search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரியில்  அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்த முடிவு
    X

    கூட்டத்தில் ஆறுமுகநேரி பேரூராட்சி துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் குழந்தைகள் நலனுக்கான விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்ட போது எடுத்த படம்.

    ஆறுமுகநேரியில் அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்த முடிவு

    • பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு நலக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு நலக்கூட்டம் பேரூராட்சி துணைத் தலைவர் கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

    செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அலுவலர் செல்வி பிளாரன்ஸ் விளக்க உரையாற்றினார்.

    அப்போது அவர் குழந்தைகளை தொழிலாளர் ஆக்குதல், குழந்தை திருமணம் ஆகியவற்றை தடுத்தல், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்தல், குழந்தைகள் நலனுக்கான இலவச தொலைபேசி எண் 1098 மற்றும் அவர்களின் சட்டதிட்ட பாதுகாப்பு பற்றியும் பேசினார்.

    வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு பலகையை பேரூராட்சி அலுவலகத்தில் வைப்பது எனவும், பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் மகாராஜன், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவர் டாக்டர் கென்னடி, மாவட்ட தலைவர் ராஜ்கமல், துணைத் தலைவர் உதயகுமார், கா.ஆ. மேல்நிலைபள்ளியின் ஆசிரியர் கண்ணன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×