என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோபிசெட்டிபாளையம்"

    • வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி அமோக வெற்றி பெறும்.
    • அதிமுகவிற்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களை ஆண்டவர் பார்த்துக் கொள்வார்.

    கோபிச்செட்டிப்பாளையத்திற்கு பிரசாரத்திற்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் கூட்டத்தில், கோபிச்செட்டிப்பாளையத்தில் LED திரையில் வீடியோக்களை காண்பித்து, செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.

    அப்போது மக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைந்தது கோபி தொகுதி முதன்மை தொகுதியாக மாற நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோபிசெட்டிபாளையமே அதிரும் வகையில் கூட்டம் கூடியுள்ளது. யார் யாரோ கனவு காண்கிறார்கள், அந்த கனவை அனைத்து மக்களும் வெள்ளமாக திறண்டு நொறுக்கிவிட்டீர்கள்.

    50 ஆண்டுகளாக போராடி வந்த அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியது. மாநில நிதியிலேயே அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றினேன்.

    கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்திற்கு எந்த திட்டமும் செய்யப்படவில்லை.

    டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது ஓடோடி சென்று பார்த்தேன். விவசாயிகள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் ஓடோடி சென்று உதவி செய்த இயக்கம் அதிமுக.

    இந்தத் தொகுதியில் ஒருவர் எம்எல்ஏவாக இருந்தார். நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஓட்டு வாங்குவதற்கு உங்களை வந்து அணுகினார். ஆனால் ராஜினாமா செய்வதற்கு உங்களை கேட்டாரா?

    அதிமுகவிற்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களை ஆண்டவர் பார்த்துக் கொள்வார்.

    அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கான நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஆனால் இந்தத் தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ பங்குபெறவில்லை

    அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை என்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அவர் காரணம் சொன்னார்.

    ஆனால் இப்போது யார் படத்தை வைத்துக்கொண்டு மாற்றுக் கட்சியில் சேர்ந்தீர்கள்?

    உங்களுக்கு அடையாளம் கொடுத்தது அதிமுக. பதவி கொடுத்தது அதிமுக.

    எம்ஜிஆர் ஆட்சியில் MLA-வாக இருந்தார். ஜெயலலிதா மற்றும் எனது ஆட்சியில் அமைச்சராக இருந்தார். அப்பொதெல்லாம் தூய்மையான ஆட்சி தரவில்லையா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இபிஎஸ் 174 தொகுதிகளில் தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
    • எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார்.

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனின் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் வரும் 30ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

    இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி, 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு சட்டமன்றத் தொகுதி வாரியாக, கடந்த 7.7.2025 முதல் 10.10.2025 வரை, 174 தொகுதிகளில் தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

    இந்தச் சுற்றுப் பயணங்களின்போது, ஆங்காங்கே மக்கள் அலைகடலெனத் திறண்டிருந்து, எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வரவேற்பு அளித்து ஆதரவு தெரிவித்த நிகழ்வுகள், அனைவரையும் பிரம்மிக்க வைத்தது.

    இந்நிலையில்,'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்துடனான எழுச்சிப் பயணத்தின் தொடர்ச்சியாக, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், கோபிசெட்டிபாளையம், முத்துமஹால் திருமண மண்டபம் அருகில், 30.11.2025 - ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணியளவில், நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    தமிழ் நாடு எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சிவில் என்ஜினீயர் வருண் என்பவர் புதிதாக கட்டிடம் கட்டுவது தொடர்பாக சுப்பிரமணியனை சந்தித்துள்ளார்.
    • லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு பிரிவில் உதவியாளராக சுப்பிரமணியம் என்பவர் (வயது 48) பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிவில் என்ஜினீயர் வருண் என்பவர் புதிதாக கட்டிடம் கட்டுவது தொடர்பாக சுப்பிரமணியனை சந்தித்துள்ளார்.

    அப்போது புதிய கட்டிடம் கட்ட அனுமதி கொடுப்பதற்கு ரூ.40 ஆயிரம் வேண்டும் என சுப்பிரமணியம், என்ஜினீயர் வருணிடம் பேசி உள்ளார். பின்னர் முடிவில் ரூ.30 ஆயிரம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் லஞ்ச பணம் கொடுக்க மனம் இல்லாத வருண் இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல் படி வருண் கடந்த 25ம் தேதி கோபி செட்டிபாளையத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். வருண் ரசாயனம் தடவிய பணத்தை சுப்பிரமணியிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை ஏ.டி.எஸ்.பி ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சுப்பிரமணியை கையும் களவுமாக பிடித்தனர்.

    பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர். இந்நிலையில் நகராட்சி மண்டல இயக்குனர் விசாரணை நடத்தி லஞ்ச வழக்கில் சிக்கிய உதவியாளர் சுப்பிரமணியத்தின் மீது நடவடிக்கை எடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் நகராட்சி உதவியாளர் சுப்ரமணியம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    • காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அவ்வையார் பாளையத்தை சேர்ந்தவர் சென்னி. இவரது மகன் ஈஸ்வரமூர்த்தி (வயது 30).இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மில் ஒன்றில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    வெள்ளோடு அருகே உள்ள தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் சங்கீதா (21). இவரும் அதே மில்லில் வேலை செய்து வந்தார்.

    இருவரும் ஒரே மில்லில் வேலை செய்து வந்ததால் இருவருக்கு மிடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்ததாக கூற ப்படுகிறது.

    இவர்கள் 2 பேரும் பழகி வந்தது. அவர்களின் வீட்டுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து காதல் ஜோடியினர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கலிங்கியம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு கேட்டு கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதை தொடர்ந்து அவர்களின் பெற்ேறாரை போலீஸ் நிலையத்துக்கு வர வழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து காதல் ஜோடியை அவர்க ளுடன் அனுப்பி வைத்தனர்.

    அதே போல் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் தீபிகா (21). பி.காம். பட்டதாரியான தீபிகாவின் தாய் உணவகம் நடத்தி வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்.இவரது மகன் கதிரேசன் (27). சரக்கு ஆட்டோ டிரைவரான க திரேசன் அடிக்கடி தீபிகாவின் தாய் நடத்தி வந்த உணவகத்திற்கு சாப்பிட சென்று வருவார். அப்போது, கதிரேசனுக்கும் தீபிகாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது.

    அதைத்தொடர்ந்து இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இவர்களது காதலுக்கு பெற்றோரிடம் எதிர்ப்பு கிளம்பியது.

    அதைத்தொடர்ந்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கோபி செட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் தஞ்சமடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ நிலைய போலீசார் இரு தரப்பின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதற்கு பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் இதை ஏற்றுக்கொள்ள வில்லை. இதனால் மணமகன் வீட்டிற்கு அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • சிகிச்சை பலனின்றி அர்ச்சுனன் பரிதாபமாக இறந்தார்.
    • விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள முருகன் புதூரை சேர்ந்தவர் அர்ச்சுனன் (55). இவரது மகன் டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று அர்ச்சுனன் தனது மகனை கல்லூரி செல்வதற்காக பஜனைகோவில் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.

    பஸ்சில் அவரது மகன் ஏறியதும், அர்ச்சுனன் வீடு செல்வதற்காக கோபி-ஈரோடு சாலையை கடந்த போது, அந்த வழியாக வந்த நஞ்சகவுண்டன் பாளையத்தை சேர்ந்த சேகர் என்பவர் ஓட்டிச்சென்ற பைக் அர்ச்சுனன் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த சேகர் மற்றும் அர்ச்சனனை மீட்டு சிகிச்சைக்காக கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி அர்ச்சுனன் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சேகர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அர்ச்சுனன் சாலையை கடப்பதும், அப்போது பைக் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட பதை பதைக்க வைக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராவில் பதிவான நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பானிபூரி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
    • 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்படியும், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் அறிவுறுத்தலின் படியும், சத்தியமங்கலம் நகர பகுதியில் உள்ள பானிபூரி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

    ஆய்வில் அசைவ ஓட்டல்களில் செயற்கை வண்ணம் கலந்து சில்லி சிக்கன் தயாரித்து விற்பனை செய்த 2 கடைகள் கண்டறியப்பட்டு ஆயிரம் ரூபாய் வீதம் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் சில்லி புரோட்டா தயாரிப்புக்கு பழைய புரோட்டாவை பயன்படுத்திய ஒரு ஓட்டல் உரிமையாளருக்கு ரூபாய் ஆயிரம் அபராதமும், அஜினோமோட்டோ பயன்படுத்திய ஒரு கடைக்காரருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மொத்தமாக ரூ.4000 அபராதம் விதிக்கப்பட்டது.

    கோபிசெட்டபாளையம் நகர பகுதியில் உள்ள அசைவ உணவகங்கள், பேக்கரி கடைகள் மற்றும் பானி பூரி கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது

    ஆய்வில் சுகாதாரம் இல்லாத 2 கடைகள் கண்டறியப்பட்டு ஒவ்வொரு கிடைக்கும் தலா ரூ.1000 வீதம் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பஜ்ஜி போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்களை நியூஸ் பேப்பரில் வைத்து உண்பதற்கு கொடுத்த 2 கடைகளுக்கு ரூ.1000 வீதம் 2 கடைகளுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் எனவும், பானி பூரி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் தரமான பானி பூரியை பயன்படுத்த வேண்டும் எனவும் பானி பூரி ரசத்தில் செயற்கை வண்ணம் ஏதும் சேர்க்கக் கூடாது எனவும், உணவு பாதுகாப்பு உரிமம் பானி பூரி கடைக்காரர்கள் பெற்றிருக்க வேண்டும் எனவும், முக கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

    ஆய்வில் சத்தியமங்கலம் நகரம் மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம், கோபி நகரம் உணவு பாதுகாப்பு அலுவலர் குழந்தைவேல் மற்றும் புஞ்சை புளியம்பட்டி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.

    • கோபிசெட்டிபாளையம் டவுன் பகுதியில் உள்ள கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • ஓடை அமைந்துள்ள பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க ஊஞ்சக்காட்டு மாரியம்மன் கோவில் வீதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. மதியம் 3 மணிக்கு பிறகு திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்து தொடங்கியது.

    கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோபிசெட்டிபாளையத்தில் மதியம் 3.45 மணி முதல் மாலை 4.30 மணி வரை சுமார் 45 நிமிடம் மழை கொட்டியது. கோபிசெட்டிபாளையத்தில் மட்டும் மாவட்டத்தில் அதிகபட்சமாக 62.20 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    இதன் காரணமாக கோபிசெட்டிபாளையம் டவுன் பகுதியில் உள்ள கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஊஞ்சக்காட்டு மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள 20 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. உடனடியாக நகராட்சி பொறியாளர் சிவகுமார் அடங்கிய குழுவினர் குடியிருப்புக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்ற முயற்சி மேற்கொண்டனர். பின்னர் ஒரு மணி நேரத்திற்குள் குடியிருப்பில் சூழ்ந்த மழை நீர் வற்றியது.

    மழைக்காலத்தில் குடியிருப்புகள் தண்ணீர் புகாத வகையில் ஓடை அமைந்துள்ள பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க ஊஞ்சக்காட்டு மாரியம்மன் கோவில் வீதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேப்போல் கொடிவேரிப்பள்ளம் அணை, வரட்டுப்பள்ளம், பவானிசாகர், குண்டேரிப்பள்ளம் அணை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதேப்போல் அம்மாபேட்டை, கவுந்தப்பாடி, சென்னிமலை, பெருந்துறை போன்ற பகுதியில் சாரல் மழை பெய்தது.

    ஈரோடு மாநகர பகுதியில் லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கோபிசெட்டிபாளையம்-62.20, எலந்த குட்டைமேடு-23.60, கொடிவேரிஅணை-11, அம்மாபேட்டை-9.40, வரட்டுப்பள்ளம்-8.40, கவுந்தப்பாடி-6.40, சென்னிமலை-4, பெருந்துறை-3, குண்டேரிப்பள்ளம் -2.20, பவானிசாகர்-1.80, ஈரோடு-1.20.

    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் 90 சதவீதம் அதாவது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
    • கடையடைப்பு போராட்டம் காரணமாக கோடிக்கணக்கான வர்த்தகம் முடங்கியது.

    நகராட்சியில் டிரேடு லைசென்ஸ் என்ற பெயரில் வருடம் தோறும் ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விதித்துள்ள கட்டணத்தை குறைக்க வேண்டும். கடை மற்றும் வீட்டு வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மின்சார கணக்கெடுப்பை மாதம் ஒருமுறை என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபிசெட்டிபாளையம் ஆல் டிரேடர்ஸ் அசோசியேசன் சார்பில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி கோபிசெட்டிபாளையம் பகுதியில் 90 சதவீதம் அதாவது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.பஸ் நிலையப் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.


    இதே போல் கடைவீதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டல்கள், மளிகை கடைகள், நகைக் கடைகள், ஜவுளி

    க்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கடையடைப்பு போராட்டம் காரணமாக கோடிக்கணக்கான வர்த்தகம் முடங்கியது. இதே போல் கோபிசெட்டிபாளையத்தில் இன்று காலை முதல் மாலை வரை தியேட்டரில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

    • கோபிசெட்டிபாளையம் நகராட்சி மாதாந்திர கூட்டம் இன்று காலை 10 மணியளவில் நகர்மன்ற தலைவர் தலைமையில் நடை பெற்றது.
    • கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 13 பேர் மின் கட்டண உயர்வை கண்டித்தும் வெளிநடப்பு செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் நகராட்சி மாதாந்திர கூட்டம் இன்று காலை 10 மணியளவில் நகர்மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் பிரேம்ஆனந்த் முன்னிலை வகித்தார்.

    கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 13 பேர் மின் கட்டண உயர்வை கண்டித்தும், அதனை வாபஸ் பெற வேண்டியும் கையில் பதாகைகள் ஏந்தியவாறு கோஷமிட்டனர்.

    இதனையடுத்து கவுன்சிலர்கள் 13 பேரும் கூட்ட த்தில் இருந்து வெளிநடப்பு செய்து நகராட்சி அலுவலகம் நுழைவு வாயில் பகுதியில் நின்று பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர்.

    பின்னர் சிறுது நேரம் கழித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளே சென்ற னர். அப்போது நகர்மன்ற தலைவர் கூட்டம் முடிந்தது என்று சொன்னவுடன் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    • கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை வாய்கால்களிலிருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
    • உரம், பூச்சி மருந்து, ஆட்கூலி ஆகியவற்றின் விலை உயர்ந்து உள்ளதால் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்து வருகிறது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை வாய்கால்களிலிருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை கோபி, அந்தியூர் மற்றும் பவானி,சத்தி,பாசன பகுதிகளுக்கு உட்பட்ட சுமார் 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில், அதிகளவில் முதல் போக நெல் சாகுபடி செய்திருந்தனர்.

    ஏ.எஸ்.டி., 16 (இட்லி குண்டு), ஏ.டி.டி. சன்ன ரகம் 45,சம்பா,பொன்னி உள்ளிட்ட ரகங்கள் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர்.

    தற்சமயம், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசன பகுதிகளில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் பங்களாபுதூர், டி.என் .பாளையம்,பாரியூர், வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூலி ஆட்கள் பற்றாகுறை காரணமாக எந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். தற்போது நெல் அறுவுடை செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்..

    விவசாயிகள் தங்கள் அறுவடை செய்யும்நெல்லை கொள்முதல் செய்வ–தற்காக, கோபியில், கூகலூர், நஞ்சகவுண்டன் பாளையம், புதுவள்ளியாம் பாளையம், புதுக்கரைபுதூர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்க–பட்டுள்ளதால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்யும் நெல்களை கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து வருகின்றனர்,

    மேலும் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமாக நெல் சாகுபடி செய்திருப்பதால் தஞ்சை, திருவாருர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்தும் ஏராளமான நெல் அறுவடை எந்திரங்கள் வரவழைக்கபட்டு அறுவடை பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டு வருகிறது..

    மேலும் உரம், பூச்சி மருந்து, ஆட்கூலி ஆகியவற்றின் விலை உயர்ந்து உள்ளதால் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் வரும் காலங்களில் விவசாயமே செய்யமுடியாத நிலை உருவாகும்.

    இதனை தவிர்க்க உடனே உரங்களின் விலையை குறைத்து மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லிற்கு கூடுதல் விலை கொடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோட்டை முனியப்ப சாமி, கன்னிமார், கருப்பராயன் சுவாமி, கோவில் 11-ம் ஆண்டு ஆடித்திருவிழா இன்று நடந்தது .
    • முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை அபிஷேக பூஜை, மற்றும் கன்னிமார், பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பச்சைமலை ரோட்டில் உள்ள கோட்டை முனியப்ப சாமி, கன்னிமார், கருப்பராயன் சுவாமி, கோவில் 11-ம் ஆண்டு ஆடித்திருவிழா இன்று நடந்தது .

    இதையொட்டி 18-ந் தேதி கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல், நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது.

    முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை அபிஷேக பூஜை, மற்றும் கன்னிமார், பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் பொங்கல் வைத்தல், அம்மை அழைத்தல், பெருபூஜை, கிடாய் வெட்டுதல், போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் கோபி, மொடச்சூர் நாயக்கன் காடு, கரட்டூர் பாரியூர்மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டு சென்றனர்.

    ×