தடுப்புச்சுவர் இன்றி காணப்படும் வாய்க்கால் பாலங்கள்

சேதமடைந்து தடுப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக தரைமட்ட பாலமாகவே உள்ளது.வாகன ஓட்டிகள் கைபிடி சுவர் இல்லாததால் வாய்க்காலில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.
தடுப்புச்சுவர் இல்லாமல் காணப்படும் அன்னுகுடி பிரிவு வாய்க்கால் பாலம்.
தடுப்புச்சுவர் இல்லாமல் காணப்படும் அன்னுகுடி பிரிவு வாய்க்கால் பாலம்.
Published on

மெலட்டூர்:

தஞ்சை -கும்பகோணம் பிரதான சாலையில் பாபநாசம் பகுதியில் உள்ள அன்னுகுடி பாசன வாய்க்கால், அன்னுகுடி பிரிவு வாய்க்கால் மீது கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவர் சேதமடைந்து தடுப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக தரைமட்ட பாலமாகவே உள்ளது. அதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள், கைபிடி சுவர் இல்லாததால் சில நேரங்களில் வாய்க்காலில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.

ஆகையால் பொதுப்பணித்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தரைமட்ட நிலையில் உள்ள அன்னுகுடி, வாய்க்கால் மற்றும் பிரிவு வாய்க்கால் பாலத்தின் மீது தடுப்பு அமைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com