search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியிடை நீக்கம்"

    • புகையிலை பொருட்களை விற்பனை செய்தவழக்கில் கைது செய்யப்பட்டர்.
    • காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகை யில் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே பூ.மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவழக்கில் கைது செய்யப்பட்டர். இந்நிலையில் இவரிட மிருந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில்பணிபுரிந்து வந்த முதல்நிலை போலீசார் பிரபாகரன் ரூ.3,000 கையூட்டாக பெற்றதாக கூறப்படுகிறது.

    இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து கைது செய்யப்பட்ட நபரிடம், கையூட்டு பெற்ற போலீசார் பிரபாகரனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல்போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளி களிடம் தொடர்பில் இருந்துகாவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகை யில் குற்றச்செயல்களில் காவல்துறையினர் ஈடுபட்டாலோ அல்லது துணைபோனாலோ அவர்கள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • தரமற்று கட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரரை கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • ஊத்துக்காடு ஊராட்சியில் தரமற்ற முறையில் இருளர் குடியிருப்பு வீடுகளை கட்டிய விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினருக்கு 76 குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

    இதனை நேற்று முன் தினம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது குடியிருப்பு வீடுகள் தரமற்று கட்டப்படுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    அங்கேயே கட்டுமான ஒப்பந்ததாரரை அழைத்து கடுமையாக கண்டித்தார். ஒதுக்கப்பட்ட நிதியில் தரத்துடன் குடியிருப்புகளை கட்டி முடிக்க வேண்டும். இல்லையெனில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.

    தரமற்று கட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரரை கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் ஊத்துக்காடு ஊராட்சியில் தரமற்ற முறையில் இருளர் குடியிருப்பு வீடுகளை கட்டிய விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

    வாலாஜாபாத் ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா, கள ஆய்வாளர் சுந்தரவதனம் ஆகியோரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் ஆர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

    கட்டுமானப்பணி செய்து வரும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • வியாபாரிகளிடமிருந்து முறைகேடாக அபராதம் வசூலித்ததால் நடவடிக்கை
    • நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவு

    ஆம்பூர்:

    ஆம்பூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பரப்புரையாளர் கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    அதில் 4 நபர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு ஆம்பூர் நகராட்சியின் பில் புத்தகத்தை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த வியாபாரிகளிடமிருந்து முறைகேடாக அபராதம் வசூலித்துள்ளனர்.

    இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ஷகிலாவிற்கு புகார் வந்தது. அதனடிப்படையில் அவர் இதுகுறித்து நகராட்சிக ளின் நிர்வாக மண்டல இயக்குநருக்கு தகவல் தெரிவித்தார்.

    நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் ஆம்பூர் நக ராட்சிக்கு நேரடியாக வருகை தந்து இதுகுறித்து விசாரணை நடத்தி நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அறிக்கை அனுப் பியதாக கூறப்படுகிறது.

    அதனடிப்படையில் தனியார் நிறுவ னத்தின் மூலம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்த 4 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர்களை சரிவர கண்கா ணிக்காத ஆம்பூர் நகராட்சி சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    • 60 வார்டுகளிலும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
    • மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடிக்கு புகார்கள் வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறு, விறுப்பாக நடந்து வருகிறது. இதனை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் மக்கள் அதிகம் நிறைந்த பகுதியாக திருப்பூர் மாநகராட்சி உள்ளது. 60 வார்டுகள் உள்ள நிலையில், 60 வார்டுகளிலும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குப்பைகளை அகற்ற மற்றும் துப்புரவு பணியாளர்களும் தேவைக்கு ஏற்ப நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு என வருகை பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் எந்தெந்த பணிகள் எங்கு நடந்துள்ளது என்பதையும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சை (56). இவர் 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடுகள் செய்து வருவதாக மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடிக்கு புகார்கள் வந்தது. அதன்படி அடிப்படையில் முதற்கட்டாக நடந்த விசாரணையின்படி 2 வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சையை, மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சை துப்புரவு பணியாளர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடு செய்து வருவதாகவும், வராத பணியாளர்கள் வேலைக்கு வந்ததாக அதில் பதிவிட்டு முறைகேடு செய்ததாகவும் வந்த புகாரின் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேடு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு முடிந்த பின்னர் முறைகேடுகளுக்கு ஏற்ப துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றார்.

    • அங்காளம்மன் கோவில் முன்புறம் குப்பைகள் அள்ளப்படாமல் கிடந்தது.
    • துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமார் குடி அமர்த்தியுள்ளார்.

    குன்னத்தூர் :

    குன்னத்தூரில் கடந்த 6-ந் தேதி ரூ.3 கோடியே 75 லட்சம் செலவில் கட்டப்பட்ட வேளாண்மை விற்பனை கூடத்தை திறந்து வைக்க செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், கலெக்டர் வினீத் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது குன்னத்தூர் பஸ் நிலையம் அங்காளம்மன் கோவில் முன்புறமும் குப்பைகள் அள்ளப்படாமல் கிடந்தது. மதியம் 2 மணிக்கு மேல் தான் குப்பை அகற்றப்பட்டுள்ளது. மேலும் திடக்கழிவு வளாகத்தில் தன்னிச்சையாக தனி நபரை துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமார் குடி அமர்த்தியுள்ளார்.

    இந்தநிலையில் குன்னத்தூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமாரை தற்காலிகபணியிடை நீக்கம் செய்து செயல் அலுவலர் ராஜா உத்தரவிட்டுள்ளார்.

    • கழிவறைக்குள் வைத்து பூட்டுவேன் என பள்ளிக் குழந்தைகளை மிரட்டிய நபர்.
    • சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை அடுத்து நடவடிக்கை.

     பல்லியா:

    உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது.

    அந்த வீடியோவில் பள்ளி குழந்தைகள் பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்வதும், ஒரு நபர் அவர்களை திட்டுவதும் இடம் பெற்றுள்ளது. சொன்னபடி செய்யா விட்டால் கழிவறைக்குள் வைத்து பூட்டி விடுவேன் என்றும் அந்த நபர் மிரட்டுவது அதில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, அந்த பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    இது குறித்து தெரிவித்துள்ள மாவட்ட கல்வி அதிகாரி மணிராம் சிங், சோஹான் பிளாக்கில் உள்ள ஆரம்பப் பள்ளியில் இந்த வீடியோ பதிவு நடந்துள்ளது என்றும், இது தொடர்பாக அந்த பகுதி கல்வி அதிகாரி நடத்திய விசாரணையின் அடிப்படையில் பள்ளி முதல்வர் மிருத்யுஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்றும் கூறினார். தலைமையாசிரியர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

    திண்டுக்கல் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனராக இருந்தவர் சாமுவேல் ஜெபராஜ் வேதமுத்து. இவர் நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் மீது மாவட்ட அளவில் பணியாளர்களை பணியிட மாற்றம் செய்வதும் பின்னர் அவர்களை அதே இடத்தில் பணிஅமர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்தது.

    இது குறித்து உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடுதல் இயக்குனர் நிலையிலான அதிகாரிகள் அவரிடம் நேரடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இணை இயக்குனர் வேதமுத்து மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.

    இதனையடுத்து கால்நடை பராமரிப்புத்துறை செயலர் கோபால் உத்தரவின் பேரில் இணை இயக்குனர் சாமுவேல் ஜெபராஜ் வேதமுத்து ஓய்வு பெறும் நாளான நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    மேலும் அவருக்கு உதவியாக செயல்பட்டு வந்த கால்நடை மருத்துவர் முத்துசாமி பாண்டியன், கால்நடை ஆய்வாளர் பாலசந்திரன், ஆகியோர் வேறு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×