search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையிலை விற்பனை"

    • தனுஷ்கோடி, அரிச்சல்முனையில் புகையிலை விற்பனையை தடுக்க வேண்டும்.
    • சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றிட வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரை சந்தித்து தனுஷ்கோடி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மறுவாழ்வு சங்க தலைவர் செல்லதுரை கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, அரிச்சல் முனை பகுதியில் 1964 புயலுக்கு முன் ஆயிரக்க ணக்கான மீன வர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த னர்.

    புயலுக்கு பின்னர் முகுந்தராயர் சந்திரம் பகுதியில் மீன்பிடி தொழி லில் ஈடுபட்டு வந்ததாகவும், அதே பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகையை தொடர்ந்து கடைகள் ஏற்படுத்தி பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணி களுக்கு தேவையான பொருட்கள், உணவுகளை விற்பனை செய்து வந்தனர்.

    தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை வரை சாலை அமைக்கப்பட்ட பின்னர் மீனவர்கள் மட்டுமே அந்த பகுதியில் கடை நடத்தி வந்துள்ளனர். ஆனால் தற்போது சில நபர்கள் அத்துமீறி கடை அமைத்து சட்டவிரோமாக புகையிலை, மதுபாட்டில் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருவதால் பாரம்பரியமான மீனவர்களால் அமைக்கப் பட்டுள்ள கடைகளை அகற்றும் நிலை ஏற்பட்டுள் ளது.

    இதனால் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மனு கொடுத்தபோது நிர்வாகிகள் நம்புக்குமார், உமையேசுவரன், சக்திவேல், உமாரவி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

    • விழிப்புணர்வு குறித்த குழுக்கள் ஏற்படுத்தி தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
    • மாவட்ட சமூகநலத்துறை சார்பில் சென்ற மாதம் 15 விழிப்பணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பது மற்றும் விழிப்புணர்வு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடை பெற்றது.

    அனைத்து கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் போதை பொருட்கள் விழிப்புணர்வு குறித்த குழுக்கள் ஏற்படுத்தி ஒவ்வொரு மாதமும் தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், போதை பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணித்திடுமாறு கல்லூரி முதல்வருக்கு அறிவுறுத்தப் பட்டது.

    மாவட்டத்தில் 490 பள்ளிக்கூடங்களில் இது தொடர்பான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலரால் தெரிவிக்கப்பட்டது. எஞ்சி யுள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி கூடங்களில் போதை பொருட்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு குழுக்கள் மாணவர்களை கொண்டும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்காணிப்பா ளராகவும் நியமித்திடுமாறும் ஒவ்வொரு மாதமும் விழிப்பு ணர்வு கூட்டங்கள் நடத்துவது குறித்து திட்டமிடப்பட்ட அறிக்கையினை சமர்ப்பித்திடு மாறும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவு றுத்தப்பட்டது. மாவட்ட சமூகநலத்துறை சார்பில் சென்ற மாதம் 15 விழிப்பணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊரக பகுதி தொழிற்சாலைளில் மக்களிடையே போதை பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து நடத்திடுமாறு சமூகநலத்துறை அலுவலருக்கு தெரிவிக்கப் பட்டது.

    ஊராட்சி, பேரூராட்சி அள வில் பொதுமக்களிடையேயும் விளிம்புநிலை மக்களிடையேயும் தொடர்ந்து விழிப்பு ணர்வு ஏற்படுத்திட வேண்டும் என ஊராட்சி, பேரூராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சுயஉதவி குழுக்கள் மூலம் தயார் செய்யப்படும் பொருட்களின் உறை மீது போதை விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. கடற்கரை பகுதிகளிலும், விசை படகு களிலும் மீன்வளத்துறை, காவல்துறை மற்றும் கடலோர காவல் படையினர் திடீர் தணிக்கை மேற்கொள்ளு மாறும் அறிவுறுத்தப்பட்டது.

    மாவட்டத்தில் 19 மொத்த விற்பனை மருந்தகங்கள் மற்றும் 41 சில்லறை விற்பனை மருத்தகங்களில் மருந்து கட்டுப்பாட்டு அலுவரால் தணிக்கை செய்யப்பட்டதில் வடக்கு சர்ச் ரோடு முகவரியிலுள்ள ஒரு மெடிக்கல் கடையில் விதி மீறல் மருந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால் மருந்துக்கள் மற்றும் ஒப்பனை சட்ட படி விதி மீறல் நோட்டீஸ் வழங்கப் பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்களை சுற்றி அமைந்துள்ள கடைகளில் புகையிலை போன்ற அனுமதியில்லா பொருட்களை பறிமுதல் செய்த வகையில் 19 கடைகளுக்கு, ரூ.23,800/- சுகாதாரதுறையினரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை போலீசார் மூலம் போதை பொருட்கள் பயன்படுத்திய வகையில் 31 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. மதுவிலக்கு ஆயத்தீர்வை மூலமும் சேவை வழங்குநர்களுடன் இணைந்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் அறிவு றுத்தப்பட்டது. பொதுமக்கள் மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாடு ஏதேனும் கண்டறியப்பட்டால் அது குறித்து விபரங்களை 7010363173 தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த தகவல்களின் ரகசியம் காக்கப்படும் என மாவட்ட கலெக்டரால், தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட அளவிலான கூட்ட குழு உறுப்பினர்களான மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பி ரமணியம், பத்மனாபபுரம் சார்ஆட்சியர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், உசூர் மேலாளர் சுப்பிரமணியன், நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன் குமார் உட்பட துறை சார்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    • புகையிலை பொருட்களை விற்பனை செய்தவழக்கில் கைது செய்யப்பட்டர்.
    • காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகை யில் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே பூ.மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவழக்கில் கைது செய்யப்பட்டர். இந்நிலையில் இவரிட மிருந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில்பணிபுரிந்து வந்த முதல்நிலை போலீசார் பிரபாகரன் ரூ.3,000 கையூட்டாக பெற்றதாக கூறப்படுகிறது.

    இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து கைது செய்யப்பட்ட நபரிடம், கையூட்டு பெற்ற போலீசார் பிரபாகரனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல்போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளி களிடம் தொடர்பில் இருந்துகாவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகை யில் குற்றச்செயல்களில் காவல்துறையினர் ஈடுபட்டாலோ அல்லது துணைபோனாலோ அவர்கள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • 610 பாக்கெட்டுகள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் போதைப்பொருள் குறித்து வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள டீ கடை மற்றும் பெட்டி கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் முதியவர் ஒருவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் பான் மசாலா பாக்கெட்டு உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கடையில் இருந்து 610 புகையிலை பாக்கெட்டு களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகையிலை விற்ற வியாபாரி கைது செய்யப்பட்டார்.
    • அரசு தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக மரக்காணம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கீழ்பேட்டை கிராமத்தில் இசிஆர் மெயின் ரோட்டில் பெட்டி கடை நடத்தி வருபவர் அர்ஜுனன் (வயது 55). இவர் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக மரக்காணம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் மரக்காணம் சப் இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் உடன் சென்று மளிகை கடையை ஆய்வு செய்யும் போது அப்போது அவர் கடையில் வைத்திருந்த புகையிலை பாக்கெட் 15 பறிமுதல் செய்து அர்ஜுனன் மீதுவழக்கு பதிந்து கைது செய்தனர்

    • நெய்வேலியில் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி ஜெயதேவி உள்ளிட்ட போலீசார் நெய்வேலி நகர் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.

    கடலூர்:

    நெய்வேலி நகர பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன் உத்தரவின் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி ஜெயதேவி உள்ளிட்ட போலீசார் நெய்வேலி நகர் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்பொழுது பெரியார் சதுக்கம் அருகில் பாரதி நகரை சேர்ந்த ராமஜெயம் விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். அப்போது அவரது கடையில் சுமார் 10000 மதிப்புள்ள 800 புகையிலை பாக்கெட் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • வடலூரில் ஹான்ஸ் புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனது கடையில் அதேபகுதியில் வசிக்கும் தனது நண்பர் பால்ராஜ் என்பவருடன் சேர்ந்து ஹான்ஸ் விற்பதாக தெரியவந்தது.

    கடலூர்:

    வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின்பேரில் வடலூர் பால்காரன் காலனியில் வசிக்கும் முருகையன் (55), என்பவர் பேப்பர் ஸ்டோர் கடை நடத்தி வருகிறார். தனது கடையில் அதேபகுதியில் வசிக்கும் தனது நண்பர் பால்ராஜ் என்பவருடன் சேர்ந்து ஹான்ஸ் விற்பதாக தெரியவந்தது. அதன்அடிபடையில் கடையை சோதனை செய்தபோது, ஹான்ஸ் புகையிலை பாக்கெட் பண்டல் வைத்திருந்த 2 பேரையும் கைது செய்தனர். 

    ×