என் மலர்
உலகம்

கிரீசில் விமான சேவை பாதிப்பு: இதுதான் காரணம்
- கிரீஸ் நாடு முழுவதும் விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டது.
- இதனால் அங்குள்ள பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
ஏதென்ஸ்:
கீரிஸ் நாட்டில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கிரீசில் உள்ள விமான போக்குவரத்து தகவல் தொடர்பு மையத்தி ல்ரேடியோ அலைவரிசை அமைப்பில் நேற்று திடீரென கோளாறு ஏற்பட்டது. விமான போக்குவரத்து தொடர்பான தகவல்களைப் பரிமாறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
நாடு முழுவதும் இயங்கும் விமான நிலையங்களில் போக்குவரத்து தொடர்பான செயல்பாடுகள் ஸ்தம்பித்தன. இதனால் நாடு முழுதும் நூற்றுக்கணக்கான விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. விமானசேவை முடங்கியதால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவித்தனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலைய செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஆனாலும், கிரீஸ் வான்வழியாக செல்லும் சில சர்வதேச விமானங்கள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டன.
Next Story






