search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்காடி"

    • குமாரநத்தம் கிராமத்தில் நல்ல குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • திருநகரி ஆகிய பகுதிகளில் சுடுகாட்டு சாலை மற்றும் கொட்டகை அமைக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் தலைவர் கமலஜோதிதேவேந்திரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் உஷாநந்தினி, ஆணையர்கள் சரவணன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். எழுத்தர் சரத் தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு :-

    துர்காமதி : மருதங்குடி ஊராட்சி குமாரநத்தம் கிராமத்தில் நல்ல குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆணையர் சரவணன்: குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப் படும். ஏற்கனவே 84 ஆயிரம் செலவில் அப்பகுதியல் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து வழங்கப்பட்டு வந்தது.

    விஜயகுமார்: தில்லைவிடங்கன், புதுதுறை, வெள்ளபள்ளம் ஆகிய பகுதிகளில் குடிதண்ணீர் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர். வாரம் ஒரு முறை மட்டுமே புதுத்துறை பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

    ரிமா: அகணி ஊராட்சியில் வி.ஏ.ஓ அலுவலகம், பகுதி நேர அங்காடிக்கு புதிய கட்டடம் அமைக்க வேண்டும்.

    ஜான்சிராணி: நகராட்சி கவுன்சிலர்களுக்கு அரசின் மதிப்பூதியம் வழங்கப்படுவது போல் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும். இது தொடர்பாக மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசின் கவனத்திற்கு அனுப்ப வேண்டும்.

    ஆனந்தி: கவுன்சிலர்கள் மன்றத்தில் தெரிவிக்கும் கோரிக்கைகளை பதிவு செய்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நடராஜ்: நெப்பத்தூர், திருநகரி ஆகிய பகுதிகளில் சுடுகாட்டு சாலை மற்றும் கொட்டகை அமைக்க வேண்டும்.

    வள்ளி: பெருந்தோட்டம் ஊராட்சியில் நாயக்கர்குப்பம், மடத்துக்குப்பம் ஆகிய பகுதிகளில் புதிய போர் அமைத்து நல்ல குடிதண்ணீர் வழங்க வேண்டும்.

    இதற்கு பதில் அளித்து தலைவர் கமலஜோதி தேவேந்திரன் பேசும்போது,

    கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அந்தந்த துறைகளின் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் செய்யப்படும் பணிகள் குறைபாடுகள் இன்றி துரிதமாக நடைபெற்று வருகிறது . கவுன்சிலர்கள் கேட்கும் பணிகள் ஒவ்வொன்றாக பொது நிதிக்கு ஏற்றவாறு செய்து தரப்படும் என்றார்.

    • ெபரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பனை-காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி திறக்கப்பட்டது
    • அங்காடியினை கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம்-கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடியின் திறப்பு விழா நேற்று நடந்தது. அங்காடியினை கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் கற்பகம் பேசுகையில், இந்த அங்காடியில் பனங்கற்கண்டு, பனங்கற்கண்டு மிட்டாய், பனம்பழ சாறு, சுக்கு காபி, பனை ஓலை பொருட்கள், சுக்கு காபி தூள், பனங்கிழங்கு பொடி, பதநீர், பனங்கருப்பட்டி, கதர் பொருட்கள், காதி சோப்பு வகைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    உடலுக்கு ஆரோக்கியம் தரும் இயற்கையாக விளையும் பனை பொருட்களை கொண்டு, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி இந்த அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இப்பொருட்களை வாங்கி பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார். இதில் கதர் கிராம தொழில் வாரிய உதவி இயக்குனர் (திருச்சி) ரவிக்குமார், கண்காணிப்பாளர் மணிகண்டன், புதுக்கோட்டை மண்டல திட்ட அலுவலர் ஆறுமுகம், தாசில்தார் கிருஷ்ணராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.10 லட்சம் செலவில் கல்வெட்டு பாலம் கட்டப்பட்டது.
    • ரூ. 10.75 லட்சம் செலவில் கட்டப்பட்ட பகுதி நேர கூட்டுறவு அங்காடி கட்டிடம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வேம்பதேவன்காடு பகுதிலிருந்து அருகிலுள்ள பக்தர்குளம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் இணைப்பு சாலையில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட கல்வெட்டு பாலத்தையும், அதே பகுதியில் ரூ. 10.75 லட்சம் செலவில் கட்டப்பட்ட பகுதி நேர கூட்டுறவு அங்காடி கட்டிடத்தையும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், நகராட்சி கவுன்சிலர் நமசிவாயம், முன்னாள் கவுன்சிலர்கள் சுரேஷ்பாபு, ராஜகிளி, மாரியப்பன் உள்பட பிரமுகர்கள், கூட்டுறவு சங்க பொறுப்பாளர்கள், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

    • மைக்ரோ ஏ.டி.எம். மூலம் பெருவிரல் ரேகை கொண்டு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதை பார்வையிட்டார்.
    • விவசாய கடனாக கறவை மாடு வாங்க 4 பேருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் 17 மகளிர் குழுக்களுக்கு ரூ.46 லட்சம் கடன் உதவியை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

    தஞ்சை சிந்தாமணி நியாயவிலைக்கடையில் வினியோகம் செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்தும், விற்பனை முனைய கருவியின் செயல்பாடு குறித்தும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளருமான ராதாகிரு ஷ்ணன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர், மத்திய கூட்டுறவு வங்கியின் மருத்துவக் கல்லூரிகிளை மற்றும் மகளிர் கிளையில் உள்ள வங்கியியல் வசதி கொண்ட வாகனத்தில் வாடிக்கையாளர்களுக்கு மைக்ரோ ஏ.டி.எம். மூலம் பெருவிரல் ரேகை கொண்டு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதை பார்வையி ட்டார்.

    மேலும் வங்கி கிளையில் 17 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.46 லட்சத்து 40 ஆயிரத்தையும், மத்திய கால விவசாய கடனாக கறவை மாடு வாங்க 4 பேருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தையும் வழங்கினார்.

    இேத போல் நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி சார்பில் 3 பேருக்கும் மாற்றுத் திறனாளிகள் 3 பேருக்கும் கடனுதவி வழங்கப்பட்டது.

    அதன் பிறகு தஞ்சை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சென்ற முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அங்கு செயல்படும் சுயசேவை பிரிவு பல்பொருள் அங்காடி, எழுது பொருள் அங்காடி பண்ணை பசுமை காய்கறி விற்பனை கூட்டுறவு மருந்தகம் ஆகியவற்றை பார்வயைிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, கூட்டு றவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, நுகர் பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஷ்வரி தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் பழனீஸ்வரி உள்பட கூட்டுறவு த்துறை அதிகாரிகள், வருவா ய்த்துறை அதிகாரிகள், நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • இதன் மூலம் 125 குழு உறுப்பினர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.
    • சுற்றுலா பயணிகள் எளிதில் பொருள்களை வாங்க ஏதுவாக கல்லணையில் ஒரு மதி விற்பனை அங்காடி அமைத்திட முடிவு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு சிறந்த ஒரு விற்பனை வாய்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு தஞ்சை தாரகைகள் கைவினை பொருட்கள் அங்காடி என்ற சிறப்பு அடையாளத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கூடுதல் விற்பனை வாய்ப்பும் கூடுதல் வருவாயும் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரும் வகையில் ஓர் இலக்குடன் உருவாக்கப்படுகிறது.

    ஏற்கனவே தஞ்சாவூர் மாநகராட்சியில் பூ மாலை வணிக வளாகத்தில் தஞ்சை தாரகைகள் கைவினை பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டது. இதன் மூலம் 35 மகளிர் சுயஉதவி குழுக்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு இதன் மூலம் 125 குழு உறுப்பினர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.

    அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கல்லணை அணைப்பகுதியில் மகளிர் கய உதவிக்குழுவினர் தயார் செய்யும் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திடவும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எளிதில் பொருள்களை வாங்க ஏதுவாக கல்லணையில் ஒரு மதி விற்பனை அங்காடி அமைத்திட முடிவு செய்யப்பட்டது.

    அந்த அங்காடியினை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் இன்று மதியம் திறந்து வைத்தார்.

    இந்த அங்காடியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருட்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகன், நடமாடும் பொம்மைகள், பொய்கால் குதிரைகள் கால் மிதியடி பொம்மை வகைகள் பைகள் மூங்கில் கூடைகள், பனைப்பொருட்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    இந்திகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்ட இயக்குநர்லோகேஸ்வரி, செயற்பொறியாளர், உதவி திட்ட அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகளிர் திட்ட களப்பணியார்கள், மகளிர் சுய உதவிக்கு உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

    • கிராம கூட்டுறவு அங்காடி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான மூலப்பொருள்களும் வைக்கப்பட்டுள்ளது.
    • கிராம கூட்டுறவு அங்காடி கட்ட வேண்டும் என்று கூறி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் பழுதடைந்த கட்டிடத்தில் கிராம கூட்டுறவு அங்காடி இயங்கி வந்தது இதனை அடுத்து ஊராட்சி மன்றத்தால் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒரு பொதுவான இடத்தில் கிராம கூட்டுறவு அங்காடி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான மூலப்பொருள்களும் வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் ஒரு சிலர் அந்த இடத்தில் கட்டுவதற்கு ஆட்சபனை தெரிவித்து வேறு ஒரு இடத்தில் கட்டுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்து அதற்கான முயற்சிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது இதனை அடுத்து பொதுமக்கள் சார்பாக ஊராட்சி எந்த இடத்தில் அனுமதி வழங்கி மூலப்பொருள் வைக்கப்பட்டுள்ளதோ அந்த இடத்திலேயே கிராம கூட்டுறவு அங்காடி கட்ட வேண்டும் என்று கூறி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்திற்கு கோவிந்தன் தலைமை தாங்கினார்.

    வேதாரத்தினம், பன்னீர்செல்வம், செந்தில்நாதன், பாலசுப்ரமணியம், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அரங்கநாதன் வரவேற்றார். இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள்,பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊராட்சி மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றி அனுமதி தந்த இடத்தில் கிராம கூட்டுறவு அங்காடி கட்ட வேண்டும் என கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்பு வேதாரண்யம் கோட்டாட்சியர்ஜெயராஜ பெளலின் பேச்சுவார்த்தை நடத்தியதில் உண்ணாவிரம் மாலைமுடித்து கொள்ளபட்டது.

    ×