search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பும்ரா"

    • முழு உடல் தகுதியுடன் இருக்கும் பும்ரா வரும் ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து புறப்படும் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • இதே போன்று பிரசித் கிருஷ்ணாவும் 10 ஓவர்கள் பந்து வீசி 2 மெய்டன் உள்பட ஒரு விக்கெட் கைப்பற்றியிருக்கிறார்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா காயம் காரணமாக, ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பை, இலங்கைக்கு எதிரான தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் என்று எந்த தொடரிலும் இடம் பெறவில்லை. இதையடுத்து நீண்ட நாள் ஓய்விற்குப் பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை மேற்கொண்டார்.

    இந்நிலையில் கடந்த 21-ம் தேதி அன்று மருத்துவ அறிக்கையில் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் பயிற்சி விளையாட்டு போட்டிகளில் விளையாடுவார்கள். அந்த போட்டிகளை தேசிய கிரிக்கெட் அகாடமியே ஏற்பாடு செய்யும் என்று அறிவித்திருந்தது. அதன்படி நேற்று பயிற்சி போட்டி நடந்தது.

    இதில் ஜஸ்ப்ரித் பும்ரா மும்பை பேட்ஸ்மேனான அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு எதிராக பந்து வீசி அவரது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். கடந்த 2 வாரங்களாக பெங்களூருக்கு அருகில் உள்ள ஆலூரில் உள்ள கேஎஸ்சிஏ வளாகத்தில் மும்பை சீனியர் அணி தங்கியுள்ளது. அவர்களுடன் நடந்த போட்டியில் பும்ரா 10 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் கைப்பற்றியிருக்கிறார்.

    இதன் மூலமாக தற்போது முழு உடல் தகுதியுடன் இருக்கும் பும்ரா வரும் ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து புறப்படும் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதே போன்று பிரசித் கிருஷ்ணாவும் 10 ஓவர்கள் பந்து வீசி 2 மெய்டன் உள்பட ஒரு விக்கெட் கைப்பற்றியிருக்கிறார். 

    • உலக கோப்பை போட்டி அட்டவணையில் சில மாற்றங்கள் இருக்கும்.
    • இன்னும் 3 அல்லது 4 தினங்களில் மாற்றம் செய்யப்பட்ட அட்டவணை வெளியிடப்படும்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஆண்டு முதுகில் காயம் அடைந்தார். முதுகில் அழுத்தத்தினால் எலும்பு பகுதியில் முறிவு ஏற்பட்டது. இதற்காக அவர் கடந்த மார்ச் மாதம் ஆபரேசன் செய்து கொண்டார்.

    அதன்பிறகு காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சிகளை பும்ரா மேற்கொண்டு வருகிறார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் பயிற்சி பெற்று வருகிறார். அவர் முழுமையாக குணம் அடைந்துவிட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்தது.

    இதனால் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் பும்ரா விளையாட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அதேநேரத்தில் பும்ரா குறித்து ரோகித் சர்மா கூறும்போது அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் பும்ரா விளையாடுவாரா? என்பது தெரியவில்லை என்றார்.

    இந்த நிலையில் அயர்லாந்து தொடரில் பும்ரா விளையாடுவார் என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "பும்ரா முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். இதனால் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அவர் தேர்வு செய்யப்படுவார்" என்றார்.

    மேலும் அவர் கூறும் போது, "உலக கோப்பை போட்டி அட்டவணையில் சில மாற்றங்கள் இருக்கும். இன்னும் 3 அல்லது 4 தினங்களில் மாற்றம் செய்யப்பட்ட அட்டவணை வெளியிடப்படும்" என்றார்.

    வெஸ்ட்இண்டீஸ் தொடர் ஆகஸ்ட் 13-ந்தேதி முடிவடைகிறது. அதன்பிறகு இந்திய அணி அயர்லாந்து சென்று மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 18, 20 மற்றும் 23-ந்தேதிகளில் இந்த போட்டிகள் நடக்கிறது.

    பும்ரா கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ஆடினார். அவர் சர்வதேச போட்டியில் விளையாடி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகுகிறது.

    பும்ராவுடன் காயம் அடைந்த கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், பிரதீஷ் கிருஷ்ணா ஆகியோரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதி பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    • உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அணிக்கு அவர் திரும்புவார் என நாங்கள் நம்புகிறோம்.
    • தேசிய கிரிக்கெட் அகாடமியுடன் பும்ரா குறித்து பேசி வருகிறோம்.

    பார்படாஸ்:

    ரோகித் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதனையத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று பார்படாஸில் தொடங்குகிறது.

    இந்நிலையில் பும்ராவின் அனுபவம் அணிக்கு மிகவும் அவசியம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பும்ராவின் அனுபவம் அணிக்கு மிகவும் அவசியம். அவர் மோசமான காயத்திலிருந்து மீண்டுள்ளார். மேலும் அணி இன்னும் அறிவிக்கப்படாததால் அவர் அயர்லாந்திற்கு செல்வாரா என்பது எனக்கு தெரியாது. அவர் விளையாடினால் அது நல்லது.

    உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அணிக்கு அவர் திரும்புவார் என நாங்கள் நம்புகிறோம். ஒரு வீரர் காயத்திலிருந்து மீண்டு அணிக்குள் திரும்பும் போது போட்டி சார்ந்து சில விஷயங்கள் முக்கியம். அதை அவர் விஷயத்தில் கருத்தில் கொள்ள வேண்டும். தேசிய கிரிக்கெட் அகாடமியுடன் இது குறித்து பேசி வருகிறோம். இப்போதைக்கு அவர் குறித்து வரும் தகவல் அனைத்தும் பாசிட்டிவாக உள்ளது.

    என ரோகித் கூறினார்.

    • 20 ஓவர் உலக கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.
    • இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு அவரை கண்காணித்து வருகிறது.

    மும்பை:

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா. முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு அவர் சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை.

    கடைசியாக கடந்த செப்டம்பர் 25-ந் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த 20 ஓவர் போட்டியில் விளையாடினார்.

    பும்ரா இல்லாதது அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. 20 ஓவர் உலக கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்நிலையில் ஆபரேசனுக்கு பிறகு பும்ரா முழு குணமடைந்து வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு அவரை கண்காணித்து வருகிறது.

    இந்நிலையில் அயர்லாந்து தொடரில் பும்ரா விளையாடலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. முழு உடல் தகுதியை எட்டி வருவதால் அவர் அயர்லாந்து போட்டி யில் ஆடலாம்.

    இந்திய அணி ஆகஸ்டு மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

    இதேபோல விபத்தில் காயம் அடைந்த ரிஷப்பண்டும் குணமடைந்து உள்ளார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதேபோல விக்கெட் கீப்பிங் பயிற்சியும் மேற்கொண்டு உள்ளார். அவரது உடல் தகுதி தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருகிறது. இதேபோல காயத்தில் இருந்து குணமடைந்த கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே அயர்லாந்து தொடரில் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் கேப்ட னாக நியமிக்கப்படலாம் என்றும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    • பும்ரா, கடந்த 2016 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
    • கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார்.

    பெங்களூரு:

    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, தான் பயிற்சி மேற்கொள்ளும் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காயம் காரணமாக சுமார் ஓராண்டு காலமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    உடல்நலம் குணமாகி அவர் மீண்டு வருகிறார். இந்த சூழலில் அயர்லாந்து அணிக்கெதிராக இந்திய அணி விளையாடும் டி20 சர்வதேச போட்டிகளில் அவரை களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது. அது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்ற வேளையில் களத்தில் பயிற்சி மேற்கொள்ளும் படத்தை பும்ரா வெளியிட்டுள்ளார்.

    'கம்மிங் ஹோம்' என்ற பாடலை பின்னணியில் ஒலிக்க செய்து பயிற்சி மேற்கொள்வது போன்ற படங்களை அவர் வெளியிட்டுள்ளார். வரும் அக்டோபரில் இந்தியாவில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் அவர் விளையாடுவது இந்திய அணிக்கு பலம் சேர்க்கும்.

    29 வயதான பும்ரா, கடந்த 2016 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பிறகு முதுகு வலி காரணமாக அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை.

    • ஆசியக் கோப்பை 2022, டி20 உலகக் கோப்பை போன்ற தொடர்களில் பும்ரா பங்கேற்கவில்லை.
    • 16-வது ஐபிஎல் சீசனில் இருந்தும் அவர் விலகினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் முதுகுத் தண்டுவடப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. ஆசியக் கோப்பை 2022, டி20 உலகக் கோப்பை போன்ற தொடர்களில் பும்ரா பங்கேற்கவில்லை. 16-வது ஐபிஎல் சீசனில் இருந்தும் அவர் விலகினார்.

    பி.சி.சி.ஐ., மருத்துவக்குழுவின் அறிவுரையின் படி காயத்துக்காக கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் நியூஸிலாந்தில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மூன்று மாதங்கள் ஓய்வில் இருந்த பும்ரா, சமீபத்தில் 100 சதவீதம் உடற்தகுதியை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் தற்போது பந்துவீச்சு பயிற்சி மேற்கொண்டு வரும் பும்ரா, விரைவில் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளார்.


    மேலும் முழு உடல்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் பும்ரா அடுத்த மாதம் நடைபெற உள்ள அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் சேர்த்துக்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஏபிடி வில்லியர்ஸ் அறிமுகமானார்.
    • சில சமயங்களில் அடி வாங்கினாலும் ரஷித்கான் கம்பேக் கொடுக்கும் தன்மையை கொண்டவர்.

    தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

    அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அனைவரும் அழைக்கப்படுகிறார். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 19000-க்கும் மேற்பட்ட ரன்களையும் 47 சதங்களையும் குவித்துள்ளார்.

    இந்நிலையில் தனது கேரியரில் 3 பந்து வீச்சாளர்களை எதிர் கொள்ள கஷ்டப்பட்டதாக ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    2006-ல் முதல் முறையாக நான் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது ஷேன் வார்னே பெரிய சவாலை கொடுத்தார். குறிப்பாக நுணுக்கங்களை தாண்டி தம்முடைய பெயராலேயே அவர் பெரிய அச்சுறுத்தலை கொடுத்தார். மறுபுறம் அனுபவமின்றி இருந்த நான் அந்த சமயத்தில் அவரிடம் மிகவும் தடுமாறினேன்.அதன் பின் வயது அதிகரிக்கும் போது அனுபவமும் அதிகரித்தது.

    ஆனால் அதற்கு நிகராக பும்ரா போன்ற புதிய பவுலர்கள் மிகப் பெரிய சவாலை கொடுத்தனர். ஏனெனில் அதிக போட்டியை கொடுத்த அவர் எப்போதும் பின் வாங்காமல் உங்களது முகத்துக்கு நேராக சவாலை கொடுப்பார்.

    அதே போல் ரஷித் கான் எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமான ஒருவர். சில சமயங்களில் அடி வாங்கினாலும் அவரும் கம்பேக் கொடுக்கும் தன்மையை கொண்டவர்.

    அவர் ஓவரில் நான் ஒருமுறை 3 சிக்சர்களை அடித்தேன். ஆனால் அவர் அடுத்த பந்திலேயே என்னை அவுட்டாக்கினார். அந்த வகையில் அவர்களைப் போன்ற பவுலர்கள் நான் எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமாக உணர்ந்தேன். அதனால் அவர்கள் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது.

    என்று அவர் கூறினார்.

    • சமி, சிராஜ் ஆகியோருடன் பும்ரா இருந்தால் வேகப்பந்து வீச்சு கூட்டணி பலமாக இருக்கும்.
    • ஆஸ்திரேலிய பந்து வீச்சு கூட்டணி இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.

    ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

    2013-க்குப்பின் ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் இந்த போட்டி இந்திய ரசிகர்ளிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் சமி, சிராஜ் ஆகியோருடன் பும்ரா இருந்தால் வேகப்பந்து வீச்சு கூட்டணி பலமாக இருக்கும் என்றும் ஆஸ்திரேலிய பந்து வீச்சு கூட்டணி இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இரு அணிகளின் வேகப்பந்து வீச்சு கூட்டணியை பாருங்கள். அதில் யார் சிறந்ததை கொண்டிருக்கிறார்கள்? ஒருவேளை பும்ரா இருந்தால் ஷமி, சிராஜ் ஆகியோரை கொண்ட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி ஆஸ்திரேலியாவுக்கு சமமாக இருக்கிறது என்று நான் சொல்வேன். ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவை நீங்கள் பார்க்கும் போது ஹேசல்வுட் காயத்தால் வெளியேறினாலும் கமின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் இருக்கிறார்கள்.


    மேலும் ஹேசல்வுட்க்கு பதிலாக சேர்க்கப்பட்ட மைக்கேல் நீசர் சமீபத்திய கவுண்டி தொடரில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் ஸ்காட் போலாண்ட் தான் சிறப்பான புள்ளி விவரங்களை வைத்துள்ளார். குறிப்பாக சமீபத்திய ஆஸ்திரேலிய தொடர்களில் பிட்ச்சில் லேசான உதவி கிடைத்தால் அவர் மற்றவர்களை காட்டிலும் ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த பவுலராக செயல்படும் தன்மையை கொண்டதை நாம் பார்த்தோம். எனவே அவர் நிச்சயமாக ஹேசல்வுட் இடத்தை நிரப்புவார்.

    என்று ரவிசாஸ்திரி கூறினார்.

    • ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய பும்ராவுக்கு பதிலாக மாற்று வீரரை மும்பை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • ரூ.50 லட்சத்துக்கு அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மும்பை:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று தொடங்குகிறது. மே 28-ந்தேதி வரை நீடிக்கும் இந்த கிரிக்கெட் திருவிழா சென்னை, மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், டெல்லி உள்பட 12 நகரங்களில் நடத்தப்படுகிறது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும் மோதுகின்றன.


    இந்த நிலையில் காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மும்பை அணி வீரர் பும்ராவுக்கு பதிலாக மாற்று வீரரை மும்பை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி வேகப்பந்துவீச்சாளார் சந்தீப் வாரியர் மும்பை அணியில் இணைந்துள்ளார்.

    ரூ.50 லட்சத்துக்கு அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணி தனது தொடக்க ஆட்டத்தில் பெங்களுரு அணியுடன் வரும் 2-ம் தேதி மோதுகிறது.

    • மும்பை அணியின் முக்கியமான குறை என்று பார்த்தால் சுழற்பந்துவீச்சு தான்.
    • ஸ்பின் காம்பினேஷன் சரியாக அமையாதது போன்று உள்ளது.

    மும்பை:

    ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி முதல் அகமதாபாத்தில் தொடங்கவுள்ளது. இந்த முறை அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானங்களில் விளையாடலாம் எனக்கூறப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்தாண்டு மிகவும் மோசமானதாக அமைந்தது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட செல்லாமல் வெளியேறினர். எனவே இந்த முறை நிச்சயம் கம்பேக் தர வேண்டும் என முணைப்புடன் உள்ளனர்.

    ஆனால் மும்பையின் தூண்களாக பார்க்கப்படும் பொல்லார்ட் ஓய்வு பெற்றுவிட்டார். இதே போல வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் காயம் காரணமாக விளையாடமாட்டார்.

    இந்நிலையில் இதெல்லாம் பிரச்சினையே இல்லை என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் பேசியதாவது:-

    இந்தாண்டு ரோகித் சர்மா ஒரு ஸ்பெஷல் திட்டத்துடன் களமிறங்குவார் என நம்புகிறேன். அவரின் செயல்பாடுகள் நிச்சயம் கவனம் ஈர்க்கும். ரோகித்திற்கு உள்ள முக்கிய துருப்புச்சீட்டு ஜோஃப்ரா ஆர்ச்சர் தான். மும்பையின் பலமும் ஆர்ச்சர் என்று கூறலாம்.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிரடியாக விக்கெட்கள் எடுக்கும் திறமை அவரிடம் உள்ளது. இடையில் ரன்ரேட்டை குறைப்பதற்கும், டெத் ஓவர்களில் எதிரணியை கட்டுப்படுத்துவதற்கும் சிறப்பாக செயல்படுவார். மும்பை அணியின் முக்கியமான குறை என்று பார்த்தால் சுழற்பந்துவீச்சு தான். ஸ்பின் காம்பினேஷன் சரியாக அமையாதது போன்று உள்ளது.

    என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • ஐபிஎல் தொடரில் பும்ரா விளையாட மாட்டார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
    • ஜூன் மாதம் லண்டனில் நடக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பும்ரா விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக கடந்த ஆண்டு நடந்த பல்வேறு தொடர்களில் பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அந்த தொடரிலிருந்து விலகினார்.

    இதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பும்ரா தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த தொடரிலிருந்தும் நீக்கப்பட்டார். மேலும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரிலும் பும்ரா இடம் பெறவில்லை.

    இந்த நிலையில் வரும் மார்ச் 31-ம் தேதி தொடங்கும் 16-வது ஐபிஎல் சீசனில் ஜஸ்ப்ரித் பும்ரா பங்கேற்கமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பும்ராவிற்கு காயம் அதிகளவில் இருக்கும் நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட பிசிசிஐயின் மருத்துவக் குழு அவருக்கு அனுமதி வழங்கவில்லை.

    ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து வரும் ஜூன் மாதம் லண்டனில் நடக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பும்ரா விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது. பும்ராவிற்கு ஏற்பட்ட காயம் குணமடைய இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகும் நிலையில், அவர் நேரடியாக வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

    ஐபிஎல் தொடரில் பும்ரா விளையாட மாட்டார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    • நீங்கள் உடற்தகுதியுடன் இருக்கும்போது, நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்.
    • பும்ரா ஏதேனும் அசௌகரியத்தை உணர்ந்தால் பிசிசிஐ தலையிட்டு அவரை விடுவிக்க மாட்டோம் என்று உரிமையாளரிடம் தெரிவிக்கும்.

    ஜஸ்பிரித் பும்ரா நாட்டிற்காக விளையாடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுமையாகத் தகுதி பெற வேண்டுமானால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்தியன் பிரீமியர் லீக்கில் சில ஆட்டங்களைத் தவறவிட வேண்டும் என்று முன்னாள் இந்திய பேட்டர் ஆகாஷ் சோப்ரா கருதுகிறார்.

    முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா கடந்த செப்டம்பரில் இருந்து வெளியேறினார் மற்றும் 2022 டி20 உலகக் கோப்பையை தவறவிட்டார். பங்களாதேஷ், நியூசிலாந்து, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் இருந்து இந்தியாவுக்காக விளையாடவில்லை.

    இந்நிலையில் பும்ரா ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை என்றால் உலகம் அழிந்துவிடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நீங்கள் முதலில் இந்திய வீரர். பிறகு உங்கள் பிரான்சைஸிற்கு (franchise) விளையாடுங்கள். எனவே, பும்ரா ஏதேனும் அசௌகரியத்தை உணர்ந்தால் பிசிசிஐ தலையிட்டு அவரை விடுவிக்க மாட்டோம் என்று உரிமையாளரிடம் தெரிவிக்கும். அவர் ஜோஃப்ரா ஆர்ச்சருடன் ஏழு ஆட்டங்களில் விளையாடவில்லை என்றால் உலகம் அழிந்து விடாது.

    அதே நேரத்தில், நீங்கள் உடற்தகுதியுடன் இருக்கும்போது, நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். அது உங்களை ஆரோக்யத்துடன் வைத்திருக்கும்.

    என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.

    ×