சுதந்திர தினவிழாவில் மரக்கன்றுகள் வழங்கல்

இதில் ஊழியர்கள், செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.77 சதவீத சலுகையில் மூத்தகுடி மக்களுக்கு சிறப்பு உடல் பரிசோதனை.
அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் 77-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

விழாவில் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம் தேசியக்கொடி ஏற்றிவைத்தார்.

நிகழ்ச்சியில் மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர்.சரவணவேல், நரம்பியல் சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர். காமேஷ் அருண், மேலாளர்கள், ஊழியர்கள், செவிலியர்கள், டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

மேலும், 77-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மருத்துவமனையில் 77 சதவீத சலுகையில் மூத்தகுடி மக்களுக்கு சிறப்பு உடல் பரிசோதனை இன்று (15-ந் தேதி) முதல் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com