என் மலர்
கிரீஸ்
- கான்ஸ்டண்டைன் தனது 23-ம் வயதில் கிரீசின் மன்னராக அரியணை ஏறினார்.
- கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் தனது 82வது வயதில் மரணமடைந்தார்.
ஏதென்ஸ்:
கிரீஸ் நாட்டின் மன்னராக 1964 முதல் 1973 வரை பதவி வகித்தவர் இரண்டாம் கான்ஸ்டன்டைன். இவர் தனது 23-ம் வயதில் கிரீசின் மன்னராக அரியணை ஏறினார்.
கிரீசில் மன்னாராட்சி முறைக்கு 1967-ம் ஆண்டு எதிர்ப்பு எழுந்த நிலையில் 2-ம் கான்ஸ்டன்டைன் நாட்டை விட்டு வெளியேறினார். அதன்பின், 1974-ம் ஆண்டு மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு மக்களாட்சி நடைமுறைக்கு வந்ததால் அவர் அதிகாரப்பூர்வமாக மன்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மக்களாட்சி மலர்ந்த நிலையில் பின்னர் நாடு திரும்பினார்.
இந்நிலையில், கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரான 2-ம் கான்ஸ்டெண்டைன் இன்று மரணமடைந்தார். வயது முதிர்வு, உடல்நலக் குறைவு காரணமாக தனது 82 வயதில் அவர் மரணமடைந்தார். உடல்நலக் குறைவால் ஏதென்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2-ம் கான்ஸ்டண்டைன் மரணமடைந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
- ரிக்டர் அளவு கோலில் 5.5 புள்ளியாக நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
- பயந்து போன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
கிரீஸ்:
கிரீஸ் நாட்டில் வடகிழக்கு பகுதியான கிரீட் என்ற இடத்தில் இன்று அதிகாலை 1.25 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியது.
பயந்து போன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். ரிக்டர் அளவு கோலில் 5.5 புள்ளியாக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சுனாமி பீதி ஏற்பட்டதால் கடலோர பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் உடனே காலி செய்து விட்டு உயரமான இடங்களுக்கு செல்லுமாறு தகவல் பரவியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
- நிலநடுக்கம் 12.7 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
- நிலநடுக்கம் கிரீசின் தலைநகர் ஏதென்ஸ் மற்றும் பெலோபொன்னீஸ் பகுதியிலும் உணரப்பட்டது.
ஐரோப்பிய நாடான கிரீசின் மத்திய பகுதியில் உள்ள கொரிந்த் வளைகுடாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகளாக பதிவானது.
நிலநடுக்கம் 12.7 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தெரியவில்லை.
இந்த நிலநடுக்கம் கிரீசின் தலைநகர் ஏதென்ஸ் மற்றும் பெலோபொன்னீஸ் பகுதியிலும் உணரப்பட்டது.
- 2 படகுகளும் நிலை தடுமாறி பாறைகள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- காணாமல் போன பலரை தேடும் பணி நடந்து வருகிறது.
துருக்கியில் இருந்து கீரிசுக்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் 2 படகுகளில் அகதிகளாக தப்பி சென்றனர். அப்போது கடுமையான சூறாவளி காற்று வீசியது. இதனால் 2 படகுகளும் நிலை தடுமாறி பாறைகள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து, படகில் பயணம் செய்த அகதிகள் கடலில் மூழ்கினார்கள். சிலர் கடலில் தத்தளித்தபடி இருந்தனர். இதுபற்றி அறிந்ததும் கடலோர காவல்படையினர் விரைந்து சென்று 30 பேரை பத்திரமாக மீட்டனர். 15 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். மேலும், காணாமல் போன பலரை தேடும் பணி நடந்து வருகிறது.
- ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர்.
- ஜனவரி மாதம் மத்திய தரைக்கடல் பகுதியில் 64 பேர், படகு விபத்தில் இறந்திருப்பதாக சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏதென்ஸ்:
துருக்கியில் இருந்து இத்தாலி நோக்கி அகதிகள் சென்ற படகு கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது. ஏஜியன் கடலில் கார்பதோஸ் தீவு பகுதியில் படகு மூழ்கியது. இதுபற்றி தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும் விமானப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். படகில் சுமார் 80 பேர் பயணம் செய்த நிலையில், அவர்களில் 29 பேர் மீட்கப்பட்டதாகவும், 50 பேரை காணவில்லை என்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த கடற்பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீட்பு பணி சவாலாக உள்ளது.
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பிழைப்புதேடி ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர். அவர்களில பலர் கிரீஸ் நாட்டையே தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் துருக்கி வழியாக கிரீஸ் நாட்டிற்கு, ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்ளும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் 64 பேர், படகு விபத்தில் இறந்திருப்பதாக சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல் மைகோனோஸ் தீவில் கடந்த ஜூன் மாதம் படகு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 108 பேர் மீட்கப்பட்டதாக ஐநா அகதிகள் அமைப்பு கூறி உள்ளது.
- கிரீஸ் நாட்டின் வடக்கே உக்ரைன் நாட்டு சரக்கு விமானம் விபத்திற்குள்ளானது.
- இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஏதென்ஸ்:
உக்ரைனைச் சேர்ந்த விமான நிறுவனத்தின் அன்டனோவ் சரக்கு விமானம் செர்பியாவில் இருந்து ஜோர்டான் நோக்கி புறப்பட்டுச் சென்றது.
விமானத்தின் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, அருகிலுள்ள கவலா விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் விமான நிலையத்திற்கு 40 கி.மீட்டருக்கு முன்பே அந்த விமானம் விபத்தில் சிக்கியதாக செர்பிய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், சரக்கு விமானம் விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 8 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய விமானம் நீண்ட நேரம் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து சம்பவ இடம் வந்த தீயணைப்புப் படைவீரர்கள் தீயை அணைத்தனர்.
- கிரீஸ் நாட்டின் வடக்கே உக்ரைன் நாட்டு சரக்கு விமானம் விபத்திற்குள்ளானது.
- இந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற விவரம் தெரியவில்லை.
ஏதென்ஸ்:
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனம் ஒன்றின் ஆன்டனோவ் ரக சரக்கு விமானம் செர்பியாவில் இருந்து புறப்பட்டு ஜோர்டான் நோக்கி சென்றது.
இந்நிலையில், விமானத்தின் என்ஜின்களில் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அருகிலுள்ள கவலா விமான நிலையத்தில் தரையிறக்க விமானிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. விமான நிலையத்திற்கு 40 கி.மீ. தொலைவு முன்பே அந்த விமானம் விபத்தில் சிக்கியது என கிரீஸ் நாட்டு விமான போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர், என்ன வகை சரக்கு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன என்ற தகவல்கள் தெரியவில்லை.
விமானத்தில் வெடிபொருட்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.