திங்கள் நகரில் பா.ஜ.க.- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போராட்டங்கள் ரத்து

திங்கள்நகர் சுற்று வட்டார பகுதிகளில் அதிரடிப்படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் அறிவிக்கப் பட்டது.ஒரே நாளில் 2 போராட்டங்களும் அறிவிக்கப்பட்டதால் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தலைமையில் இரு தரப்பினரிடமும் தனித்தனி யாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
திங்கள் நகரில் பா.ஜ.க.- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா  போராட்டங்கள் ரத்து
Published on

கன்னியாகுமரி:

புதுக்கடை பா.ஜ.க. பிரமுகர் ராதாகிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்திய வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று திங்கள் நகரில் இன்று காலை முதல் மாலை வரை உண்ணா விரத போராட்டம் நடத்தப் போவதாக பா.ஜ.க. அறிவித்தது.

இது போன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் அறிவிக்கப் பட்டது.ஒரே நாளில் 2 போராட்டங்களும் அறிவிக்கப்பட்டதால் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தலைமையில் இரு தரப்பினரிடமும் தனித்தனி யாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதன்பிறகு இருதரப்பு போராட்டங்களும் கைவி டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருந்த போதும் திங்கள் நகர் சுற்று வட்டார பகுதிகளில் அதிரடிப்படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com