search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகு விபத்து"

    • கிரேக்க கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.
    • சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து பலத்த காற்றினால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

    கலாமட்டா:

    கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

    தகவலறிந்து கடற்படைக் கப்பல்களுடன் ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர், 6 படகுகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

    இந்த விபத்தில் சிக்கி 59 அகதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து பலத்த காற்றினால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், கிரேக்க கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாயமான பலரை தேடி வருகின்றோம் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    • ஷிகாரா படகுகள் ஏரியின் நடுவில் பயணத்தில் இருந்ததால் காற்று வேகம் தாளாமல் கவிழ்ந்தது.
    • மோசமான காலநிலையின்போது ஏரிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என பொது மக்களுக்கு போலீசார் வேண்டுகோள்.

    ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் பலத்த காற்று வீசியதால் தால் ஏரியில் பயணத்தில் இருந்த ஷிகாரா எனப்படும் மரக்கட்டையால் ஆன படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்தானது. இதில் பயணம் செய்த பயணிகளும் ஏரியில் கவிழ்ந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், ஏரியில் தத்தளித்த 20க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி மன்ஷா சிங் கூறுகையில், "ஷிகாரா படகுகள் ஏரியின் நடுவில் பயணத்தில் இருந்ததால் காற்று வேகம் தாளாமல் கவிழ்ந்தது. மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்" என்றார்.

    மேலும், மோசமான காலநிலையின்போது ஏரிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என பொது மக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • படகு ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழந்தது.
    • படகு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 13 சிறுமி, 2 சிறுவன்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

    நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலம் சொகோடோ அருகே படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 17 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பலர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    சொகோடோ அருகே இருக்கும் பகுதி ஒன்றில் விறகு சேகரிக்க 20-க்கும் மேற்பட்டோர் படகில் கிளம்பியுள்ளனர். படகில் சிறுவர், குழுந்தைகள் உள்ளிட்டோரும் பயணம் செய்துள்ளனர். படகு ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழந்தது. நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    படகில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி செல்வது, மோசமான பராமரிப்பு மற்றும் மழைக்காலத்தில் அங்கு அடிக்கடி ஏற்படும் வெள்ளம் போன்ற காரணங்களால் படகு கவிழும் விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுகிறது. அந்த வகையில் நேற்று ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 13 சிறுமி, 2 சிறுவன்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

    மேலும் படகில் பயணம் செய்து காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இறங்கி உள்ளது.
    • சுற்றுலா பயணிகள் உயிர்காப்பு கவசம் அணிய அறிவுறுத்தல்.

    கன்னியாகுமரி:

    கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி பகுதி கடலில் நடைபெற்ற படகு விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    இந்த படகு விபத்தின் எதிரொலியாக சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் சுற்றுலா படகில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இறங்கி உள்ளது. இங்கு விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் குகன், பொதிகை, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. படகு ஒன்றில் சுமார் 150 பேர் பயணிக்கும் வசதி கொண்டது. சுற்றுலா படகில் செல்லும் அனைவருக்கும் லைப் ஜாக்கெட் (உயிர் காப்பு மிதவை) கொடுக்கப்பட்டு அதை அனைவரும் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், விவேகானந்த நினைவு மண்டபத்துக்கு சென்ற பிறகு தான் அதை அகற்ற வேண்டும் எனவும். படகில் பயணிக்கும் போது சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க எழுந்து நிற்க வேண்டாம் எனவும், சுற்றுலா பயணிகளுக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    ஒரு படகில் 150 பேர் மட்டுமே பயணிக்கும் பொருட்டு அதிக சுற்றுலாப் பயணிகள் ஏறாதவாறு கண்காணிப்பு பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

    • படகில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
    • மாநில மனித உரிமை கமிஷன் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் பகுதியில் நேற்று முன்தினம் கடலில் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்து 22 பேர் பலியானார்கள்.

    படகில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. மேலும் அந்த படகுக்கு ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் அதனை படகு உரிமையாளர் பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    விபத்து நடந்ததும் படகு உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். அவரது செல்போன் சிக்னல் மூலம் போலீசார் அவர் மறைந்து இருந்த இடத்தை கண்டு பிடித்து கைது செய்தனர். அவரிடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமை கமிஷன் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது.

    இதுபோல கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனும் இந்த சம்பவம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். இதற்கான பொறுப்பு தனூர் டி.எஸ்.பி. பென்னியிடம் வழங்கப்பட்டு உள்ளது. அவர் உடனடியாக விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையை தொடங்கி உள்ளார்.

    படகில் 37 பேர் பயணம் செய்ததாகவும் அதில் 10 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது. 22 பேர் பலியாகி உள்ளனர். 5 பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.

    இதில் பலியானவர் குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. இதுபோல மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படுகிறது.

    • கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலியாகினர்.
    • 30 பேர் வரை நீரில் மூழ்கி உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்து விபத்தில் சிக்கியது. இந்தக் கப்பலில் 40 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 30 பேர் நீரில் மூழ்கியுள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது.

    தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    படகு கவிழ்ந்து 9 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நீரில் தத்தளித்தப்படி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 17 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர்.
    • மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

    துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு 2 படகுகளில் 50-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக புறப்பட்டனர். அப்போது திடீரென அதிக காற்று வீசியதால் அந்த படகுகள் கடலில் கவிழ்ந்தன.

    இதுகுறித்து தகவலறிந்த கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    எனினும் இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். நீரில் தத்தளித்தப்படி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 17 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர்.

    இந்த விபத்தில் சிலர் மாயமானதாக கூறப்படுகிறது. அவர்களின் கதி என்ன என்பது தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. எனினும் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

    • மடகாஸ்கரில் கடலில் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் சிக்கி 22 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    அன்டநானரிவோ:

    ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் இருந்து பிரான்ஸ் நாட்டின் மயோட் தீவு நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது. சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் இந்தப் பயணங்கள் பெரும்பாலும் ஆபத்தானதாக அமைந்து விடுகின்றன. மொத்தம் 47 பேர் இந்த படகில் பயணம் செய்தனர். அப்போது இந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்தது.

    தகவலறிந்த கடலோர காவல் படையினர் உடனடியாக கடலுக்குள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    மாயமான சிலரை கண்டுபிடிக்கும் பணியில் மீட்புப்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    • படகில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 27 பேர் இருந்தனர். இந்த படகு ஹொடைடா நகருக்கு அருகே செங்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது.
    • கடலோர காவல்படையினர் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுக நகரம் ஹொடைடா. இங்குள்ள அல்லுஹேயா என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் செங்கடலில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய தீவான கமரன் தீவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக படகில் சென்று கொண்டிருந்தனர்.

    படகில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 27 பேர் இருந்தனர். இந்த படகு ஹொடைடா நகருக்கு அருகே செங்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    ஆனால் அதற்குள் 12 பெண்கள், 7 சிறுவர்கள் மற்றும் 2 ஆண்கள் என 21 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அதே சமயம் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர்.

    அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.

    அதே சமயம் கடலில் வீசிய பலத்த காற்றினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 21 பலியானது ஏமனில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த சில ஆண்டுகளாக அவர் வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் இருந்தார்.
    • வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இத்தாலியில் சமீபத்தில் புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கியதில், பாகிஸ்தானின் முன்னாள் ஹாக்கி வீராங்கனை ஷகிதா ரசாவும் உயிரிழந்திருக்கலம் என அஞ்சப்படுகிறது.

    பாகிஸ்தான் பெண்கள் அணியில் இடம்பெற்றிருந்த ஷகிதா ரசா 2012 மற்றும் 2013-ல் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2019க்கு பிறகு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

    ஆனால், மகனுக்கு உடல்நலக்குறைவு, விவாகரத்து, வேலையின்மை என கடந்த சில ஆண்டுகளாக அவர் வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் இருந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மூன்று வயது மகனுக்கு உயிர்காக்கும் சிகிச்சையை அளிக்க முடியாத அளவுக்கு வருவாய் இல்லாமல் தவித்தார். மகனை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    மகனை காப்பாற்றுவதற்கு பணம் சம்பாதிப்பதற்காகவும், சிகிச்சைக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் பாகிஸ்தானைவிட்டு வெளியேறிய அவர் கடந்த ஆண்டு துருக்கி சென்றுள்ளார். குழந்தையை தன் குடும்பத்தினரிடம் விட்டுச் சென்றுள்ளார். குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். விபத்து நடந்த அன்றும் பேசியிருக்கிறார்.

    புகைப்படங்கள் மற்றும் அவரது கழுத்தில் அணிந்திருந்த செயினை வைத்து ஷகிதா ராசாவின் உடலை குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் அவரது இறப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த படகு விபத்தில் கிட்டத்தட்ட 70 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. 

    • கடற்கரைக்கு சில மீட்டர் தொலைவில் உள்ள பாறைகள் மீது படகு மோதியுள்ளது.
    • இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இந்த கோர சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.

    ரோம்:

    இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரைக்கு அருகே புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்த இத்தாலி கடலோர காவல்படை மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று மாலை நிலவரப்படி 43 சடலங்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். 80 பேர் உயிர் பிழைத்தனர். அவர்களில் சிலர் படகு விபத்துக்குள்ளானதும் நீந்தி கரைக்கு வந்துள்ளனர்.

    கலப்ரியா பிராந்தியத்தின் ரிசார்ட் அருகே கடற்கரைக்கு சில மீட்டர் தொலைவில் உள்ள பாறைகள் மீது படகு மோதியதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. வேறு யாரேனும் உயிர் பிழைத்திருக்கிறார்களா? என கடற்பகுதியில் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இந்த கோர சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். மேலும் கடலில் அதிக உயிரிழப்புகளைத் தவிர்க்க, முறையற்ற வகையில் புலம்பெயரும் பயணங்களை தடுத்து நிறுத்துவதாக உறுதியளித்தார்.

    • இரவு முழுவதும் தொடரந்து நடத்திய தேடுதலில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
    • முதல்வர் நிதிஷ்குமார், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    பீகாரில் கங்கை மற்றும் அதன் கிளை நதிகளில் ஒன்றான கங்கை சங்கமிக்கும் இடத்தில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    படகில் விவசாயிகள் 10 பேரை ஏற்றிக் கொண்டு சென்றபோது, திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மூன்று பேர் நீந்திச் சென்று உயிர் தப்பிய நிலையில் மற்றவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.

    இரவு முழுவதும் தொடரந்து நடத்திய தேடுதலில் குழந்தைகள் உள்பட 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    இதனிடையே, இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் நிதிஷ்குமார், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

    ×