search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா"

    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்ட விரோதமான அமைப்பு என்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு அறிவித்தது.
    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு இந்தியாவில் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

    மதுரை:

    கடந்த வாரம் நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை மேற்கொண்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சோதனையின்போது அந்த அமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இந்த சம்பவத்தை தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சுகளும் நடந்தன.

    இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்ட விரோதமான அமைப்பு என்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு அறிவித்தது. மேலும் இந்த அமைப்புக்கு இந்தியாவில் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதனுடன் செயல்பட்ட 8 அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

    இந்த தடை காரணமாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி மதுரையில் பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலையம், கோரிப்பாளையம், காஜிமார் தெரு, தெற்குவாசல், யானைக்கல் அண்ணாசிலை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் 100-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    சில இடங்களில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம், மறியல் போன்றவை நடத்தக்கூடாது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால் உபா சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை
    • மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு

    வேலூர்:

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவில் 5 ஆண்டுகள் செயல்பட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் சாலை சந்திப்புகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் அதற்கு ஆதரவாக யாரும் பேசக்கூடாது‌. அவ்வாறு நடந்து கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    இதே போல திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பஸ் நிலையம் ரெயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இன்று காலை முதல் இந்த மாவட்டங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பாஜக கட்சி அலுவலகங்கள் பாஜக இந்து முன்னணி பிரமுகர்கள் வீடுகளிலும் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறையும் இணைந்து சோதனை நடத்தின.
    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் popularfrontofindia.org என்ற இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது.

    பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி முகாம்களை நடத்தியதாக பி.எப்.ஐ.க்கு (பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா) எதிரான வழக்கு தொடர்பாக தெலங்கானா, ஆந்திரா, உள்பட நாடு முழுவதும் தேசிய புலனாய்வு நிறுவனம் கடந்த 22ந் தேதி சோதனையில் ஈடுபட்டது.

    தமிழகத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டன. 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறையும் இணைந்து சோதனை நடத்தின.

    இந்த சோதனைகளின்போது பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன. மேலும் அந்த அமைப்பைச் சேர்ந்த மொத்தம் 247 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பி.எப்.ஐ.(பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா) அமைப்பு இந்தியாவில் செயல்பட ஐந்து ஆண்டு காலம் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. உடனடியாக அமலுக்கு வரும் இந்த தடை உத்தரவு அதன் துணை அமைப்புகளுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் popularfrontofindia.org என்ற இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது.

    பிஎஃப்ஐயின் டுவிட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளையும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோதமான என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    • டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசாரிடம் நிர்வாகிகள் எங்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகியை எந்தவித ஆதாரமும் இன்றி போலீசார் பிடித்து விசாரணைக்காக வைத்துள்ளனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி எஸ்.ஆர்.டி.நகர் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். பா.ஜ.க பிரமுகர். இவர் புஞ்சை புளியம்பட்டியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 24-ந்தேதி இவருக்கு சொந்தமான கார் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் மர்மநபர்கள் இவரது காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தும், சம்பவ இடத்திலிருந்து அழைக்கப்பட்ட செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தும் காருக்கு தீ வைத்த மர்மநபர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் புளியம்பட்டி சேரன் வீதியை சேர்ந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் உறுப்பினர் கமருதீன் (31) என்பவரை புளியம்பட்டி போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து தகவல் பரவியதால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் புளியம்பட்டி போலீஸ் நிலையம் முன்பு நேற்று மாலை திரண்டனர். தங்கள் அமைப்பு உறுப்பினரை எவ்வித ஆதாரமும் இன்றி பிடித்து போலீசார் விசாரிப்பதாக கூறி போலீஸ் நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டனர்.

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதேபோல் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் நேற்று இரவு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட திரண்டு வந்தனர்.

    அப்போது டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரிடம் நிர்வாகிகள் எங்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகியை எந்தவித ஆதாரமும் இன்றி போலீசார் பிடித்து விசாரணைக்காக வைத்துள்ளனர்.

    அவரை உடனடியாக வெளியே விட வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். அதற்கு போலீசார் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி முடிவு செய்யப்படும் என்றனர். இதனை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இதற்கிடையே கமருதீனிடம் பு.புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.

    • சென்னை மாநகரில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர்.
    • புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் முன்பு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து தற்போது அந்த இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். புரசைவாக்கத்தில் உள்ள அந்த அமைப்பின் தலைமை அலுவலகம் உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது. கேரளாவில் இந்த அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் தான் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    மத்திய அரசின் தடை உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற உள்ளதாக உளவு பிரிவு போலீசார் அறிவுறுத்தி இருப்பதை தொடர்ந்து இந்த உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    சென்னை மாநகரிலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர். புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் முன்பு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    மண்ணடி, திருவல்லிக்கேணி, ஐஸ் அவுஸ், ஜாம் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் வலுவாக உள்ள இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    • 8 மாநிலங்களில் நடந்து வரும் சோதனையில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக டெல்லியில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    • சோதனையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சதி செயலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

    இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பும், அமலாக்கத்துறையும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் செயல்பாடுகளையும், அதன் நிர்வாகிகளின் செயல்பாடுகளையும் கண்காணித்து வந்தனர்.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்படுவதை அமலாக்கத்துறை உறுதிப்படுத்தியது. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை (22-ந்தேதி) நாடுமுழுவதும் 15 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர்.

    93 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 109 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் 11 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்து சென்றனர். அவர்கள் அனைவரிடமும் டெல்லியில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முக்கிய நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு கிடைத்தது. குறிப்பாக எந்தெந்த இடங்களில் எல்லாம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ரகசியமாக இயங்கி வருகிறது என்ற தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் அந்த இடங்களில் எல்லாம் மீண்டும் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். நேற்று நள்ளிரவு முதலே பல இடங்களில் இந்த அதிரடி வேட்டை தொடங்கி விட்டது. இன்று அதிகாலையில் 2-ம் கட்ட சோதனை நடப்பது தெரியவந்தது.

    அசாம், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டெல்லி உள்பட 8 மாநிலங்களில் நடந்து வரும் சோதனையில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக இன்று காலை டெல்லியில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சோதனையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    கர்நாடகாவில் 45 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அசாம் மாநிலத்தில் 7 பேர் சிக்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு டெல்லிக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். சிலர் உள்ளூர் ஜெயிலில் உடனடியாக அடைக்கப்பட்டனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 6 பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை கைது செய்தனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு நிதி திரட்டியது தொடர்பாக அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் சரத்பூர், மீரட், சியானா பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். டெல்லியில் சகின்பாத் மற்றும் ஜமியா பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும், அதிரடி படை வீரர்களும் ஒருங்கிணைந்து சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

    டெல்லியில் 6 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். டெல்லி சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் சிலரது வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. அங்கும் நிதி பரிமாற்றம் தொடர்பாக ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து சுமார் 120 கோடி ரூபாய் ஹவாலா பணபரிமாற்றம் மூலம் பெறப்பட்டு இருப்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்து கோர்ட்டில் தெரிவித்து உள்ளது.

    அதுபோல பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் எத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என்ற தகவல்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொகுத்து கோர்ட்டில் சமர்ப்பித்து உள்ளனர்.

    • பந்த் மற்றும் வன்முறை தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.
    • போராட்டத்தால் ஏற்பட்ட இழப்புகளை போராட்டக்காரர்களிடம் இருந்து வசூலிக்க முடிவு

    திருவனந்தபுரம்:

    இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கேரளாவில் நேற்று இந்த அமைப்பினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். காலை 6 மணிக்கு தொடங்கிய முழு அடைப்பு போராட்டம் மாலை 6 மணி வரை நடந்தது.

    இதில் திருவனந்தபுரம், மலப்புரம், கோழிக்கோடு உள்பட பல மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களின் மீது கல்வீசினர். பல இடங்களில் பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன.போலீசார் மீதும் தாக்குதல் நடந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. மேலும் கேரள அரசு இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

    இதையடுத்து கேரள போக்குவரத்து துறை அதிகாரிகள் ஐகோர்ட்டில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் கேரளா முழுவதும் நடந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக 70 பஸ்கள் சேதம் அடைந்துள்ளதாக கூறியுள்ளனர்.

    மேலும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் ரூ.45 லட்சம் இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். இதற்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் கோர்ட்டின் உத்தரவு மீறப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.

    இதற்கிடையே போராட்டத்தால் ஏற்பட்ட இழப்புகளை போராட்டக்காரர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று கேரள போக்குவரத்து துறை மந்திரி தெரிவித்து உள்ளார். மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக 170 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
    • மத்திய அரசிற்கு எதிரான கண்டன கோசங்களை எழுப்பினர்.

     திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் மற்றும் மாநில நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதனை கண்டித்து திருப்பூர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் மாவட்ட தலைவர் ஹபீபூர் ரஹ்மான் தலைமையில் காங்கயம் சாலையில் உள்ள சி.டி.சி. டிப்போ அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசிற்கு எதிரான கண்டன கோசங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ.மாவட்ட தலைவர் பஷீர் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    • கர்நாடகா, மராட்டியம் மாநிலங்களில் தலா 20 பேர் கைதாகி இருக்கிறார்கள்.
    • அசாமில் 9 பேர், உத்தரபிரதேசத்தில் 8 பேர், ஆந்திராவில் 5 பேர், மத்திய பிரதேசத்தில் 4 பேர், புதுச்சேரி, டெல்லியில் தலா 3 பேர், ராஜஸ்தானில் 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் இன்று அதி காலை 3.30 மணிமுதல் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம், ராஜஸ்தான், டெல்லி, அசாம் உள்பட பல்வேறு மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டது. பெரும்பாலான இடங்களில் சில மணிநேரத்தில் சோதனை நிறைவுபெற்றது.

    இந்த சோதனையின் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 106 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கேரளாவில் அதிகபட்சமாக 22 பேர் கைதாகி இருக்கிறார்கள். கர்நாடகா, மராட்டியம் மாநிலங்களில் தலா 20 பேர் கைதாகி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அசாமில் 9 பேர், உத்தரபிரதேசத்தில் 8 பேர், ஆந்திராவில் 5 பேர், மத்திய பிரதேசத்தில் 4 பேர், புதுச்சேரி, டெல்லியில் தலா 3 பேர், ராஜஸ்தானில் 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கைதான 106 பேரும் டெல்லிக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இன்று தீவிர ஆலோசனை நடத்தினார்.

    பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அறையில் இந்த ஆலோசனை நடந்தது. இதில் உள்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    • பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வேண்டும்.
    • சொத்துவரி, குடிநீர் வரியை குறைக்க வேண்டும்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,மங்கலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மங்கலம் நகரம் சார்பில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற்றது. மக்கள் சங்கமம் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக மங்கலம் ஆர்.பி.நகர் பகுதியில் உள்ள மர்ஹீம் ராஜாக்கண்ணு காஜாமுஹைதீன் நினைவுத்திடலில் மாபெரும் இஸ்லாமிய வரலாற்று கண்காட்சி நடைபெற்றது. மக்கள் சங்கமம் மாநாடு துவக்க நிகழ்ச்சியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் திருப்பூர் மாவட்ட செயலாளர் முஹம்மது ரபீக் கொடியேற்றி வைத்தார் .

    வரலாற்று கண்காட்சியை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கோவை மண்டல தலைவர் உசேன் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 7 மணிக்கு மங்கலம் ஆர்.பி.நகர் பகுதியில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டிற்கு எஸ்.டி.பி.ஐ.கட்சியின் கோவை மண்டல தலைவர் ராஜாஉசேன், திருப்பூர் மாவட்ட தலைவர் ஹாரிஸ்பாபு, திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மன்சூர்அகமது கான், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பஷீர்அகமது, ஏ.ஐ.ஐ.எம்.சி-திருப்பூர் மாவட்ட தலைவர் அப்பாஸ் நூரி, பல்லடம் தொகுதி தலைவர் யாசர்அரபாத், நேஷனல் விமன்ஸ் பிரண்ட் அமைப்பின் மங்கலம் பகுதி தலைவர் கத்தீஜா அப்பாஸ், நேஷனல் விமன்ஸ் பிரண்ட் அமைப்பின் மங்கலம் பகுதி செயலாளர் குர்ஷித் நௌசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநாட்டிற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஹபிபுர் ரகுமான் துவக்கவுரை ஆற்றினார். மாநில செயலாளர் நாகூர் மீரான், திருப்பூர் மாவட்ட தலைவர் ஜன்னத்இப்ராகிம், நேஷனல் விமன்ஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் ஆசியா மர்யம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இறுதியாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மங்கலம் நகர செயற்குழு உறுப்பினர் நௌசாத்அலி நன்றி கூறினார்.

    மக்கள் சங்கமம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை வழங்கும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்,தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உயர்த்தியுள்ள சொத்துவரி ,குடிநீர் வரியை குறைக்க வேண்டும், மின் மீட்டருக்கு வாடகை வசூலிக்க கூடிய திட்டத்தை அமல்படுத்தக்கூடாது. திருப்பூர் மக்களின் வாழ்வாதாரமாக உள்ள பனியன் தொழிலை பாதுகாக்க பனியன் தொழில்சார்ந்த பயிற்சி நிறுவனம் அமைக்க வேண்டும். இதன்மூலம் தொழிலாளர் பற்றாக்குறையை சீர்செய்து பாதுகாக்க முடியும்.மேலும் நூல் விலையை கட்டுக்குள் வைப்பதற்கு தமிழக அரசு பஞ்சு நூல் கொள்முதல் கிடங்கு அமைக்க வேண்டும். மத்திய அரசு உடனடியாக விலைவாசி உயர்வு, வரிகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • திங்கள்நகர் சுற்று வட்டார பகுதிகளில் அதிரடிப்படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் அறிவிக்கப் பட்டது.ஒரே நாளில் 2 போராட்டங்களும் அறிவிக்கப்பட்டதால் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தலைமையில் இரு தரப்பினரிடமும் தனித்தனி யாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை பா.ஜ.க. பிரமுகர் ராதாகிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்திய வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று திங்கள் நகரில் இன்று காலை முதல் மாலை வரை உண்ணா விரத போராட்டம் நடத்தப் போவதாக பா.ஜ.க. அறிவித்தது.

    இது போன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் அறிவிக்கப் பட்டது.ஒரே நாளில் 2 போராட்டங்களும் அறிவிக்கப்பட்டதால் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தலைமையில் இரு தரப்பினரிடமும் தனித்தனி யாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    அதன்பிறகு இருதரப்பு போராட்டங்களும் கைவி டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருந்த போதும் திங்கள் நகர் சுற்று வட்டார பகுதிகளில் அதிரடிப்படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    ×