search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புறக்கணிப்பு"

    • மத்திய அரசின் 3 புதிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்ப்பு.
    • 3 புதிய சட்டங்களை அமலாக்கும் மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    கும்பகோணம்:

    மத்திய அரசின் 3 புதிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நேற்று கும்பகோணம் ஒருங்கி ணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு கும்பகோணம் வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் வக்கீல் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்களையும், பொது மக்களையும் பாதிக்கும் இந்திய குற்றவியல் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்து 3 புதிய சட்டங்களை அமலாக்கும் மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    முன்னதாக 3 புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் அடையாளமாக வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர்.

    • போலீஸ் அல்லாத ஒருவர் பஞ்சாயத்து பேசு வதை கண்டித்து புறக்கணிப்பு.
    • 5-ந் தேதி வரை 3 நாட்கள் கோா்ட்டு புறக்கணிப்பு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வக்கீல்கள் சங்க கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. இதற்கு செயலாளர் ராமசாமி, பொருளாளர் பரமசிவம், மூத்த வக்கீல்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தரக்கூடிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யாவை யும், போலீஸ் அல்லாத ஒருவர் பஞ்சாயத்து பேசு வதை கண்டித்தும், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தியாகு, இளங்கோ ஆகியோரை கண்டித்தும், இவர்களை பணி இட மாற்றம் செய்யக்கோரியும் வருகிற 5-ந் தேதி வரை 3 நாட்கள் கோா்ட்டு புறக்கணிப்பு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதையடுத்து சங்கராபுரம் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்தனர். இதில் மூத்த வக்கீல்கள், வக்கீல் சங்க உறுப்பி னர்களும் கலந்து கொண்டனர்.

    • கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் அரசு விழாக்களை புறக்கணிக்க வருவாய் துறை அலுவலர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
    • அரசியல் பிரமுகர்கள் மன்னிப்பு கேட்கும் வரையில் விழாக்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் பழனிக்குமார் கூறியதாவது:-

    ராமநாதபுரத்தில் அமைச்சர் மற்றும் எம்.பி.க்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் அங்கு சமாதானம் செய்து கொண்டிருந்த மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன கீழே தள்ளி விடப்பட்டது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைய செய்தது. இதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி சார்ந்த அரசு விழாவில் ராமநாதபுரம் மாவட்ட வருவாய்துறை அலுவலர்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என முடிவு செய்யப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டரை அவமரியாதை செய்து கீழே தள்ளிய அரசியல் பிரமுகர்கள் மன்னிப்பு கேட்கும் வரையில் விழாக்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதுகுளத்தூர் யூனியன் கூட்டத்தை அதிகாரிகள் புறக்கணித்தனர்.
    • கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டிய சம்பந்தப்பட்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க வில்லை.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் சண்முக பிரியா ராஜேஸ் தலைமை யில் நடந்தது. ஆணையாளர் ஜானகி முன்னிலை வகித் தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி கள்) தேவபிரியா வரவேற்றார். இதில் மொத்தம் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கவுன்சிலர் கள் சசிகலா (கருமல்),செல்வி (மேலகன்னிசேரி), கலைச் செல்வி (விளங்குளத்தூர்), முருகன் (செல்வநாயகபுரம்), அரிச்சுணன் (வளநாடு) ஆகியோர் கவுன்சில் நிதி அனைத்து கவுன்சிலர்க ளுக்கும் பாரபட்சமின்றி ஒதுக்க வேண்டும். சாலை யோரம் உள்ள முள்செடி களை வெட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். கருங்கால குறிச்சி கிராமத்தில் நிழற் குடை அமைக்க வேண்டும், வெண்ணீர் வாய்க்கால் கிராமத்தில் காலனி பகுதி, கீழ கன்னி சேரி பகுதியில் பேவர்பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

    விளங்குளத்தூர் பகுதி யில் இருந்து பருக்கைக்குடி செல்லும் தார்ச்சாலை பழுத டைந்துள்ளதை மரா மத்து செய்ய வேண்டும். பருக்கைக்குடி கிராமத்தில் 2 படித்துறை கட்ட வேண் டும். வெண்ணீர் வாய்க்கால். கிராமத்தில் சுடுகாடு வரை சாலை அமைக்க வேண்டும்.கண்மாய்களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டிய சம்பந்தப்பட்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது கவுன்சிலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    • கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் மேலாண்மை இயக்குநர் சக்திவேல் தலைமையில் நடைப்பெற்றது.
    • தலைவர் மற்றும் இயக்குநர்கள் கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து நெடுஞ்சாலையோரம் அமர்ந்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பல்வேறு தீர்மானங்கள் குறித்து சிறப்பு கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் மேலாண்மை இயக்குநர் சக்திவேல் தலைமையில் நடைப்பெற்றது.

    இக் கூட்டத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜன், இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

    கூட்டத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை பின்புறம் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்வது, ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நீரேற்றும் அறை உள்ளிட்டவைகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யாததை கண்டித்தும், நிர்வாக சீர்கேடு மற்றும் நிர்வாக குளறுபடிகளை கண்டித்து தலைவர் மற்றும் இயக்குநர்கள் கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து நெடுஞ்சாலையோரம் அமர்ந்தனர்.

    இதை சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இவர்களது கோரிக்கை களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து சமரசம் ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரெயில்வே துறையை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    • விஜய்வசந்த் எம்.பி. தலைமையில் திரளானோர் பங்கேற்பு

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரெயில் இயக்க வேண்டும், ஐதராபாத் சார்மினார் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும், நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும், ரெயில்வே துறையை தனியாருக்கு விற்க கூடாது, கோட்டார் ரெயில் நிலைய சாலைகளை சீரமைக்க வேண்டும், தாம்பரம்- நாகர்கோவில் தினசரி ரெயில் இயக்க வேண்டும், ரெயில்வே மேம்பாலங்களை கட்ட வேண்டும், கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கன்னியா குமரி மாவட்டத்தை ரெயில்வே நிர்வாகம் தொடர்ந்து புறக்கணிப்பதை கண்டித்தும் குமரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு விஜய்வசந்த் எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம் (கிழக்கு) மற்றும் பினுலால் சிங் (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், நாகர் கோவில் மாநகர தலைவர் நவீன் குமார், முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் செல்வகுமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி பேசுகையில், காங்கிரஸ் கட்சி எழுச்சி அடையும் நாள் வந்துவிட்டது. குமரி மாவட்ட வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. சென்னை- நாகர்கோவில் தினசரி ெரயில் இயக்க வேண்டும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரெயில்வே சம்பந்தமாக பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தொடர்ந்து மத்திய அரசிடம் மனு அளித்து வருகிறேன். ஆனால் அதன் மீது மத்திய அரசு அலச்சியம் காட்டி வருகிறது என்றார்.

    தொடர்ந்து விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ரெயில்வே சார்ந்த வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற அடிப்படையில் நான் (விஜய் வசந்த்) மத்திய அரசிடம் தொடர்ந்து அழுத்தம் அளித்து வருகிறேன். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்.

    சென்னை- நாகர் கோவில் தினசரி ரெயில் இயக்க வேண்டும், புதிய மேம்பாலங்கள் அமைக்கவும் மற்றும் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்களை மத்திய அரசு அளித்துள்ளேன்.

    ஆனால் இன்றளவிலும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. காங்கிரஸ் கட்சி எம்.பி என்பதால் எனது கோரிக்கைகள் மத்திய அரசால் புறக் கணிக்கப்படுகின்றன. இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மீண்டும் மத்திய அரசிடம் ரெயில்வே வளர்ச்சி பணிகள் குறித்து மனுக்கள் அளிப்பேன். அதிலும் எந்த வித முன்னேற்றம் இல்லை என்றால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
    • இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந்தேதி போலீசார் அத்துமீறி நுழைந்து வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தி, வக்கீல்களின் அலுவலகம் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தினர். இதனை கண்டித்து அந்த தினத்தை ஆண்டுதோறும் வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசு விடுமுறை நாள் என்பதால் நேற்றே வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னத்தில் உள்ள கோர்ட்டுகளில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.


    • கரூர் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்தனர்
    • வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது

    கரூர்:

    தர்மபுரியில் வக்கீல் சிவக்குமார் கொல்லப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மதுரையில் வக்கீல்கள் ராஜேஷ், ஸ்டாலின் ஆகியோர் கைது செய்ததை கண்டித்தும், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் அசோசியேசன் வேண்டு கோளின்படி, கரூர் மாவட்டத்தில் கரூர் வக்கீல்கள் சங்க தலைவர் மாரப்பன் தலைமையில் வக்கீல்கள் நேற்று கோர்ட் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.


    • தர்மபுரி மாவட்டத்தில் வக்கீல் சிவகுமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்.
    • மதுரையில் வக்கீலை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நாகர்கோவில்:

    தர்மபுரி மாவட்டத்தில் வக்கீல் சிவகுமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். மதுரையில் வக்கீலை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதே போல குமரி மாவட்டத்திலும் 2 ஆயிரத்து க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். நாகர்கோவிலில் இன்று வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்லவில்லை.மேலும் பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை மற்றும் பத்மநாப புரம் ஆகிய கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • நம்முடைய கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவது வேதனையளிக்கிறது.
    • ரெயில்வேயை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர், நாகப்பட்டினம் மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வரும் ரெயில்வே துறையை கண்டித்து போராட்டத்தை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவாரூர் வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    செல்வராஜ் எம்.பி ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசியதாவது, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூருக்கு சரியான சாலை வசதி இல்லாததால் தரை வழிப் போக்குவரத்து சவாலாக உள்ளது. நாகப்பட்டினம் துறைமுகம் செயலிழந்துள்ளதால் நீர்வழிப் போக்குவரத்தும் இல்லை.

    இந்தப்பகுதியில் விமான நிலையம் இல்லாததால் வான்வழிப் போக்குவரத்தும் இல்லை. ரயில் பயணம் மட்டுமே வாய்ப்பாக உள்ளது. நம்முடைய கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவது வேதனையளிக்கிறது.

    ஒன்றிய அரசு எதையும் கேட்டவுடன் தந்து விடாது. போராடித்தான் பெற வேண்டும். எனவே ரயில்வேயை வலியுறுத்தி மிகப்பெரும் போராட்டத்தை நடத்த வேண்டும்.

    அதற்கு முன்பு, இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்த வேண்டும். அவர் மூலம் ரயில்வேக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு நாகை எம்.எல்.ஏ பேசினார்

    கூட்டத்தில், எம்.எல்.ஏ, .க்கள் பூண்டி கே.கலைவாணன் நாகை மாலி, மாரிமுத்து, தாட்கோ தலைவர் மதிவாணன் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை.
    • அரசு வக்கீல் மீது தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூரை சேர்ந்தவர் ஜமீலா பானு. இவர் திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் அரசு வக்கீலா பணியாற்றி வருகிறார் . நேற்று மாலை ஜமீலா பானு அவரது அலுவலகத்தில் இருந்தபோது ரகுமான்கான் என்பவர் அரிவாளால் ஜமீலா பானுவையும், அவரது மகளையும் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த இருவரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ,அரசு வக்கீல் மீது தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 

    • திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் போதிய நிதி ஒதுக்காததை கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
    • எந்த கோரிக்கையிலும் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் இன்று நடைபெற்றது. ஒன்றிய தலைவர் வேட்டை யன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் இந்திரா ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஆணையாளர்கள் அன்பரசு, ராமர் ஆகியோர் கூட்டத்தை நடத்தினர்.

    கூட்டம் நடைபெறு வதற்கு முன்பாக அ.தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பி னர் நிலையூர் முருகன் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆணையாளரை சந்தித்து தங்களது வார்டு பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கை களை நிறைவேற்ற போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் திட்டப்பணிகள் செய்ய முடியவில்லை. நிதி ஒதுக்காததை கண்டித்து இன்றைய கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி சென்றனர்.

    இதுகுறித்து அ.தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர் நிலையூர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு மக்களுக்கான திட்டப்பணிகள் செய்யப்பட்டது. அதே சமயத்தில் தற்போது தி.மு.க. ஆட்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆன சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எந்த கோரிக்கையிலும் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என்றார்.

    ×