search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை- மதுரையில் முக்கிய இடங்களில் போலீஸ் குவிப்பு
    X

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை- மதுரையில் முக்கிய இடங்களில் போலீஸ் குவிப்பு

    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்ட விரோதமான அமைப்பு என்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு அறிவித்தது.
    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு இந்தியாவில் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

    மதுரை:

    கடந்த வாரம் நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை மேற்கொண்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சோதனையின்போது அந்த அமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இந்த சம்பவத்தை தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சுகளும் நடந்தன.

    இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்ட விரோதமான அமைப்பு என்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு அறிவித்தது. மேலும் இந்த அமைப்புக்கு இந்தியாவில் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதனுடன் செயல்பட்ட 8 அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

    இந்த தடை காரணமாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி மதுரையில் பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலையம், கோரிப்பாளையம், காஜிமார் தெரு, தெற்குவாசல், யானைக்கல் அண்ணாசிலை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் 100-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    சில இடங்களில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம், மறியல் போன்றவை நடத்தக்கூடாது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால் உபா சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    Next Story
    ×