search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி கழிவறை"

    • பள்ளி வளாகத்தில் இருந்த கழிவறை மிக மோசமான நிலையில் அசுத்தமாக இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
    • ஜனார்த்தன மிஸ்ரா எம்.பி. கடந்த 2018- ம் ஆண்டும் இதேபோல் கழிவறையை சுத்தம் செய்தார்.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் காட்காரி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. இதில் பாரதிய ஜனதா எம்.பி. ஜனார்த்தன மிஸ்ரா கலந்து கொண்டார். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த கழிவறை மிக மோசமான நிலையில் அசுத்தமாக இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே சிறிதும் தாமதிக்காமல் ஒரு வாளியில் தண்ணீரை எடுத்து வந்து வெறும் கையால் கழிவறையை சுத்தம் செய்தார்.

    எந்தவித உபகரணமும் இல்லாமல் அவர் கழிவறையை சுத்தப்படுத்தியது அங்குள்ளவர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த காட்சிகளை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஜனார்த்தன மிஸ்ரா எம்.பி. கடந்த 2018- ம் ஆண்டும் இதேபோல் கழிவறையை சுத்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கழிவறைக்குள் வைத்து பூட்டுவேன் என பள்ளிக் குழந்தைகளை மிரட்டிய நபர்.
    • சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை அடுத்து நடவடிக்கை.

     பல்லியா:

    உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது.

    அந்த வீடியோவில் பள்ளி குழந்தைகள் பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்வதும், ஒரு நபர் அவர்களை திட்டுவதும் இடம் பெற்றுள்ளது. சொன்னபடி செய்யா விட்டால் கழிவறைக்குள் வைத்து பூட்டி விடுவேன் என்றும் அந்த நபர் மிரட்டுவது அதில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, அந்த பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    இது குறித்து தெரிவித்துள்ள மாவட்ட கல்வி அதிகாரி மணிராம் சிங், சோஹான் பிளாக்கில் உள்ள ஆரம்பப் பள்ளியில் இந்த வீடியோ பதிவு நடந்துள்ளது என்றும், இது தொடர்பாக அந்த பகுதி கல்வி அதிகாரி நடத்திய விசாரணையின் அடிப்படையில் பள்ளி முதல்வர் மிருத்யுஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்றும் கூறினார். தலைமையாசிரியர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

    ×