search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிகள்"

    • ஏற்கனவே விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
    • பள்ளிகள் திறப்பு குறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

    சென்னை:

    தொடர் மழை பெய்தபோது, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறை விடப்பட்டது. தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், ஏற்கனவே விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

    அவ்வகையில் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை (டிசம்பர் 3) வேலை நாள் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

    • சிறப்பு வகுப்புகள் மூலம் கூடுதல் கவனம் செலுத்தி, 100 சதவீத தேர்ச்சிக்கு வகை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • குறைந்தபட்ச கற்றல் கையேடு, வினா வங்கி ஆகியவற்றை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக வெளியிட வேண்டும்.

    திருப்பூர் : 

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முழு பாடத்திட்டத்தில் இருந்து அரையாண்டு தேர்வுக்கான வினாக்கள் கேட்கப்படும். பொது வினாத்தாள் பாணியில் இத்தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு இன்னும் 3வாரங்களே உள்ள நிலையில் பாடங்களை முடிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் இரண்டாம் பருவ தேர்வு முடிவுகளை ஆய்வுக்கு உட்படுத்த, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்வியை தழுவியிருந்தால், உடனடியாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியை தழுவியோருக்கு பாடங்களை பகுதி பகுதியாக பிரித்து, சிறு சிறு தேர்வுகள் நடத்த வேண்டும். சிறப்பு வகுப்புகள் மூலம் கூடுதல் கவனம் செலுத்தி, 100 சதவீத தேர்ச்சிக்கு வகை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், அரையாண்டு தேர்வு நெருங்கியுள்ள நிலையில் பாடத்திட்ட அழுத்தம் காரணமாக கல்வியில் பின்தங்கிய மாணவர்கள், படிக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். புளூ பிரின்ட் வெளியிடாததால் முக்கிய பகுதிகளை மட்டும் படிக்க வைக்க முடிவதில்லை. குறைந்தபட்ச கற்றல் கையேடு, வினா வங்கி ஆகியவற்றை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    • 2008ல் தேசிய விருது பெற்ற கன்னட திரைப்படம் குப்பாச்சிகலு இம்மாதம் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான படங்கள் மாதந்தோறும் பள்ளிகளில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர்:

    பள்ளிகளில் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் தேசிய, சர்வதேச விருது பெற்ற, திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இப்படங்கள் பார்ப்பதன் வாயிலாக மாணவர்களின் கற்பனைத்திறனுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.படம் முடிந்ததும், மாணவர்களின் பின்னோட்டம் பெறப்படும். கதைக்களம், கதாநாயகர்கள், கதைக்கரு, தொழில்நுட்ப யுக்திகள் குறித்து ஆசிரியர்களுடன் மாணவர்கள் விவாதிக்க வேண்டும்.

    2008ல் தேசிய விருது பெற்ற கன்னட திரைப்படம் குப்பாச்சிகலு இம்மாதம் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.பெரும்பாலான பள்ளிகளில் இத்திரைப்படம் குழந்தைகள் தினம் முதல் திரையிடப்பட்டு வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பகுதி வாரியாக பிரித்து இந்த வார இறுதி வரை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.காணாமல் போன சிட்டுக்குருவியை, இரு குழந்தைகள் தேடும் போது அவர்களின் பயணத்தில் சந்தித்த மனிதர்கள், சம்பவங்கள், அனுபவங்கள் குறித்து இப்படம் விளக்குவதாக உள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான படங்கள் மாதந்தோறும் பள்ளிகளில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் கடந்த மாதம் நடந்தது.
    • 9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன.

    சேலம்:

    தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் கடந்த மாதம் நடந்தது. தேர்வு முடிந்து 1-ந்தேதி முதல் விடுமுறை விடப்பட்டது.

    இதில் 9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன.

    பயிற்சி

    ஆனால், அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம் கட்ட பயிற்சி காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1-ந்தேதி முதல் இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

    விடுமுறை நாட்களில் அரசு ெதாடக்கப்பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம் கட்ட பயிற்சி நடந்தது. . இதில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் பங்கேற்றனர்.

    நாளை பள்ளிகள் திறப்பு

    இந்த பயிற்சி நிறைவடைந்ததை அடுத்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு, அரசு பெறும் தொடக்கப் பள்ளிகள் 12 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நாளை (13-ந் தேதி) திறக்கப்படுகிறது.

    • சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தசரா பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுகிறது
    • அரசின் விடுமுறை நீட்டிப்பு அறிவிப்பானது, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த மாதம் (செப்டம்பர்) 30ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறைகளுடன் சேர்த்து அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு 6ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால், கடந்த கோடை விடுமுறை நாட்களின்போது, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் எண்ணும் எழுத்துப் பயிற்சித் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டதால் அதற்கு ஈடுசெய்யும் பணி விடுப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று, தமிழகத்தில் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    அதன்பின்னர் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் காலாண்டு விடுமுறை முடிந்து வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பானது, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது. அதேசமயம், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தசரா பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுவதால், பள்ளிகள் நாளை திறக்கப்படுமா அல்லது தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, 10ஆம் தேதி திறக்கப்படுமா அல்லது 13ஆம் தேதி திறக்கப்படுமா என்ற குழப்பம் நீடித்தது.

    இதுபற்றி மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள 9ம் தேதி வரை விடுமுறை என்பது, மெட்ரிக் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளார். எனவே, சிபிஎஸ்இ பள்ளிகள் நாளை செயல்படும். 

    • பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு நலக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு நலக்கூட்டம் பேரூராட்சி துணைத் தலைவர் கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

    செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அலுவலர் செல்வி பிளாரன்ஸ் விளக்க உரையாற்றினார்.

    அப்போது அவர் குழந்தைகளை தொழிலாளர் ஆக்குதல், குழந்தை திருமணம் ஆகியவற்றை தடுத்தல், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்தல், குழந்தைகள் நலனுக்கான இலவச தொலைபேசி எண் 1098 மற்றும் அவர்களின் சட்டதிட்ட பாதுகாப்பு பற்றியும் பேசினார்.

    வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு பலகையை பேரூராட்சி அலுவலகத்தில் வைப்பது எனவும், பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் மகாராஜன், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவர் டாக்டர் கென்னடி, மாவட்ட தலைவர் ராஜ்கமல், துணைத் தலைவர் உதயகுமார், கா.ஆ. மேல்நிலைபள்ளியின் ஆசிரியர் கண்ணன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • காலை 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் காலை சிற்றுண்டி உணவு வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து இன்று முதல் தமிழகத்தின் அனை த்து மாவட்டங்களிலும் முதலமை ச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை மற்றும் கும்பகோணம் மாநகராட்சிகளில் உள்ள 21 மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் இன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட்டது.

    தஞ்சை கூட்டுறவு காலனியில் உள்ள தொடக்கப் பள்ளியில் இன்று காலை 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் வரவேற்று பேசினர். அரசு தலைமை கொறடா கோவி செழியன், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இதையடுத்து மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் காலை சிற்றுண்டி உணவு வழங்கினார். தொடர்ந்து மாணவர்கள் சிற்றுண்டி சாப்பிட்டனர்.

    முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் தஞ்சை மாநகராட்சியில் 8 தொடக்கப் பள்ளிகளில் 375 மாணவ- மாணவிகளும், கும்பகோணம் மாநகராட்சியில் 13 தொடக்கப் பள்ளிகளில் 1067 மாணவ -மாணவிகள் என மொத்தம் 21 மாநகராட்சி தொடக்க பள்ளிகளில் 1442 மாணவ- மாணவிகள் பயனடைந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, கவுன்சிலர்கள் மேத்தா, நீலகண்டன், மாணவ- மாணவிகளின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இத்திட்டம் ஆசிரியர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது
    • ஐந்தாண்டுகளுக்கு மொத்த திட்டச் செலவு ரூ.27,360 கோடியாக இருக்கும்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 14000 பள்ளிகளை ரூ.27360 கோடி செலவில் எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த திட்டத்தின்கீழ், கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் நவோதயா வித்யாலயாக்கள் உட்பட 14,000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகளாக மேம்படுத்தப்படும் என அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், அனுராக் தாக்கூர் தெரிவித்தனர்.

    ஆசிரியர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளை வலுப்படுத்தும் திட்டமாகும். ஐந்தாண்டுகளுக்கு மொத்த திட்டச் செலவு ரூ.27,360 கோடியாக இருக்கும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.18,128 கோடியாக இருக்கும். இத்திட்டத்தின் மூலம் 18.7 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என அரசு எதிர்பார்க்கிறது.

    • ரூ.2.85 கோடி மதிப்பிலான மீன்பிடி இறங்கு தளம், வலை பின்னும் தளம், ஏல கூடம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார்.
    • கொடியம்பாளையம் கிராமத்தில் உள்ள பள்ளிகள், குளம் கட்டுமான பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் 2000-க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ரூ.2.85 கோடி மதிப்பிலான மீன்பிடி இறங்கு தளம், வலை பின்னும் தளம், ஏல கூடம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் மற்றும் மேற்குவ ங்கம் நேஷனல் என்வராயில்மெண்ட் வைல்டு லைப் சொசைட்டி மூலம் சதுப்புநில காடுகள் (மாங்குரோவ் காடுகள்) விரிவாக்கம் செய்வதற்கான இடம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் லலிதா படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து கொடிய ம்பாளையம் கிராமத்தில் உள்ள பள்ளிகள், குளம் கட்டுமான பணி ஆகியவற்றைபார்வையிட்ட ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது காவல் கண்கா ணிப்பாளர் நிஷா, மேற்கு வங்கத்தை சேர்ந்த நேஷனல் என்விரான்மென்ட் சொசைட்டியின் நிர்வாகி அஜந்தா டே, மாவட்ட கடல் சார் சட்ட அமலாக்க பிரிவு ஆய்வாளர் வெர்ஜினியா, வனத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • எஸ்.பி.கே. பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
    • விநாயகருக்கு பூஜை செய்து படையல் படைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

    அருப்புக்கோட்டை

    விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே. பள்ளிகளில் உள்ள விநாயகருக்கு பூஜை செய்து படையல் படைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விநாயகருக்கு பூஜைகள் செய்து உறவின்முறை தலைவர் காமராஜன் தலைமையில் பள்ளிச் செயலாளர் மணி முருகன் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

    இதில் உறவின்முறை நிர்வாகிகள், தலைமையாசிரியர் ஆனந்தராஜ், ஆசிரியர்-ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் கொண்டாடப்பட்ட நிகழ்வில் பள்ளி செயலாளர் ராமச்சந்திரன், தலைவர் ஜெயவேல் பாண்டியன் உறவின்முறை செயலாளர் முத்துசாமி, முன்னாள் தலைவர் மனோகரன் மற்றும் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும்.
    • சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும், தேர்தல் காலை வாக்குறுதிகளின்படி சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கசாமி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.‌

    இதில் நிர்வாகிகள் அறிவழகன், கருணாநிதி, ராமாமிர்தம், சுகந்தி, நாவலரசன், முத்துராமன், மதிவாணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுமதி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சிவ ரவிச்சந்திரன், முன்னாள் படை வீரர் நலத்துறை நிர்வாக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் இளங்கோவன், தமிழ்நாடு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில அமைப்பு செயலாளர் ரமேஷ், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க மாநில செயலாளர் பாஸ்கரன், மருத்துவத்துறை ஆய்வக நுட்பனர் சங்கம் மாநில செயலாளர் சாந்தராமன், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் தமிழ்வாணன், முடக்கு வட்ட செயலாளர் அஜய் ராஜ், ஒரத்தநாடு வட்ட செயலாளர் தம்பிஐயா, அரசு ஊழியர் சங்கம் மாநில செயலாளர் ஹேமலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி, மாவட்ட பொருளாளர் மதியழகன் ஆகியோர் நன்றி கூறினர்.

    • ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • அரசு மேல்–நிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தில் ஆய்வு செய்து உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் எம்.எல்.ஏ கேட்டறிந்தார்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.

    உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடி கிராமம் மற்றும் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மரைக்கான் சாவடி பகுதியில் தலா ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, கட்டுமாவடியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம், கணபதிபுரம், அம்பல், திருக்கண்ணபுரம் ஊராட்சிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் பயணியர் நிழலகங்களையும் ஆய்வு செய்தார்.

    மேலும், திட்டச்சேரி, திருமருகல், மருங்கூர், கணபதிபுரம் அரசு பள்ளிகளுக்கு வழங்க ப்பட்ட பென்ஞ் டெஸ்க்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குறிப்பாக திருமருகல் அரசு மேல்–நிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தில் ஆய்வு செய்து, உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் எம்.எல்.ஏ கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது, திருமருகல் தி.மு.க ஒன்றியச் செயலாளர்கள் செல்வ செங்குட்டுவன், சரவணன், வி.சி.க ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஒன்றிய ஆணையர் பாலமுருகன், திட்டச்சேரி பேரூராட்சி மன்றத் தலைவர் ஆயிஸா சித்தீக்கா, பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் சுல்தான், ஒன்றிய பொறியாளர்கள் கவிதா ராணி, செந்தில் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனிருந்தனர்.

    ×