பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வாய்மேடு சமத்துவபுரத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.பொதுமக்களுக்கு வேஷ்டி, புடவை, தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த வாய்மேட்டில் நாகை மாவட்ட தி.மு.க. விவசாய அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட தி.மு.க. விவசாய அணி அமைப்பாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பி னருமான பழனியப்பன் தலைமை தாங்கினார்.

முன்னதாக ஆயக்கார ன்புலத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து, பின் வாய்மேடு சமத்து வபுரத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

தொடர்ந்து, வாய்மேட்டில் நடந்த நிகழ்ச்சி யில் பொது மக்களுக்கு வேஷ்டி, புடவைகள், தென்ன ங்கன்று கள் வழங்கினார்.

இதில் இந்தோனேஷியா தொழிலதிபர் திராவிட மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன், ஒன்றிய துணை செயலாளர் அருள் அரசு, ஊராட்சி தலைவர் ரேவதி பாலகுரு, கிளை செயலாளர்கள் ரவிச்சந்திரன், அசோக்குமார், சுப்ரமணியன், செந்தமிழ்ச்செல்வன், வைத்தீஸ்வரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com