என் மலர்
இந்தியா

விமான விபத்தில் பலியான நர்சு குறித்து முகநூலில் அவதூறு பதிவு - துணை தாசில்தார் பணியிடை நீக்கம்
- வெள்ளரிக்குண்டு பகுதியில் துணை தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் பவித்ரன்.
- ரஞ்சிதா குறித்து அவதூறாக பதிவிட்ட துணை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
காசர்கோடு:
காசர்கோடு மாவட்டம் வெள்ளரிக்குண்டு பகுதியில் துணை தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் பவித்ரன் (வயது 48). இவர், நேற்றுமுன்தினம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளில் ஒருவரான கேரளாவைச் சேர்ந்த நர்சான ரஞ்சிதா நாயரின் சாதியின் பெயரை குறிப்பிட்டு தனது முகநூலில் பதிவிட்டு இருந்தார். இது அவதூறு பரப்பும் வகையில் இருந்தது.
இதை பார்த்த பலரும் சமூக வலைத்தளத்தில் அவதூறாக பதிவிட்ட துணை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் தனது பதிவை முகநூலில் இருந்து நீக்கியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து பவித்ரனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
Next Story






