என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

ஜிதேந்திரன்
பயிற்சி டாக்டருக்கு பாலியல் தொல்லை- செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பணியிடை நீக்கம்

- செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.
- பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட டாக்டர் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டிருந்தார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் பயிற்சி டாக்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து பணியை புறக்கணித்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியில் உள்ள பயிற்சி பெண் டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரியும், பயிற்சி பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட டாக்டர் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை அளித்தாக கூறப்பட்ட டாக்டர் ஜிதேந்திரனை பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு மருத்துவகல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.