

    • சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
    • செம்பனார்கோயில்- தரங்கம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    தரங்கம்பாடி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மீண்டும் மஞ்சள் பை, மரக்கன்றுகள் நடுதல், தீவிர பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அந்த வகையில் மயிலாடு துறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் அருகே காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, செம்பனார்கோயில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு செம்பனா ர்கோயில் - தரங்கம்பாடி தேசிய நெடுஞ்சா லையில் சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். விழாவில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன், கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிவள்ளி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் 1.10 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயம்.
    • இதுவரை 37 லட்சத்து 83 ஆயிரத்து 98 மரங்கள் நடப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே அத்தியூர் கிராமத்தில் சுமார் 5ஏக்கர் பரப்பளவில் 2ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    மரம் தங்கசாமி நினைவுதினத்தையொட்டி ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள 100 விவசாய நிலங்களில், 605 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 1,68,239 மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட உள்ளது.

    அதன்படி அத்தியூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குநர் ரமேஷ் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

    இந்த ஆண்டு தமிழகத்தில் 1.10 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 37லட்சத்து 83ஆயிரத்து 98 மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும், மரம் சார்ந்த விவசாயம் செய்ய விவசாயிகளை காவேரி கூக்குரல் ஊக்குவித்து வருவதாக அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

    • சிவன்மாரி ராணுவம் மற்றும் காவலர் தேர்வு பயிற்சி மைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் 200 பயிற்சி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் சார்பில் கடையநல்லூர் மங்களாபுரத்தில் சிவன்மாரி ராணுவம் மற்றும் காவலர் தேர்வு பயிற்சி மைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. ரோட்டரி கிளப் தலைவர் மயில் தலைமை தாங்கினார். ராணுவ பயிற்சி மைய நிறுவனர் சிவன் மாரி வரவேற்று பேசினார். ரோட்டரி கிளப் செயலாளர் இத்ரீஸ், ஓய்வு பெற்ற ஆசிரியர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் டாக்டர் மீரான்மைதீன், முகமது கானித், முகமது இஸ்மாயில், மைதீன், கருப்பசாமி மற்றும் 200 பயிற்சி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 100 மரக்கன்று நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து மரக்கன்றுகள் நட்டனர்.

    • என்.எஸ்.எஸ், ஜே.ஆர்.சி. மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.
    • பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    பள்ளி கல்வித்துறையின் சார்பில் தூய்மை பசுமையை வலியுறுத்தி எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தினை சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

    இதைத் தொடர்ந்து தூய்மை பசுமையை வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    கிரேட் எஃப் தொண்டு நிறுவனம் சார்பில் என்.எஸ். எஸ், ஜே.ஆர்.சி. மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.

    பள்ளி வளாகத்தில் தேசிய பசுமை படை வழங்கிய மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேசன், தலைமை ஆசிரியர் கஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சிதம்பரம், பள்ளித் துணை ஆய்வாளர் ராமநாதன் சூழல் ஒருங்கிணைப்பாளர் இமயசிவன், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், திருப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் புஷ்பராஜ் , கண்ணன், சங்கர் மற்றும் நாட்டு நல பணி திட்டம் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • Saplings were planted in government school on Independence Day
    • தொடர்ந்து, போதை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ஏ.எம்.சி. லயன்ஸ் சங்கம் சார்பில் ஈச்சங்கோட்டையில் உள்ள அரசினர் மேல்நி லைப்பள்ளியில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தா மரை தலைமை தாங்கினார்.

    சங்க தலைவர் லயன் மனோஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

    சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் லயன் எஸ்தர் சாந்தினி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் வீரமணி வாழ்த்துரை வழங்கினார்.

    பின்னர், சங்கம் சார்பில் பள்ளி வளாகத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டது.

    தொடர்ந்து, 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    பின்னர், பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு 2 சீலிங் பேன்கள் வழங்கப்பட்டது.

    மாணவர்கள் நூலகத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்காக நூலகத்திற்கு 50 புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    முடிவில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, எஸ்தர் சாந்தினி ஸ்டாலின் பள்ளியில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    விழாவில் சங்க ஆலோசகர் லயன் ஸ்டாலின் பீட்டர் பாபு, செயலாளர் லயன் காயத்திரி, சங்க ஜி.எல்.டி. ஒருங்கிணைப்பாளர் லயன் அமிர்தராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இதில் ஊழியர்கள், செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • 77 சதவீத சலுகையில் மூத்தகுடி மக்களுக்கு சிறப்பு உடல் பரிசோதனை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் 77-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம் தேசியக்கொடி ஏற்றிவைத்தார்.

    நிகழ்ச்சியில் மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர்.சரவணவேல், நரம்பியல் சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர். காமேஷ் அருண், மேலாளர்கள், ஊழியர்கள், செவிலியர்கள், டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    மேலும், 77-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மருத்துவமனையில் 77 சதவீத சலுகையில் மூத்தகுடி மக்களுக்கு சிறப்பு உடல் பரிசோதனை இன்று (15-ந் தேதி) முதல் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • மதுரை மாவட்டத்தில் நடந்த 31,750 மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க விழாவில் கலெக்டர் பங்கேற்றார்.
    • அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்று நடும் பணி நடைபெறும்.

    மதுரை

    மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் என் மண் என் தேசம் நிகழ்ச்சி மூலமாக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளில் 75 மரக்கன்றுகள் வீதம் 31,750 மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் ஆண்டாள் கொட்டாரம் கிராமத்தில் உள்ள பள்ளியில் மரக்கன்று நடும் பணியை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தொடங்கிவைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அரவிந்த், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, நேரு யுவகேந்திரா இணை இயக்குனர் செந்தில்குமார் உள்பட பல கலந்து கொண்டனர். அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தியாகிகளின் பங்களிப்புடன் இந்த மரக்கன்று நடும் பணி நடைபெறும் என்றும், மேலும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் இந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. மாநாட்டிற்கு மரக்கன்று வழங்கி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
    • இளைஞரணி கேபிள் மணி நன்றி கூறினார்.

    சோழவந்தான்

    அ.தி.மு.க. சார்பில் மதுரையில் வருகிற 20-ந் தேதி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அழைப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு நடைபெற்ற நிகச் சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரி யர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சரவணன், டாக்டர் சரவணன், தமிழ ரசன் கருப்பையா, மாணிக் கம், யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பேரூர் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றகள் வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

    இதில் மாநில நிர்வாகிகள் துரை தன்ராஜ், வெற்றிவேல், இளங்கோவன், பேரூராட்சி கவுன்சிலர்கள் வசந்தி கணேசன், ரேகா ராமச்சந்திரன், சரண்யா கண்ணன், டீக்கடை கணே சன், சண்முக பாண்டிய ராஜா, மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் கருப் பட்டி தங்கப்பாண்டி மருத்துவரணி கருப்பட்டி கருப்பையா, கச்சிராயிருப்பு முனியாண்டி, தென்கரை ராமலிங்கம், தண்டபாணி, மணிகண்டன்.

    செழியன் மருது, சேது, மன்னாடி மங்கலம் ராஜ பாண்டி, ராமு குருவித்துறை பாபு, மேலக்கால் காசி லிங்கம் சோழவந்தான் துரைக்கண்ணன், ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி கேபிள் மணி நன்றி கூறினார்.

    • வாய்மேடு சமத்துவபுரத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
    • பொதுமக்களுக்கு வேஷ்டி, புடவை, தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வாய்மேட்டில் நாகை மாவட்ட தி.மு.க. விவசாய அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட தி.மு.க. விவசாய அணி அமைப்பாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பி னருமான பழனியப்பன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக ஆயக்கார ன்புலத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து, பின் வாய்மேடு சமத்து வபுரத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    தொடர்ந்து, வாய்மேட்டில் நடந்த நிகழ்ச்சி யில் பொது மக்களுக்கு வேஷ்டி, புடவைகள், தென்ன ங்கன்று கள் வழங்கினார்.

    இதில் இந்தோனேஷியா தொழிலதிபர் திராவிட மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன், ஒன்றிய துணை செயலாளர் அருள் அரசு, ஊராட்சி தலைவர் ரேவதி பாலகுரு, கிளை செயலாளர்கள் ரவிச்சந்திரன், அசோக்குமார், சுப்ரமணியன், செந்தமிழ்ச்செல்வன், வைத்தீஸ்வரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புவி வெப்பத்தை குறைக்க மரம் நடுவது அவசியம்.
    • தூய்மை பாரதம் இயக்கம் மூலம் நகரம் தூய்மையடைகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா இருவார விழாவின் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ் தலைமை வகித்து பேசும்போது, பொதுமக்களிடையே தூய்மை உறுதிமொழி ஏற்றல், திடக்கழிவு மேலாண்மை, இயற்கை முறையில் உரம் தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், நீர் மேலாண்மை,மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை குறைத்தல், நாப்கின்கள் பயன்ப டுத்துதல், கழிப்பறைகளின் பயன்பாட்டை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. என்றார்.

    திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றினை நட்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்து பேசும்போது, தூய்மை பாரதம் இயக்கம் மூலம் நகரம் தூய்மையடைகிறது. மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக பூமி வெப்பம் அதிகரித்து வருகிறது.

    இதனால் எதிர்காலத்தில் நாம் பேரிடரில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. எனவே மரங்களை நட்டு 33 சதவீத வனபரப்பை அதிகரித்து பூமியை குளிர்ச்சிபடுத்துவதால் மட்டுமே எதிர்காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். ஒவ்வொருவரும் தன் கடமையாக கருதி மரக்கன்று நடுவதை இயக்கமாக கொண்டு செல்லவேண்டும் என்றார்.

    நிகழ்ச்சிக்கு பாலம் சேவை நிறுவனச்செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நகராட்சி மேலாளர் சீதாலெட்சுமி, அலுவலர்கள் சிற்றரசு, நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், செந்தில்குமார் மற்றும் மக்கள் கல்வி நிறுவன அலுவலர்கள் திருலோகச்சந்தர், கனகதுர்கா, பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

    ×