search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புராணக்கதைகள்"

    • அப்படியானால் குலதெய்வமும் இறை நிலையும் வேறு வேறா?
    • வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபட்டனர்.

    குலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகாதவர்களுக்கு திருமணம் அமைவது, குழந்தை வரம் பெறுவது,

    தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது,

    வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.

    அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது.

    அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது.

    ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது.

    அப்படியானால் குலதெய்வமும் இறை நிலையும் வேறு வேறா? இல்லை.

    இதற்கு அருமையான விளக்கத்தை பகவான் கீதையில் சொல்கிறார்.

    யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அவர்களை அப்படியே நான் வழி நடத்துகிறேன்.

    செயல்களின் பயனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகிறார்கள்.

    அதாவது இறைவனை லட்சியமாகக் கொள்வதும் உலக இன்பங்களை ஒதுக்கிவிட்டு இறை நெறியில் செல்வதும் எல்லோராலும் முடியாது.

    உலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இறைவன் தேவதைகளைப் படைத்துள்ளார் அல்லது அவரே அப்படி அவதரிக்கிறார்.

    வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபட்டனர்.

    இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குலதெய்வங்கள்.

    எனவே குலதேவதையை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற்றுக்கொண்டே இறைநிலை அடையும் வாய்ப்பு உள்ளது.

    • இரவு 3 மணிக்கு மேல் சந்தனம் பூசிவிடுவார்கள்
    • சந்தனக்காப்பு இல்லாத மரகதக்கல் நடராஜரை, பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    வருடத்திற்கு ஒரு நாள் அதாவது மார்கழி மாதம் பவுர்ணமி நாளில் திருவாதிரை நட்சத்திரத்தில் மட்டும் சந்தனக்காப்பு கலைக்கப்படும்.

    அன்று முழுவதும் சந்தனக்காப்பு இல்லாத மரகதக்கல் மேனியால் ஆன நடராஜரை, பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    அதனைத்தொடர்ந்து நடராஜர் சிலைமீது சந்தனாதி தைலம் பூசப்பட்ட பின்னர் வெண்ணெய், சந்தனம், குங்குமம், மஞ்சள் திரவியம், தேன், பால், தயிர், இளநீர் உள்பட 32 வகையான அபிஷேகம் நடைபெறும்.

    இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

    மேலும் நடராஜர் மீது பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் கொண்டது என்பதால் அதனை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள்.

    இதையடுத்து அன்று இரவு சரியாக 12.00 மணி அளவில் சிறப்பு பூசைகள் நடத்தப்பட்டு மீண்டும் மரகத நடராஜர் சிலை மீது சந்தனம் பூசப்படும்.

    திருவாதிரை அன்று கோவிலில் அதிக கூட்டம் இருக்கும் காலை பத்து மணியில் இருந்து மரகத நடராஜரைப் பார்க்கலாம்.

    இரவு 3 மணிக்கு மேல் சந்தனம் பூசிவிடுவார்கள் பிறகு அடுத்த வருடம்தான் மரகத நடராஜரை தரிசிக்க முடியும்.

    அதனால் இரவு சாமி தரிசனம் செய்யும்போது வரிசையில் அதிகநேரம் நிற்கவேண்டியதிருக்கும் கூட்டமும் கட்டுக்கடங்காமல் இருப்பதால்

    சில நேரம் அதிக தொலைவில் இருந்து வந்து இருப்பவர்கள் மரகதநடராஜரை பார்க்காமலே சந்தனம் பூசப்பட்ட நடராஜரை பார்த்து செல்ல வாய்ப்பு உண்டு.

    இந்த ஏமாற்றத்தை தவிர்க்க காலையில் வந்துவிட்டால் கூட்டம் சற்று குறைவாக இருக்கும் நேரத்தில் மரகதநடராஜர் தரிசனத்தை எவ்வித சிரமமும் இன்றி தரிசித்து விட்டு செல்லலாம்.

    வயதானவர்கள் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் காலையில் வந்து விடுவது சிறந்தது.

    • அவர் பெயர் ரத்தின சபாபதி. அவரையே ஆதிசிதம்பரேசர் என்று அழைக்கின்றனர்.
    • நடராஜர் சிலை 5 அடி உயரம் கொண்ட பச்சை மரகதக் கல்லால் ஆனது.

    உத்தர கோசமங்கையில் உள்ள நடராஜர் சிலை 5 அடி உயரம் கொண்ட பச்சை மரகதக் கல்லால் ஆனது.

    அவர் பெயர் ரத்தின சபாபதி. அவரையே ஆதிசிதம்பரேசர் என்று அழைக்கின்றனர்.

    ஒளி வெள்ளத்தில் இந்த சிலையைப் பார்க்கும்போது உயிர்ப்புடன் இருப்பது போல் தோன்றுவதை நாம் உணர முடியும்.

    அபூர்வமான இந்த விக்கிரகத்தில் மனித உடலில் உள்ளது போல் பச்சை நரம்புகள் இருப்பதைக் காணலாம். எனவே இந்த சிலை உலக அதிசயத்தில் ஒன்றாக உள்ளது.

    இந்த நடராஜர் விக்ரகம் மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒலி, ஒளி அதிர்வுகளை தாங்க இயலாத தன்மை கொண்டது.

    எனவே இந்த கோவிலில் மேளதாளங்கள் எதுவும் இசைக்கப்படுவதில்லை.

    எந்த விதத்திலும் விக்கிரம் சேதப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டு பாதுகாத்து வருகிறார்கள்.

    • ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல் பலமும் கூடும்.
    • கன்னிபெண்களுக்கு நல்ல இடத்தில் திருணம் கைகூடும்.

    இந்த ஆருத்ரா தரிசனத்தைக் காண தேவலோக தேவர்கள், ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள் ஆகியோர் உத்தரகோசமங்கைக்கு வருவார்கள்.

    இங்கு நடனம் புரியும் நடராஜனை தரிசனம் செய்தால், இப்பிறவியல் செய்த பாவங்கள் விலகி இன்பமான வாழ்வு அமைவதுடன், சுமங்கலிப் பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.

    கன்னிபெண்களுக்கு நல்ல இடத்தில் திருணம் கைகூடும்.

    ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல் பலமும் கூடும்.

    ஆருத்ரா தரிசனம் பன்மடங்கு பலன்களையும் நலன்களையும், வளங்களையும் வாரி வழங்கும் வழிபாடாக உள்ளது.

    அவரது ஐந்தொழில்களை ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் ஆகியவற்றை உணர்த்துவதாக அமையும் பொருட்டே இத்திருத்தலத்தில் பஞ்சகிருத்திய உற்சவம் நடந்து வருகிறது.

    உத்தரகோசமங்கை ஆதிசிதம்பரம் என்றும் பூலோக கைலாயம் என்றும் பூலோக சொற்கம் என்றும் உலகத்தில் முதல் தோன்றிய கோவில் என்ற பெருமை உண்டு.

    முக்தி கிடைக்க வழி செய்யும்.

    • சிவபெருமான் சிதம்பரத்தில் ஆடிய தாண்டவம் மூன்று.
    • உத்தர கோசமங்கையில் மட்டும் நான்கு தாண்டவம் முதல் தடவையாக ஆடி உள்ளார்.

    ஆதிசிதம்பரம் என்று அழைக்கப்படுகின்ற உத்தர கோசமங்கையில் மட்டும் நான்கு தாண்டவம் முதல் தடவையாக ஆடி உள்ளார்.

    அந்த நான்கு தாண்டவங்கள் வருமாறு:

    (1) ஆனந்த தாண்டவம்

    (2) சந்தியத் தாண்டவம்

    (3) சம்விஹார தாண்டவம்

    (4) ஊர்த்துவத் தாண்டவம் ஆகும்.

    அடுத்து சிவபெருமான் சிதம்பரத்தில் ஆடிய தாண்டவம் மூன்று.

    அவை

    (1) திரிபுரந்தர தாண்டவம்

    (2) புஜங்கத் தாண்டவம்

    (3) லலிதாத் தாண்டவம் ஆகும்.

    மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று ஈசனின் நடனத்தை காண்பது விசேஷம்.

    • பரந்தாமனின் முகத்தில் இன்று என்ன இவ்வளவு பிரகாசம் என்று சிவன் கேட்டார்.
    • சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருக்கிறார். அவற்றுள் 18 நடனங்கள் ஈசன் தனியாக ஆடியதாகும்.

    ஒரு தடவை திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மகாவிஷ்ணு திடீரென மகிழ்ச்சியில் திளைக்கத் தொடங்கினார்.

    அவர் முகத்தில் தென்பட்ட சந்தோஷமானது சித்திரை பவுர்ணமி நிலவைப் போன்று பளிச்சிட்டது.

    பரந்தாமனின் முகத்தில் இன்று என்ன இவ்வளவு பிரகாசம் என்று சிவன் கேட்டார்.

    அதற்கு மகாவிஷ்ணு உத்தரகோசமங்கை திருவாதிரை நாளன்று ஆடிய தங்களுடைய திருத்தாண்டவமே எனது மகிழ்ச்சிக்குக் காரணம் என்றார்.

    இதைக்கேட்டதும் திருமாலையே மகிழ்ச்சியில் திளைக்கச் செய்த அந்த நாட்டியத்தை, தான் ஆடிய நாட்டியத்தை தானே பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆசை சிவபெருமானுக்கு ஏற்பட்டது.

    எனவே ஈசன் பாதி மார்புக்குமேல் மனிதராகவும், மார்புக்குக் கீழ் பாதி பாம்பாகவும் மாறி பதஞ்சலி முனிவர் ஆனார்.

    ஈசன் ஆடிய திருநடனத்தை ஈசன் கண்டுகளித்த இடம்தான் ஆதிசிதம்பரம் என்ற உத்திரகோச மங்கையாகும்.

    சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருக்கிறார். அவற்றுள் 18 நடனங்கள் ஈசன் தனியாக ஆடியதாகும்.

    ஈஸ்வரியுடன் ஆடியது 36, விஷ்ணுவுடன் ஆடியது 9, முருகப்பெருமானுக்காக ஆடியது 3, தேவர்களுக்காக ஆடியது 42 ஆகும்.

    • பிரம்மா படைப்புத் தொழிலை துவக்க ஆணை பெற்று சென்ற திருத்தலம்.
    • வேத நாயகன் விநாயகப் பெருமானும் இவனது இளவல் செவ்வேளும் வந்து பூசித்த தலம்.

    பிரம்மா, விஷ்ணு, விஷ்ணு அவதார மூர்த்திகள், தருமன், காமன், அகத்தியர், கண்ணுவர், கவுடன்னியர், இலக்குமி, விசாலன், பார்க்கவி, கலைமகள் என பலர் பூசித்து முக்தி பெற்ற திருத்தலம், மயிலாடுதுறை.

    திலீபன், யோக வித்தமன், சிசன்மன், சயதுங்கன், தீர்த்த கங்கை, நாதசன்மன், அனவித்தை, கங்கை முதலியோரும் யானை, குதிரைகள், கரம், கழுகு, பாம்பு, நரி, குரங்கு, பூனை, கிளி என இவ்வுயிர்கள் அனைத்தும் மாயூரநாதேஸ்சுரரை வணங்கி வழிபட்டு முக்தி நிலை பெற்றார்கள் என்று புராணம் கூறுகிறது.

    சைவப் பெருமக்களின் நாயகர்களாகிய திருஞான சம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசுப் பெருமானும் இத்தலத்திற்கு வந்து வாழ்த்தி வணங்கி பேறு பெற்றிருக்கின்றார்கள் என்பது வரலாற்றுச் செய்தி.

    ஆயிரம் ஊரானாலும் மாயூரம் போலாகுமா? என்பார்கள். ஆக அந்த அளவிற்கு சிறப்பும் சீறும் பெற்ற திருத்தலம் மயிலாடுதுறை.

    பிரம்மா படைப்புத் தொழிலை துவக்க ஆணை பெற்று சென்ற திருத்தலம்.

    வேத நாயகன் விநாயகப் பெருமானும் இவனது இளவல் செவ்வேளும் வந்து பூசித்த தலம்.

    நந்திதேவர் சாபம் விலகிய தலம். திருமகளும் கலைமகளும் தொழுது நின்று பேறு பெற்ற திருத்தலம். கங்கை மகள் முத்தியடைந்த திருத்தலம்.

    ஐப்பசித் திங்கள் முதல் நாள் துலாக்காவேரி நீராடுவது தலை சிறந்தது.

    குடகின் குளத்திலே பிறந்த காவிரிப் பெண் அகண்ட காவிரியாக அகன்று ஏறத்தாழ 17.60 அடி அகலத்தில் பரந்து விரிந்து ஓடுவதைத் திருப்பாராய்ந்துறை என்ற திருத்தலத்திலே பார்க்க முடியும்.

    இத்தலத்தில் ஒவ்வொர் ஆண்டு ஐப்பசித் திங்கள் முதல் நாளன்று திருக்கோவிலிருந்து பராய்ந்துறை நாதரே அகண்ட காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்குவது இன்றைக்கும் வழக்காற்றில் உள்ளது.

    என்றாலும் குடகுநாட்டின் தலைக்காவிரியலே குளிப்பதை விட, அரங்கத்து அரவணையாக கோவிலுக்கும் மேற்கே அகண்ட காவிரியிலே (திருப்பராய்ந்துறை) குளிப்பதைவிட மாயூரத்திலே குளிப்பது சிறப்பு எனச் சொல்லுவார்கள் சிலர்.

    • இங்கு முற்றும் துறந்த ஞானியாகக் கோவணத்துடன் வருகை தந்தார்.
    • முடிவாக ஜீவ சமாதியாக கடற்கரை அருகில் சிவலிங்க வடிவாகவே ஆனார்.

    திருவொற்றியூரில் பட்டினத்தார் முக்தி

    "பட்டினத்தார் உலகையே துறந்தவர். அவரைபோல அனைத்தையும் துறந்தவர் பூவுலகில் யாரும் இல்லை" என்று தாயுமானவர் பாடியுள்ளார்.

    அத்தகைய பட்டினத்தார் முக்திபெற்ற இடம் திருவொற்றியூர்.

    இங்கு முற்றும் துறந்த ஞானியாகக் கோவணத்துடன் வருகை தந்தார்.

    பக்திரசம் சொட்டச் சொட்ட பல பாடல்கள் பாடினார்.

    திருவொற்றியூரில் தெருவில் நடந்து போனேன் காலடி மண்ணை நெற்றியில் திருநீறாக பூசினால் பிறவி நோய்க்கும் அருமுருந்தாகும் என்று பட்டினத்தார் பாடலில் கூறியுள்ளார்.

    பட்டினத்தார் இந்த ஊரில் மீனவச் சிறுவர்களுடன் விளையாடினார்.

    மணலைத் தோண்டி அதில் தன்னை புதைக்கச் செய்தார்.

    வேறு இடத்தில் இருந்து வெளியில் வந்தார்.

    இதுபோல 2 முறை செய்தார். 3வது முறையும் புதைத்த போது அவர் வெளியே வரவில்லை.

    தோண்டி பார்க்கும் போது இறைவனடி சேர்ந்து லிங்கமாக காட்சி தந்தார்.

    திருவொற்றியூர் இறைவனை பாடி அர்ச்சனை செய்ய ஏதுவாக 28 போற்றி பாடல்கள் பாடியுள்ளார்.

    முடிவாக ஜீவ சமாதியாக கடற்கரை அருகில் சிவலிங்க வடிவாகவே ஆனார்.

    இவரது சமாதிக் கோவில் திருவொற்றியூர் கடற்கரை சாலை அருகே இன்றும் உள்ளது.

    • சோழ நாட்டு திருவெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார்.
    • முதல் குலோத்துங்க சோழன் கி.பி. 12ம் நூற்றாண்டில் கம்பரை ராமாயணம் எழுத வேண்டினான்.

    ஒற்றியூரில் கம்பர் ராமாயணம் எழுதினார்

    சான்றோருடையது தொண்டை நன்னாடு என்பதால் கல்வியில் சிறந்த கம்பன், வடமொழி வான்மீகி ராமாயணத்தைக் கேட்டு, அதைக் தமிழில் மொழிபெயர்த்து எழுத சோழ நாட்டிலிருந்து, தொண்டை நாட்டிலுள்ள திருவொற்றியூர் வந்தார்.

    கவி சக்கரவர்த்தி உவச்சர் குலத்தைச் சேர்ந்தவர். இக்குலத்தை சேர்ந்தவர்களே ஸ்ரீ வட்டபாறை அம்மனை பூசித்து வந்தனர்.

    சோழ நாட்டு திருவெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார்.

    திருவொற்றியூரில் வடமொழி வான்மீகி ராமாயணத்தை கேட்டு அதைத் தமிழில் மொழிபெயர்த்து ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றினார்.

    இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுக்கள், புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    முதல் குலோத்துங்க சோழன் கி.பி. 12ம் நூற்றாண்டில் கம்பரை ராமாயணம் எழுத வேண்டினான்.

    வடமொழியில் இருந்த வால்மீகி ராமாயணத்தை கற்க கம்பர் திருவொற்றியூர் வந்தார்.

    திருவொற்றியூர் சதுரானை பண்டிதர் என்பவர் மடம் ஒன்றை நிறுவினார்.

    இவர் கேரள நாட்டினர்.

    பல கலைகளையும் பயின்றவர் என்று தமிழக வரலாற்றில் (பக்கம் 356) கல்வெட்டை ஆதாரமாகக் கொண்டு கூறுகிறது.

    இவரிடம் தான் பகல் எல்லாம் வடமொழி வான்மீகி ராமாயணத்தை கம்பர் கேட்டு, இரவு முழுவதும் அதைத் தமிழில் எழுதினார்.

    கம்பர் உவச்சர் குலத்தவர், காளி பக்தர், எனவே தினமும் வட்டபாறை காளியம்மனை வணங்கிய பிறகே ராமாயணத்தை எழுதுவார்.

    இரவில் தமிழில் பாட்ல எழுதும் போது வட்டபாறை நாச்சியார்,பெயர் வடிவில் வந்து ராமாயணம் எழுதும் கம்பனுக்குத் தீபந்தம் ஏந்தி நின்றதைக் கம்பரே பாடியுள்ளார்.

    ஒற்றியூர் காக்க உறைகின்றகாளியே

    வெற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை & பற்றியே

    நந்தாது எழுதற்கு நள்ளிரவில் மாணாக்கர்

    பிந்தாமல் பந்தம் பிடி

    தீப்பந்தம் ஏந்தி நின்று வட்டபாறை அம்மனே கம்பனின் தமிழுக்குத்தொண்டு செய்துள்ளதும், சதுரானை பண்டித மடத்தில் உள்ள ஒருபெண் மேல் கம்பன் அன்பு கொண்டு பாடியுள்ளதும் இங்கு அகச்சான்றுகளாய் உள்ளன.

    கம்பர், வான்மீகி ராமாயண வடமொழிகள் மூல படம் கேட்க ஒற்றியூர் சதுரானை மடம் வந்ததும், வட்டபாறையம்மன் அருளால் தமிழில் ராமாயணம் பாடியதும் தனிச்சிறப்புக்குரிய செய்தியாகும்.

    • இந்த தலவிருட்ச மரமாகிய அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் புரிந்து சிவனருள் பெற்றார்.
    • அடியார் பசித்திருக்க அன்னை பொறுப்பாளோ?

    அண்ணி வடிவில் வந்து ராமலிங்க வள்ளலார் அடிகளுக்கு சாதம் பரிமாறிய அன்னை

    ராமலிங்க அடிகள் தனது 12வது வயதிலிருந்து 35வது வயது வரை 24 ஆண்டுகள் இடைவிடாமல் இந்த ஒற்றியூர் இறைவனை வந்து வணங்கினார்.

    இந்த தலவிருட்ச மரமாகிய அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் புரிந்து சிவனருள் பெற்றார்.

    அவர் அருளிச் செய்த 6 திருமுறைகளில் 3 திருமுறைகள் முற்றிலும் திருவொற்றியூரின் மேன்மையை உணர்த்துகின்றன.

    ஆதிபுரிஸ்வரர் மீது எழுத்தறி பெருமான் மாலை என 31 பாடல்களையும், வடிவுடையம்மன் மீது ஸ்ரீ வடிவுடை மாணிக்க மாலை என 101 பாடல்களையும் பாடியுள்ளார்.

    ஸ்ரீ தியாகராஜ பெருமானது பவனி பற்றியும் சிறப்பாக பாடியுள்ளார்.

    திருவொற்றியூர் முருகன் கற்பூரம் ஏற்ற காசு இன்றி மிகவும் வருந்தி பாடியுள்ளார்.

    "அருமருந்தே தணிகாசலம் மேவும் ஆருயிரே

    திருமருங்கார் ஒற்றியூர் மேவிய நின் திருமுன்னதால்

    ஒருமருங்கு ஏற்ற என் செய்வேன்

    கற்பூர ஒளியினுக்கே" என்று வருந்தி பாடியுள்ளார்.

    அடியார் பசித்திருக்க அன்னை பொறுப்பாளோ?

    ஒருநாள் இரவு அன்னை ஸ்ரீ வடிவுடையாளை தரிசித்து கால்நோக நடந்து சென்று நள்ளிவு ஆனதால் வீட்டில் அண்ணியை எழுப்ப மனமின்றி பசியோடு வீட்டுத் திண்ணையில் ஸ்ரீ ராமலிங்க அடிகள் தூங்கச் சென்றார்.

    அண்ணி வடிவில் அன்னை ஸ்ரீ வடிவுடையாளே அவருக்கு சாதம் தந்து அருள் செய்தாள்.

    குழந்தையின் பசியை பொறுக்காது ஞானபால் தந்தவளாயிற்றே? அடியாரை பசிக்க விடுவாளோ? என்று ராமலிங்க அடிகளார் பாடுகிறார்.

    • “காதற்றஊசி வாராது காணும் கடை வழிக்கே” என்ற உண்மையை அந்த ஓலை உணர்த்தியது.
    • சிவனைத் தவிர எல்லா செல்வமும் பொய் என்ற ஞானம்பெற்றார்.

    திருவொற்றியூரில் சித்துக்கள் செய்த பட்டினத்தார்

    பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான பட்டினத்தார், திருவொற்றியூருக்கு வந்து திருவருள் பெற்று கடற்கரை ஓரத்தில் உயிரோடு ஜீவ சாமாதியான சித்தர்.

    காவிரிபூம்பட்டினத்தில் நகரத்துச் செட்டியார் மரபில் தோன்றியவர் திருவெகாடர், திருமணமான பின் மகப்பேறு இன்றி சிவனிடம் முறையிட்டதால் திருவிடைமருதூர் ஈசனே மருதவாணர் என்ற பெயரில் வளர்ப்பு மகனாக வந்தார், வளர்ந்தார், கடல் கடந்து வணிகம் செய்து திரும்பி வந்தார்.

    வறட்டிகளோடு ஒரு கிழிந்த ஓலையையும் தந்து மறைந்தார்.

    "காதற்றஊசி வாராது காணும் கடை வழிக்கே" என்ற உண்மையை அந்த ஓலை உணர்த்தியது.

    சிவனைத் தவிர எல்லா செல்வமும் பொய் என்ற ஞானம்பெற்றார்.

    செல்வம், மனைவி, உறவு யாவற்றையும் துண்டித்துக் கொண்டு துணையோடு துறவு பூண்டார்.

    கோவில் தோறும் இறைவனை வழிபட்டு தான் பெற்ற ஞானத்தை பாடினார்.

    சுவையற்றபேய்க் கரும்பு இனித்த இடமாகிய திருவொற்றியூர் தனக்கு முக்தி தரும் இடம் என இங்கு வந்து கடற்கரை அருகே சித்துக்கள் செய்தார்.

    • மறைமலை அடிகளார் வயிற்று வலி நோயினால் அதிக துன்பம் அடைந்தார்.
    • தமிழ் தெய்வம், முருகன் பாவலருக்கு உடல் நலத்தைத் தந்து நோயைத் தீர்த்தார்.

    மறைமலை அடிகளின் வயிற்றுவலியை தீர்த்த திருவொற்றியூர் முருகபெருமான்!

    தனித்தமிழ் அடிகளாய் விளங்கிய மறைமலை அடிகளார் வயிற்று வலி நோயினால் அதிக துன்பம் அடைந்தார்.

    சூலை நோயைத் தந்து திருநாவுக்கரசு ஆட்கொள்வது போல சிவன் இவருக்கு ஆற்றாத வயிற்று நோயைத் தந்தார்.

    தமக்கு உற்றநோய் நீங்குமாறு திருவொற்றியூரில் திருக்கோவில் கொண்டு, அருணகிரிக்கும், ராமலிங்கருக்கும் அருளிய முருகபெருமானை வேண்டி புதிருவொற்றி முருகர் மும்மணிக் கோவையை பாடினார்.

    தமிழ் தெய்வம், முருகன் பாவலருக்கு உடல் நலத்தைத் தந்து நோயைத் தீர்த்தார்.

    இம்முருக பெருமான் இன்றைக்கும் வேண்டுவோருக்கு வேண்டுவன ஈந்து அருள்பாலித்து வருகிறார்.

    ×