search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்
    X

    தர்ணா போராட்டம் நடந்தது.

    சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்

    • பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும்.
    • சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும், தேர்தல் காலை வாக்குறுதிகளின்படி சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கசாமி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.‌

    இதில் நிர்வாகிகள் அறிவழகன், கருணாநிதி, ராமாமிர்தம், சுகந்தி, நாவலரசன், முத்துராமன், மதிவாணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுமதி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சிவ ரவிச்சந்திரன், முன்னாள் படை வீரர் நலத்துறை நிர்வாக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் இளங்கோவன், தமிழ்நாடு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில அமைப்பு செயலாளர் ரமேஷ், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க மாநில செயலாளர் பாஸ்கரன், மருத்துவத்துறை ஆய்வக நுட்பனர் சங்கம் மாநில செயலாளர் சாந்தராமன், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் தமிழ்வாணன், முடக்கு வட்ட செயலாளர் அஜய் ராஜ், ஒரத்தநாடு வட்ட செயலாளர் தம்பிஐயா, அரசு ஊழியர் சங்கம் மாநில செயலாளர் ஹேமலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி, மாவட்ட பொருளாளர் மதியழகன் ஆகியோர் நன்றி கூறினர்.

    Next Story
    ×