search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலம்"

    • மணல் ஏற்றி கொண்டு லாரி சென்றதால் திடீரென பாலம் இடிந்து விழுந்தது.
    • 18 நாட்களில் இந்த பாலம் இடிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் சிராஜூதீன் நகர் பெரியசாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் வாய்க்காலான ஆதாம் வடிகால் வாய்க்கால் செல்கிறது.

    இந்த வாய்க்காலின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை இடித்து விட்டு புதிதாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் செலவில் புதிய தரைப்பாலம் கட்டப்பட்டது.

    இந்த பாலத்தின் வழியாக மணல் ஏற்றி கொண்டு லாரி சென்றதால் திடீரென பாலம் இடிந்து விழுந்தது.

    பாலம் கட்டப்பட்டு 18 நாட்களில் இந்த பாலம் இடிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அந்த பாலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.இந்தநிலையில் ஆதாம் வடிகால் வாய்க்கால் பாலம் புனரமைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், தேர்தல் தாசில்தார் ராமலிங்கம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
    • பழுதடைந்த ஆனந்தகாவேரி வாய்க்கால் பாலத்தை சீரமைத்து தர வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள விச்சனூர் படுகை கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை என்ற கூறி இன்று காலை பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்பாக காலிகுடங்களுடன் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    போராட்டத்திற்கு தமிழ்நாடு பொதுவுடமை இயக்கத்தின் கிளைச் செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார்.கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பொதுவுடமை இயக்கத்தின் நிர்வாகிகள் தேவதாஸ், வைத்தியநாதசுவாமி, முருகையன், ஜெயராஜ், திருநாவுக்கரசு, மணிகண்டன், விஜயகுமார், பகத்சிங் ஆகியோர் பேசினர்.

    மேலும் முறையாக குடிநீர் வழங்க வேண்டும், மேலும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், சாலை வசதியை மேம்படுத்தி வேண்டும், பழுதடைந்த ஆனந்தகாவேரி வாய்க்கால் பாலத்தை சீரமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பூதலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    இதனால் அங்கு பரபரப்பாக சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • மதுரை பறக்கும் பாலத்தில் பயணித்த வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
    • அனைத்து வாகனங்களும் பாலத்தில் சென்று வந்தன.

    மதுரை

    மதுரை தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை 7.3 கி.மீ நீளத்திற்கு ரூ.751 கோடி மதிப்பில் உயர்மட்ட நான்கு வழிச்சாலை (பறக்கும் பாலம்) அமைக்கப்பட்டது. தமிழகத்திலேயே மிகவும் நீளமான இந்த உயர்மட்ட சாலையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து மதுரை பறக்கும் பாலத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி பொங்க பாலத்தில் சென்றனர். பலர் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பிரதமர் மோடி பாலத்தை திறந்து வைத்ததும், பாலத்தில் செல்ல வந்த வாகன ஓட்டிகளை பா.ஜ.க.வினர் மலர்தூவி உற்சாகமாக வரவேற்றனர்.

    பின்பு பா.ஜ.க.வினரும் வாகங்களில் பறக்கும் பாலத்தில் சென்றனர். அவர்கள் தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை வாகனங்களில் அணிவகுத்து சென்றார்கள். உற்சாகம் பொங்க காணப்பட்ட அவர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

    இந்த பாலத்தில் வாகனத்தில் பயணித்தவர்கள் கூறுகையில், ''இந்த சாலையில் பயணிப்பது புதுவித அனுபவத்தை தருகிறது. இந்த பாலத்தால் வாகன ஓட்டிகளின் பயண நேரம் வெகுவாக குறையும். மதுரை மாநகரில் போக்குவரது நெருக்கடி குறையும்'' என்றனர்.

    பிரதமர் மோடி மதுரை பறக்கும் பாலம் மட்டுமின்றி மேலும் பல திட்டங்களையும் நேற்று தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து வடுகப்பட்டி பிரிவு வரையிலான ரூ.1,077 கோடி மதிப்பிலான 36 கி.மீ தூர நான்கு வழிச்சாலை திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

    மதுரையில் நடந்த பாலம் திறப்பு விழாவில் வாடிப்பட்டி முரளி ராமசாமி, பா.ஜ.க. ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் காந்தி குமாரி, விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், ஊடக பிரிவு கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில் என்கிற செல்வமாணிக்கம், புறநகர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மதுரை பறக்கும் பாலம் திறக்கப்பட்டதையடுத்து இன்று அங்கு வழக்கமான போக்குவரத்து தொடங்கியது. அனைத்து வாகனங்களும் பாலத்தில் சென்று வந்தன.

    • கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு மக்கள் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
    • மார்ச் மாதத்தில் பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் வெட்டாறு பாலம் பழுதடைந்த காரணத்தால், அதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    ஆனால் பணியில் ஏற்பட்ட தொய்வு காரணமாக நாகப்பட்டினம் நாகூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதனால் வெட்டாறு பாலத்தின் சீரமைப்புப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்நிலையில் வெட்டாறு பாலம் சீரமைப்புப் பணி யினை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது, பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும், மார்ச் மாதத்தில் பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    • மழை காலங்களில் தண்ணீர் பெருகி பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
    • 10 மீட்டர் அகலம், 63 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட பாலம் கட்ட ரூ. 6 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு.

    பேராவூரணி:

    பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலையில் ஆண்டவன்கோவில் பூனைகுத்தி காட்டாற்று பாலம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

    குறுகிய பாலமாக இருப்பதால் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து வாகனங்கள் செல்லும் நிலையில் உள்ளது.

    மழை காலங்களில் தண்ணீர் பெருகி பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.

    இதனால் பேராவூரணி தனித் தீவாக மாறிவிடுகிறது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    கடந்த ஆண்டு பெய்த கனமழையால் ஆண்டவன் கோவில், இந்திராநகர், கொன்றைக்காடு, காலகம், ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பேராவூரணி மருத்துவமனைக்கு வர முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    பலத்த மழையால் பாலம் சேதமடைந்து விரிசல்கள் ஏற்பட்டது.

    இதுகுறித்து பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று ஆய்வு குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்து உயர் மட்ட பாலம் கட்ட பரிந்துரை செய்தனர்.

    இதன் பேரில் தமிழ்நாடு அரசு 10 மீட்டர் அகலம் 63 மீட்டர் நீளம் கொண்ட உயர் மட்ட பாலம் கட்ட ரூபாய் 6 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    உயர்மட்ட பாலம் கட்டும் பணியை பேராவூரணி எம்.எல்.ஏ நா.அசோக்குமார் பூமிபூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சேதுபா வாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமா ணிக்கம், பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், திமுக ஒன்றிய செயலாளர்கள் பேராவூரணி தெற்கு க.அன்பழகன், பேராவூரணி வடக்கு கோ.இள ங்கோவன், சேதுபாவாசத்திரம் தெற்கு வை.ரவிச்சந்திரன், நகர செயலாளர் சேகர், ஒன்றிய குழு உறுப்பினர் குழ.செ.அருள்நம்பி, அப்துல் மஜீது, தஞ்சாவூர் நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் (திட்டங்கள்) சுதாகர், பேராவூரணி உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரன், உதவி பொறியாளர் அருண்கு மார் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.10 லட்சம் செலவில் கல்வெட்டு பாலம் கட்டப்பட்டது.
    • ரூ. 10.75 லட்சம் செலவில் கட்டப்பட்ட பகுதி நேர கூட்டுறவு அங்காடி கட்டிடம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வேம்பதேவன்காடு பகுதிலிருந்து அருகிலுள்ள பக்தர்குளம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் இணைப்பு சாலையில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட கல்வெட்டு பாலத்தையும், அதே பகுதியில் ரூ. 10.75 லட்சம் செலவில் கட்டப்பட்ட பகுதி நேர கூட்டுறவு அங்காடி கட்டிடத்தையும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், நகராட்சி கவுன்சிலர் நமசிவாயம், முன்னாள் கவுன்சிலர்கள் சுரேஷ்பாபு, ராஜகிளி, மாரியப்பன் உள்பட பிரமுகர்கள், கூட்டுறவு சங்க பொறுப்பாளர்கள், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

    • சேதமடைந்து தடுப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக தரைமட்ட பாலமாகவே உள்ளது.
    • வாகன ஓட்டிகள் கைபிடி சுவர் இல்லாததால் வாய்க்காலில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை -கும்பகோணம் பிரதான சாலையில் பாபநாசம் பகுதியில் உள்ள அன்னுகுடி பாசன வாய்க்கால், அன்னுகுடி பிரிவு வாய்க்கால் மீது கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவர் சேதமடைந்து தடுப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக தரைமட்ட பாலமாகவே உள்ளது. அதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள், கைபிடி சுவர் இல்லாததால் சில நேரங்களில் வாய்க்காலில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.

    ஆகையால் பொதுப்பணித்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தரைமட்ட நிலையில் உள்ள அன்னுகுடி, வாய்க்கால் மற்றும் பிரிவு வாய்க்கால் பாலத்தின் மீது தடுப்பு அமைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இணைப்பு ரோட்டில் குறுக்கிடும் மழை நீர் ஓடையில் மழை காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

    உடுமலை:

    உடுமலை ஒன்றியம் ஆலம்பாளையம் கிராமத்தில் இருந்து பள்ளபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொங்கலக்குறிச்சிக்கு 3 கி. மீ., தொலைவுக்கு இணைப்பு ரோடு அமைந்துள்ளது. பல்வேறு விளைபொருட்களை எடுத்துச்செல்ல இந்த ரோட்டை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த வழித்தடத்தில் பவளபுரம் என்ற குடியிருப்பு அமைந்துள்ளது . இந்த இணைப்பு ரோட்டில் குறுக்கிடும் மழை நீர் ஓடையில் மழை காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது இரு சக்கர வாகனங்கள் கடந்து செல்ல முடிவதில்லை. பல கிலோமீட்டர் தூரம் சுற்றி கொங்கலக்குறிச்சிக்கு செல்ல வேண்டியது உள்ளது. எனவே இப்பிரச்சினைக்கு தீர்வாக ஊரக வளர்ச்சி துறை சார்பில் பாலம் கட்ட வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

    • பழைமைவாய்ந்த கும்பக்குழி பாலம் இடிந்து சேதம் அடைந்தது
    • மாயனூர் காவிரி கரையில்

    கரூர்:

    கரூர் மாவட்டம் கிருஷ்ணாராயபுரம் ஒன்றியம், மாயனூர் காவிரி கரையில் கும்பக்குழி பாலம் கடந்த 1924-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக வரும் வாய்க்கால் தண்ணீரம், மாயனூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மழை பெய்து வரும் வடிகால் தண்ணீரும், இந்த கும்பக்குழி பாலத்தின் வழியாக சென்று காவிரியில் கலந்து வருகிறது. தற்போது புதிய பாலம் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே உள்ள பழமையான கும்பக்குழி பாலம் வழியாகத்தான் கீழ மாயனூர், மேல மாயனூர், கட்டளை, ரங்கநாதபுரம், மேளக்கட்டளை, கீழ கட்டளை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பொது மக்கள் சென்று வருகின்றனர்.

    மேலும் இந்த பகுதியின் வழியாக பஸ் போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. இதனால் பழைமைவாய்ந்த கும்பக்குழி பாலம் நாளுக்க நாள் வலுவிழுந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதில் போக்குவரத்து தடைப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நீர்வள துறையினர் தற்காலிகமாக பாலத்தை சரி செய்யும் பணிகளை தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக பாலத்தின் கீழ் மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைக்கும் பணி முடிய சுமார் 4 நாட்கள் ஆகும் என தெரிய வருகிறது. பணிகள் முடிந்தவுடன் அப்பகுதி வழியாக விவசாய பொருட்கள் கொண்டு செல்ல இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும், கனரக வாகனங்கள் செல்லதடை விதிக்கப்படுமு என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடற்கரையோர மீனவ கிராமங்களின் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் இந்த பாலம் கட்டும் பணி தொடர்ந்து நடைபெறாமல் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.
    • பாலம் கட்டும் பணி 20 சதவீதம் கூட முடியாத நிலையில் பல்வேறு காரணங்களால் ஒரு சில மாதங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவ ட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன் குளம் கிராமத்திலிருந்து கொட்டாய் மேடு, ஓலகொட்டாய்மேடு, மடவா மேடு, பழையாறு மீன்பிடி துறைமுகம், புதுப்பட்டினம், கூழையாறு, திருமுல்லைவாசல் உள்ளி ட்ட கடலோர மீனவ கிராமங்களுக்கு செல்லும் வகையில் கடற்கரை ஓரசாலையை இணைக்கும் வகையில் சாலை அமைந்துள்ளது.

    தாண்டவன்குளம் கிராமத்திலிருந்து கடற்கரை ஓர சாலைக்கு செல்லும் இந்த சாலையின் குறுக்கே பக்கிங்காம் கால்வாய் சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்த சாலையின் நடுவே பக்கிகாம் கால்வாய் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது.

    இதற்கு பதிலாக பழைய பாலத்தை இடித்து அகற்றிவிட்டு, புதியதாக நபார்டு திட்டத்தின் மூலம் ரூ3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் கட்டும் பணி கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கியது.

    ஆனால் பாலம் கட்டும் பணி 20 சதவீதம் கூட முடியாத நிலையில் பல்வேறு காரணங்களால் ஒரு சில மாதங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதுவரை அந்தப் பாலத்தை தொடர்ந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்காததால், தாண்ட வன்குளம் கிராமத்திலிருந்து கடற்கரையோர சாலையில் அமைந்துள்ள கிராம ங்களுக்கு தினந்தோறும் சென்று வரும் பள்ளி மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இதனால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். கடற்கரையோர மீனவ கிராமங்களின் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் இந்த பாலம் கட்டும் பணி தொடர்ந்து நடைபெறாமல் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்தப் பாலம் கட்டும் பணி துவங்கிய போது புதியதாக தற்காலிக இணைப்பு சாலை அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த இணைப்புச் சாலையின் வழியாகத்தான் தொடர்ந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இரு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை சிரமத்துடன் இந்த வழியை கடந்து தான் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பக்கிங் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தொடர்ந்து சாலையை மூழ்கடித்தது.

    இதனால் இந்த சாலை வழியே சென்று வர முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. கடலோர கிராம மக்கள் கொள்ளிடம், சீர்காழி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து சென்றவர்கள் வேறு வழியை பின்பற்றி வந்தனர்.

    இதுகுறித்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததன் பேரில் நேற்று தற்காலிக இணைப்புச் சாலையை நூற்றுக்கணக்கான பணியாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கொட்டாய்மேடு பகுதியில் உள்ள கிராம மக்கள் கூறுகையில், கடந்த சில டா வருடங்களாக இந்தப் பாலம் கட்டும் பணி நடைபெறாமல் உள்ளது.

    இதனால் கடலோர கிராம மக்கள் மிகுந்த சிரம் அடைந்து வருகின்றனர்.

    இந்தப் பாலம் கட்டும்பணி நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.உடனடியாக அதிகாரிகள் இதனை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பாலத்தை உடனடியாக கட்டி முடித்து, சாலையை மேம்படுத்தி போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சத்து 9 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தூத்தூர் ஊராட்சியில் உள்ள இரவிபுத்தன்துறை பிரேயர் சென்டர் செல்லும் சாலையையும், கே.ஆர்.புரம் - பூந்தோப்பு காலனி செல்லும் சாலையையும் இணைக்கும் விதமாக ஏ.வி.எம்.கால்வாயின் குறுக்கே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று பகுதி மக்கள் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதனையடுத்து ஏ.வி.எம். கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று அவர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அரசு முதன்மை செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் மற்றும் குமரி மாவட்ட கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். இதன் அடிப்படையில் புதிய பாலம் அமைக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சத்து 9 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து ஏ.வி.எம். கால்வாயின் குறுக்கே புதியபாலம் அமைக்கும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் இரவிபுத்தன்துறை ஆலய அருட்பணி யாளர் ரெஜீஷ் பாபு, கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உடுமலை வழியாக திண்டுக்கல் வரை நான்கு வழிச்சாலை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
    • 2 ரெயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டிருந்தது.

    உடுமலை :

    மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தில் பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக திண்டுக்கல் வரை நான்கு வழிச்சாலை திட்டம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த நான்கு வழிச்சாலையில் பழநி, சண்முகநதி, அமராவதி ஆறுகளின் குறுக்கே உயர் மட்ட பாலங்கள், 2 ெரயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டிருந்தது.தற்போது உடுமலை-செஞ்சேரிமலை ரோடு மற்றும் உடுமலை-பல்லடம் மாநில நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையில், குறுக்கிடும் பகுதியில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி தீவிரமடைந்துள்ளது.இதில் செஞ்சேரிமலை ரோட்டில் பாலம் கட்டுமான பணிகளின் போது, போக்குவரத்து பாதிக்காமல் இருக்க தற்காலிக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், ஒரு பகுதியில், பாலம் கட்டுமான பணிகள் தீவிரமடைந்துள்ளது. மறு பகுதியில் பணிகள் இன்னும் துவங்கவில்லை.முக்கிய ரோடுகளின் குறுக்கிடும் பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற பிறகு ஆறுகளின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் துவங்க வாய்ப்புள்ளது.

    ×