search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kollidham"

    • கரையோரங்களில் மீனவர்கள் நேற்று அதிகாலை மீன்பிடிக்க சென்றனர்.
    • புத்தர் சிலை பழங்காலத்தில் செய்யப்பட்டது போல் உள்ளது.

    கபிஸ்தலம்:

    பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே சத்தியமங்கலம் ஊராட்சி, வாழ்க்கை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை மீன்பிடிக்க சென்றனர்.

    அப்போது ஆற்றின் நடுவில் மணல் திட்டு பகுதியில் கருங்கல்லிலான பழங்கால புத்தர் சிலை இருந்ததை கண்டு வியந்தனர். உடனடியாக, அந்த சிலையை மீனவர்கள் மீட்டனர்.

    சிலையின் உயரம் 4 அடி ஆகும். இந்த புத்தர் சிலை பழங்காலத்தில் செய்யப்பட்டது போல் உள்ளது.

    இதனை கண்ட மீனவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் ஊராட்சி தலைவர் செல்வராஜிடம் தெரிவித்தனர்.

    அதன்பேரில், சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மனோகரன், கபிஸ்தலம் வருவாய் ஆய்வாளர் ராஜதேவி, பாபநாசம் தாசில்தார் பூங்கொடி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சிலையை பார்வையிட்டனர்.

    பின்னர், அதிகாரிகள் புத்தர் சிலையை கைப்பற்றி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

    மேலும், இந்த சிலை எங்கிருந்து வந்தது? கொள்ளிட ஆற்றின் மணல் பகுதியிலேயே இருந்ததா? என பல்வேறு கோணங்களில் கபிஸ்தலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடற்கரையோர மீனவ கிராமங்களின் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் இந்த பாலம் கட்டும் பணி தொடர்ந்து நடைபெறாமல் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.
    • பாலம் கட்டும் பணி 20 சதவீதம் கூட முடியாத நிலையில் பல்வேறு காரணங்களால் ஒரு சில மாதங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவ ட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன் குளம் கிராமத்திலிருந்து கொட்டாய் மேடு, ஓலகொட்டாய்மேடு, மடவா மேடு, பழையாறு மீன்பிடி துறைமுகம், புதுப்பட்டினம், கூழையாறு, திருமுல்லைவாசல் உள்ளி ட்ட கடலோர மீனவ கிராமங்களுக்கு செல்லும் வகையில் கடற்கரை ஓரசாலையை இணைக்கும் வகையில் சாலை அமைந்துள்ளது.

    தாண்டவன்குளம் கிராமத்திலிருந்து கடற்கரை ஓர சாலைக்கு செல்லும் இந்த சாலையின் குறுக்கே பக்கிங்காம் கால்வாய் சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்த சாலையின் நடுவே பக்கிகாம் கால்வாய் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது.

    இதற்கு பதிலாக பழைய பாலத்தை இடித்து அகற்றிவிட்டு, புதியதாக நபார்டு திட்டத்தின் மூலம் ரூ3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் கட்டும் பணி கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கியது.

    ஆனால் பாலம் கட்டும் பணி 20 சதவீதம் கூட முடியாத நிலையில் பல்வேறு காரணங்களால் ஒரு சில மாதங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதுவரை அந்தப் பாலத்தை தொடர்ந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்காததால், தாண்ட வன்குளம் கிராமத்திலிருந்து கடற்கரையோர சாலையில் அமைந்துள்ள கிராம ங்களுக்கு தினந்தோறும் சென்று வரும் பள்ளி மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இதனால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். கடற்கரையோர மீனவ கிராமங்களின் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் இந்த பாலம் கட்டும் பணி தொடர்ந்து நடைபெறாமல் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்தப் பாலம் கட்டும் பணி துவங்கிய போது புதியதாக தற்காலிக இணைப்பு சாலை அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த இணைப்புச் சாலையின் வழியாகத்தான் தொடர்ந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இரு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை சிரமத்துடன் இந்த வழியை கடந்து தான் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பக்கிங் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தொடர்ந்து சாலையை மூழ்கடித்தது.

    இதனால் இந்த சாலை வழியே சென்று வர முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. கடலோர கிராம மக்கள் கொள்ளிடம், சீர்காழி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து சென்றவர்கள் வேறு வழியை பின்பற்றி வந்தனர்.

    இதுகுறித்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததன் பேரில் நேற்று தற்காலிக இணைப்புச் சாலையை நூற்றுக்கணக்கான பணியாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கொட்டாய்மேடு பகுதியில் உள்ள கிராம மக்கள் கூறுகையில், கடந்த சில டா வருடங்களாக இந்தப் பாலம் கட்டும் பணி நடைபெறாமல் உள்ளது.

    இதனால் கடலோர கிராம மக்கள் மிகுந்த சிரம் அடைந்து வருகின்றனர்.

    இந்தப் பாலம் கட்டும்பணி நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.உடனடியாக அதிகாரிகள் இதனை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பாலத்தை உடனடியாக கட்டி முடித்து, சாலையை மேம்படுத்தி போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    ×