search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியிடை நீக்கம்"

    • சாலையோரம் கைக்குழந்தையுடன் நின்றிருந்த இளம்பெண் ஒருவர் அந்த பஸ்சை நிறுத்துமாறு டிரைவரை நோக்கி கை காட்டினார்.
    • இளம்பெண் அதுகுறித்து கேட்டபோது, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாக தெரிகிறது.

    பந்தலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கிளை உள்ளது. இங்கிருந்து சுற்றுவட்டார கிராமங்களான நாடுகாணி, தேவாலா, பந்தலூர், உப்பட்டி, பொன்னானி, முக்கட்டி, பிதிர்காடு, பாட்டவயல், முள்ளன்வயல், அம்பலமூலா, அய்யன்கொல்லிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கூடலூரில் இருந்து அய்யன்கொல்லிக்கு நேற்று முன்தினம் மாலையில் அரசு பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ்சை டிரைவர் பன்னீர் செல்வம் என்பவர் ஓட்டினார்.

    அய்யன்கொல்லி அருகே சாலையோரம் கைக்குழந்தையுடன் நின்றிருந்த இளம்பெண் ஒருவர் அந்த பஸ்சை நிறுத்துமாறு டிரைவரை நோக்கி கை காட்டினார். ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் அய்யன்கொல்லிக்கு ஓட்டி சென்றார்.

    உடனே வாடகை வாகனத்தில் ஏறி அய்யன்கொல்லிக்கு கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண், அங்கு நின்ற அந்த பஸ்சின் டிரைவரிடம், 'கைக்குழந்தையுடன் நின்று கை காட்டியும், ஏன் பஸ்சை நிறுத்தவில்லை' என்று கேட்டார். அதற்கு அவர், நான் கவனிக்கவில்லை என்று கூறியதோடு மீண்டும் அந்த இளம்பெண் அதுகுறித்து கேட்டபோது, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாக தெரிகிறது.

    இதை சிலர் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. இதை அறிந்த கூடலூர் போக்குவரத்து கழக கிளை மேலாளர் அருள்கண்ணன், ஊட்டி போக்குவரத்து கழக பொது மேலாளர் நடராஜனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் விசாரணை நடத்தி, டிரைவர் பன்னீர்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • நகராட்சி ஆணையாளர் உத்தரவு
    • முறையாக வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபடவில்லை என புகார்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இந்த வார்டு பகுதிகளில் பல்வேறு வரி இனங்களை வசூல் செய்வ தற்காக நகராட்சி பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நகராட்சி வருவாய் உதவியாளராக (பில் கெலக்டர்) பணி யாற்றி வருபவர் தேவகுமார். இவர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டு பகுதிகளில் முறையாக வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபடவில்லை என்றும், நகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத் தும் வகையில் நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்தது.

    அதன் பேரில் நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் அவரை பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இது வாணியம்பாடி நகராட்சி ஊழியர்க ளிடையே பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • லஞ்சம் வாங்கியதால் நடவடிக்கை
    • கலெக்டர் உத்தரவு

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே செல்வமந்தை கிராமத்தில் கடந்த 29-ந் தேதி மனை பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம நிர் வாக அலுவலர் சதீஷ் மற்றும் உதவியாளர் ராஜலிங்கம் ஆகிய இருவரும் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது ராணிப் பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் உதவியாளர் ராஜலிங்கத்தை அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • வீட்டு வாசலில் நின்றிருந்த பெண் சான்றிதழ்கள் எடுத்துவர உள்ளே சென்றுள்ளார்.
    • விசாரணையில் பெண்ணை கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் பொலவபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55). இவர் கடம்பூர் மலைப்பகுதி குன்றில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். கோபி அருகே உள்ள நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் 23 வயது பெண். இவர் திருமணமாகி கணவர், குழந்தையுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் முருகேசனை அந்த பெண் சந்தித்து தனக்கு வேலை வழங்குமாறும், இதற்காக உங்கள் வீட்டுக்கு வந்து நான் படித்த சான்றிதழ்களை தருகிறேன் என்றும் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் நீங்கள் என்னுடைய வீட்டுக்கு வர வேண்டாம். நானே உங்கள் வீட்டுக்கு வந்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டு்க்கு சென்று சான்றிதழ்கள் கேட்டுள்ளார்.

    வீட்டு வாசலில் நின்றிருந்த அந்த பெண் சான்றிதழ்கள் எடுத்துவர உள்ளே சென்றுள்ளார். அப்போது அவரை முருகேசன் பின்தொடர்ந்து சென்றுள்ளார். சற்றும் எதிர்பாராத வகையில் அவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்துள்ளனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் கிராம நிர்வாக அலுவலர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இது குறித்து அந்த பெண் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பெண்ணை கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி கிராம நிர்வாக அலுவலரை முருகேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டருக்கு மானியம் வேண்டி சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாட்கோ மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.
    • லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார், இதுபற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே மணியார் குண்டம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 42). விவசாயி. இவர், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டருக்கு மானியம் வேண்டி சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாட்கோ மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.

    இதையடுத்து ரூ.7.50 லட்சம் மதிப்பிலான டிராக்டருக்கு 50 சதவீதம் மானியம் வழங்குவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று குமாரிடம் தாட்கோ மேலாளர் (பொறுப்பு) ஜி.சாந்தி கேட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார், இதுபற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். பின்னர் அவர்களது ஆலோசனையின்பேரில் கடந்த 15-ந் தேதி தாட்கோ அலுவலகத்திற்கு விவசாயி குமார் சென்றார்.

    இதையடுத்து அங்கிருந்த தாட்கோ மேலாளர் ஜி.சாந்தியிடம் ரூ.15 ஆயிரத்தை கொடுக்க முயன்றபோது, அதை அலுவலக உதவியாளர் எம்.சாந்தியிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.

    பணியிடை நீக்கம்

    இதைத்தொடர்ந்து அவரிடம் குமார் லஞ்ச பணத்தை கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், லஞ்சம் வாங்கி கைதான தாட்கோ பெண் மேலாளர் ஜி.சாந்தி மற்றும் அலுவலக உதவியாளர் எம்.சாந்தி ஆகிய 2 பேரையும் நேற்று பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • ஆலங்குடியில் மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யபட்டார்
    • சரத்குமார் உயர்மின் அழுத்த கம்பியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 27). ஆலங்குடி மின்வாரிய அலுவலக ஊழியரான இவர், கீழாத்தூர் பகுதியில் உயர்மின் அழுத்த கம்பியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்நிலையில், பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்டதாக ஆலங்குடி மின்வாரியத்தில் போர்மேனாக பணிபுரிந்த கணேசனை, பணியிடை நீக்கம் செய்து ஆலங்குடி செயற்பொறியாளர் உத்தரவிட்டார்.

    • செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.
    • பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட டாக்டர் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டிருந்தார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் பயிற்சி டாக்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து பணியை புறக்கணித்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பணியில் உள்ள பயிற்சி பெண் டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரியும், பயிற்சி பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட டாக்டர் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டிருந்தார்.

    இதன் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை அளித்தாக கூறப்பட்ட டாக்டர் ஜிதேந்திரனை பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு மருத்துவகல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • மயக்கவியல் துறை துணை பேராசிரியர் செய்யது தாகிர் உசேன், தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக 41 பெண்கள் வாய்மொழியாக புகார் தெரிவித்தனர்.
    • விசாகா கமிட்டியின் அறிக்கை முடிவு மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டது.

    மதுரை:

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த செய்யது தாகிர் உசேன் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த நடவடிக்கை குறித்து, மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரத்தினவேல் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மயக்கவியல் துறை துணை பேராசிரியர் செய்யது தாகிர் உசேன், தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக 41 பெண்கள் வாய்மொழியாக புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    ராஜாஜி அரசு மருத்துவமனை துணை முதல்வர் டாக்டர் தனலட்சுமி தலைமையிலான விசாகா குழுவினர், இந்த விசாரணையை நடத்தினர்.

    கடந்த 10-ந் தேதி விசாரணை தொடங்கி 12-ந் தேதி வரை நடந்தது. புகார் கூறியவர்களில் 21 மருத்துவ மாணவிகள், ஒரு செவிலியர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்கள், விசாகா கமிட்டி முன்பாக விசாரணைக்கு ஆஜரானபோது, ஒருவித அச்சத்தோடு இருந்தனர். செய்யது தாகிர் உசேன் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாகவும், கேலியான பெயரை கூறி அழைத்ததாகவும், ஆபரேசன் தியேட்டருக்கு செல்லவே தயக்கமாக இருந்ததாகவும் விசாரணையின்போது, பெரும்பாலானவர்கள் கூறினர்.

    விசாகா கமிட்டியின் அறிக்கை முடிவு மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டது.

    ராஜாஜி அரசு மருத்துவமனையில் 62 சதவீதம் பெண் பணியாளர்கள் உள்ளனர். செய்யது தாகிர் உசேன் மீது 2019-ம் ஆண்டு முதல் பல்வேறு புகார்கள் வந்தன. ஆனால் எழுத்துப்பூர்வமாக கிடைக்கவில்லை. ஆனால் தற்போது 23 மாணவிகள் கைப்பட எழுதி புகார் அளித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எங்களுக்கு பழிவாங்கும் நோக்கம் இல்லை. பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக செய்யது தாகிர் உசேன் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. இதுவரை எழுத்துப்பூர்வமாக அளித்த அனைத்து புகார்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் குப்புசாமி இறந்தார்.
    • பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் சயனைடு கலந்த மதுவை வாங்கி குடித்ததால் இறந்தது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 68) மீன் வியாபாரி. கீழவாசல் பூமால்ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவேக் (36) கார் டிரைவர்.

    இவர்கள் நேற்று மதியம் கீழவாசல் தற்காலிக மீன் மார்க்கெட் எதிரே உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் மது வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் குப்புசாமி இறந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி விவேக் இறந்தார்.

    இவர்கள் இருவரது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் சயனைடு கலந்த மதுவை வாங்கி குடித்ததால் இறந்தது தெரியவந்தது. இவர்கள் ஒருவர் குடித்த மதுவை மற்றொருவர் குடித்ததால் இரண்டு பேரும் பலியாகினர்.

    தற்கொலையா ? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே டாஸ்மாக் பார் உரிமையாளர் செந்தில் நா.பழனிவேல், ஊழியர் காமராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் வேலை பார்த்த மேற்பார்வையாளர் முருகன், விற்பனையாளர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் உத்தரவிட்டார்.

    • ஜிஷா மோளுக்கு கடந்த பல ஆண்டுகளாக கள்ளநோட்டு மாற்றும் மாபியா கும்பல்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது
    • லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜிஷாமோள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு தேசியமாக்கப்பட்ட வங்கிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த ஒரு வியாபாரி ரூ.50 ஆயிரத்தை செலுத்த சென்றார். வங்கி அதிகாரிகள் அவர் கொடுத்த ரூபாய் நோட்டுக்களை பரிசோதனை செய்தபோது, அதில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 7 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுபற்றி வங்கி அதிகாரிகள் ஆலப்புழா தெற்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த வியாபாரியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பணத்தை அவரிடம் கொடுத்தது எடத்துவா விவசாயத்துறை பெண் அதிகாரியான ஜிஷாமோள் (வயது 39) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அதைதொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியானது. ஜிஷா மோளுக்கு கடந்த பல ஆண்டுகளாக கள்ளநோட்டு மாற்றும் மாபியா கும்பல்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. ஆனால், கள்ள நோட்டுகள் எங்கிருந்து கிடைத்தது என்ற விவரத்தை அவர் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை. ஜிஷாமோள் இதற்கு முன்பு மாராரிக்குளம் பகுதியில் அதிகாரியாக பணியாற்றினார். அப்போது அங்கு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜிஷாமோள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதைதொடர்ந்தே அவர் எடத்துவாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது தெரிந்தது.

    இந்தநிலையில் கள்ளநோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஜிஷாமோள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சிறையில் உள்ள அவரை காவலில் எடுத்து விசாரித்தால் பல தகவல்கள் வெளிவரும் என அதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
    • கஞ்சா கடத்திய வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையை அடுத்த கத்தக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெயரவிவர்மா. இவர் ஆலங்குடி வட்டத்தில் உள்ள கோவிலூரில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜெயரவிவர்மா மற்றும் இருவர் பயணம் செய்த சொகுசுக்காரை வல்லத்திராக்கோட்டை பகுதியில் போலீசார் சோதனை யிட்டபோது அவரது காரில் 1.700 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக போலீசார் ஜெயரவிவர்மா உள்ளிட்ட மூவரையும் கைது செய்து விசாரணை செய்து வரும் சூழலில், துறை ரீதியான நடவடிக்கையாக, ஜெயரவிவர்மாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


    • புகையிலை பொருட்களை விற்பனை செய்தவழக்கில் கைது செய்யப்பட்டர்.
    • காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகை யில் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே பூ.மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவழக்கில் கைது செய்யப்பட்டர். இந்நிலையில் இவரிட மிருந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில்பணிபுரிந்து வந்த முதல்நிலை போலீசார் பிரபாகரன் ரூ.3,000 கையூட்டாக பெற்றதாக கூறப்படுகிறது.

    இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து கைது செய்யப்பட்ட நபரிடம், கையூட்டு பெற்ற போலீசார் பிரபாகரனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல்போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளி களிடம் தொடர்பில் இருந்துகாவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகை யில் குற்றச்செயல்களில் காவல்துறையினர் ஈடுபட்டாலோ அல்லது துணைபோனாலோ அவர்கள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ×