search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது பாட்டில்கள்"

    • அந்தியூர் பகுதியில் 5 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
    • இந்த கடைகளில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 5 லட்சத்துக்கும் மேல் விற்பனை நடைபெற்று வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் புதுக்காடு செல்லும் சாலையில் ஒரு கடையும், தவுட்டுப்பாளையம் அத்தாணி செல்லும் சாலையில் 2 கடைகளும், பள்ளியபாளையத்தில் ஒரு கடை, மூலக்கடை பகுதியில் ஒரு கடையும் என 5 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த கடைகளில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 5 லட்சத்துக்கும் மேல் விற்பனை நடைபெற்று வருகிறது.

    இங்கு மது வாங்கி குடிக்கும் மது பிரியர்கள் ஒரு பாட்டிலுக்கு ரூ. 10 முதல் ரூ.15 வரை அதிக விலைக்கு வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகம் வாங்குவதால் இதைப்பற்றி யாரிடம் கூறுவது என்று தெரியாமல் வேதனையோடு மது போதையில் அவர்களின் நண்பர்கள் இடத்தில் கூறி ஆறுதல் அடைந்து வருகின்றார்கள்.

    அந்தியூர் பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு அரசு நிர்ணயித்த விலையிலேயே மது பாட்டில்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மது பிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பனைக்கு வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டிதுரையை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒரு வாலிபர் ஒரு பையுடன் நின்று கொண்டு இருந்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாண்டிதுரை (28) என்பதும், மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து 25 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டிதுரையை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கீழ்பவானி வாய்க்கால் அருகே ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • இதையடுத்து அவரிடம் இருந்து 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் அருகே ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சின்னசேலம் பகுதியை சேர்ந்த நித்தீஸ்குமார் (22) என்பதும், மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நித்தீஸ்குமாரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் வந்தவரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர். அவரிடம் 25 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
    • இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் வேலுச்சாமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே பங்களாப்புதூர் போலீசார் உப்புபள்ளம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அவரிடம் 25 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் காளியூர் செல்லியபாளையம் பகுதியை சோ்ந்த வேலுச்சாமி (65) என்பதும் மது பாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் வேலுச்சாமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்து 25 மது பாட்டில்கள், ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனா்.

    குடியாத்தத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை கடத்திச் சென்ற ஆட்டோவை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் ஏட்டுகள் பாபு, செல்லபாண்டியன் ஆகியோர் இன்று அதிகாலை 2½ மணியளவில் பிச்சனூர் அரசமரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவை மடக்க முயன்றனர். போலீசார் மீது மோதுவது போல் ஆட்டோ நிற்காமல் சென்றது. சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவை விரட்டி சென்றனர். 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சினிமா பாணியில் விரட்டி சென்றனர். ஆட்டோவை ஒரு புதர் மறைவில் நிறுத்திவிட்டு கும்பல் தப்பி ஓடியது.

    போலீசார், கும்பலை பிடிக்க பின்தொடர்ந்தனர். கும்பல் சிக்கவில்லை. இதையடுத்து, ஆட்டோவில் பார்த்த போது சீல் பிரிக்காத 25 பெட்டிகளில் சுமார் 900 மது பாட்டில்கள் இருந்தது.

    மதுபாட்டில்களுடன் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தல் கும்பல் வந்த பாதையில் உள்ள டாஸ்மாக் கடைகளை சென்று பார்வையிட்டனர்.

    காளியம்மன்பட்டி சாமியார்மலையில் உள்ள மதுபான கடையை உடைத்து மதுபாட்டில்களை கடத்தியது தெரியவந்தது. உடனடியாக அந்தக்கடை விற்பனையாளர் துரைபாபு மற்றும் மேற் பார்வையாளர் சரவணனை வரவழைத்தனர்.

    மதுக்கடை பூட்டுகளை உடைத்த கொள்ளை கும்பல், சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா இருக்குமோ? என்ற பீதியில் மின் இணைப்பை துண்டித்துள்ளனர். பிறகு, உள்ளே புகுந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி ஆட்டோவில் கடத்தியது தெரியவந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் இருதயராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையிலான போலீசார், மதுபாட்டில்கள் கடத்திய கொள்ளையர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

    தற்போது, கொள்ளை நடந்த டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள காளியம்மன்பட்டி மாணிக்கம் நகரில் உள்ள மதுக்கடையில் கடந்த மாதம் 9-ந் தேதி 350 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடினர்.

    ஒரே பகுதியில் அடுத்தடுத்துள்ள மதுக்கடைகளில் கொள்ளை நடந்துள்ளதால், ஒரே கும்பல் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இரவு நேரத்தில் போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்ததால், மதுபான பாட்டில்கள் திருடியதை கண்டுபிடிக்க முடிந்தது. எனவே, இரவு நேரங்களில் போலீசார் தொடர்ந்து வாகன தணிக்கை, ரோந்து பணியில் ஈடுபட்டால் குற்றங்கள் குறையும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
    ×