search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Food Safety Officers"

    • உணவு பாதுகாப்பு அலுவலர் கொண்ட குழுவினரால் சோதனை நடத்தப்பட்டது.
    • உணவு பொருட்களையும் தனித்தனியே இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெருந்துறை தாலுகா தலைமை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கும் சமையலறை, மூலப்பொருட்கள் இருப்பு அறை மற்றும் உணவு கூடம் ஆகிய இடங்களில் பெருந்துறை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கொண்ட குழுவினரால் சோதனை நடத்தப்பட்டது.

    சோதனையின்போது உணவு பாதுகாப்பு சட்ட விதிகளில் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்படி தரமான மூலப் பொருட்களை கொண்டு, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து நோயாளிகளுக்கு வழங்குவது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.

    மேலும் மூலப் பொருட்களை பாதுகாப்பான முறையில் இருப்பு வைக்கும் முறை மற்றும் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட லேபிள் விபரங்களை கவனித்து வாங்கி, காலாவதி தேதி முடியும் முன்பே அதனை பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.

    மூலப் பொருட்களை உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற நிறுவனத்திடம் இருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். உணவு பொருட்களையும், உணவு பொருள் அல்லாத பொருட்களையும் தனித்தனியே இருப்பு வைக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

    சமையல் கூடத்தின் அனைத்து பகுதிகளிலும் பூச்சி தொற்று நடவடி க்கைகள் சீரான இடை வெளிகளில் மேற்கொ ள்ளப்பட வேண்டும். பணியாளர்கள் தலைக் கவசம், முகவுரை, கையுறை, ஏப்ரன் போன்ற உணவு பாதுகாப்பு கவசங்களை அணிந்து தன் சுத்தம் பேணுவதுடன், தொற்று நோய் தடுப்பு நடவடி க்கைகள் மேற்கொ ண்டதற்கான மருத்துவ தகுதி சான்றிதழ் வைத்தி ருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை மூடி வைத்து உடனுக்குடன் நோயாளிகளுக்கு வழங்குவதுடன், ஒவ்வொரு முறையும் அதில் உணவு மாதிரிகள் சேகரித்து வைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.

    இந்த ஆய்வின்போது அரசு மருத்துவக் கல்லூரி உதவி உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர்.கண்ணன் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • பேக்கரி மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    பவானி:

    ஈரோடு மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்பு துறை ஆணையர் ஆகியோர் உத்திரவின் கீழ் மாவட்ட நியமன அலுவலர் அறிவுறுத்துதலின் படி பவானி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பேக்கரி மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை பவானி நகர அலுவலர் சதீஷ்குமார், வட்டார அலுவலர் லட்சுமி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    15-க்கும் மேற்பட்ட கடைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் முறை யான லேபிள் விபரம் இல்லாத பிரட் வகைகள் சுமார் 3.5 கிலோ கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

    முட்டை பப்ஸ் வகைகளின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டி கவர்கள் 1.2 கிலோ கைப்பற்றப்பட்டது.

    இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்க செயற்கை நிறம் பயன்படுத்தக்கூடாது எனவும், உரிமம் பெறாத கடைகள் உடனடியாக உரிமம் பெற அறிவுறுத்தப் பட்டு 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    சுகாதாரமற்ற முறையில் இயங்கிய ஒரு கடைக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் உணவு பாதுகாப்பு தரம் குறைவு பற்றிய புகாருக்கு 94440 42322 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • 12 கடைகளில்ஆய்வு செய்தனர்.
    • ஐஸ்கட்டி, பார் தரமானதாக இருக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதி காரி விஜயலலிதாம்பிகை தலைமையில் அலுவலர்கள் குழுவினர் குளிர்பா னகடைகள், பழக்கடைகள், பழச்சாறு, ஐஸ் தயாரிப்பு நிறுவனங்களில்பெட்டிகள் தரமானதாக உள்ளதா? என்பது குறித்து 12 கடைகளில்ஆய்வு செய்தனர்.

    அப்போது கோடை காலத்தில் கடைபிடிக்க வே ண்டிய வழிமுறைகள்குறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலி தாம்பிகை கூறியதாவது:- குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்பவர்கள், தாங்கள்உபயோக ப்படுத்தும் ஐஸ்கட்டி, பார் தரமானதாக இருக்க வேண்டும்.அதிக வண்ணங்களை குளிர்பானத்தில் சேர்க்க கூடாது. குளிர் பானம் தயாரிக்கும் இடம் சுத்தமா கவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். பழச்சாறு தயாரித்து விற்பனை செய்பவர்கள், தரமான பழங்களை பயன்படு த்துவதோடு, அதற்கு தேவையான தண்ணீர்,பால் போன்றவை தரமானதாக இருக்கவேண்டும்.பொதுமக்கள் குளிர்பானம், ஐஸ்கள்மலிவான விலையில்அதிக வண்ணங்களில் இருந்தால் அவற்றை உண்ணக்கூடாது. குளிர்பான பாட்டில்கள், உரிய லேபிள் விவரங்கள், தயாரிப்பு, காலாவதி தேதி அறிந்து பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கோடைகாலம் முழுவதும் இதுபோன்ற திடீர் ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும். விதிமீறும் உணவு வணிகர்கள் மீதுசட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க ப்படும். உணவு தொடர்பா னபுகார்களை 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்என்று அறிவித்துள்ளனர்.

    • பேக்கரியில், குடும்பத் தலைவி ஒருவர், ரெட் வெல்வெட் என்ற பெயரில் விலை உயர்ந்த 2 கேக்குகளை வாங்கி உள்ளார்.
    • கெட்டுப் போன கேக்குகளை எடுத்துக்கொண்டு பேக்கரிக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் நியாயம் கேட்டுள்ளார்.

    பல்லடம்:

    பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் பேக்கரி 10க்கும் மேற்பட்ட கடைகளுடன் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள பேக்கரியில், குடும்பத் தலைவி ஒருவர், ரெட் வெல்வெட் என்ற பெயரில் விலை உயர்ந்த 2 கேக்குகளை வாங்கி உள்ளார். பின்னர் அருகில் உள்ள வீட்டுக்குச் சென்று மகள்களுக்கு கேக் சாப்பிட கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட இருவரும் வாந்தி வருவதாக கூறி கேக்கை துப்பி உள்ளனர்.

    இதையடுத்து அவர் கேக்கை முகர்ந்து பார்த்தபோது அது கெட்டுப் போய் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் கெட்டுப் போன கேக்குகளை எடுத்துக்கொண்டு பேக்கரிக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் நியாயம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் வேண்டுமானால் வேறு வாங்கிக்கொள் என அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து பல்லடம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கேசவராஜிடம் அவர் புகார் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் சம்பவ இடம் சென்ற உணவு பாதுகாப்பு அலுவலர் அந்த கடையில் கேக்குகளை ஆய்வு செய்து காலாவதியாகி கெட்டுப்போன கேக்குகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றார். மேலும் கெட்டுப் போன கேக்குகளை இனி விற்பனை செய்யக்கூடாது.உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.இதுகுறித்து அவர் கூறுகையில், கெட்டுப் போன கேக் உணவு பாதுகாப்பு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு, அதன் அறிக்கை வந்த பின்னர் பேக்கரி நிர்வாகம் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார். கெட்டுப்போன கேக்கை விற்ற சம்பவம் பல்லடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×