என் மலர்
இத்தாலி
- விமானம் மோதியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது
- உயிரிழந்த விமானிகளின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஜார்ஜியா மெலோனி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரோம்:
இத்தாலியின் ரோம் நகரின் அருகே இன்று விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது பயங்கர விபத்து ஏற்பட்டது. இரண்டு விமானங்கள் நடுவானில் நேருக்குநேர் மோதிக்கொண்டன. பின்னர் இரண்டு விமானங்களும் தரையில் விழுந்து தீப்பற்றின. இதில் இரண்டு பயிற்சி விமானத்திலும் பயணித்த விமானிகள் உயிரிழந்தனர். விமானம் மோதியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது
இந்த சம்பவம் வேதனை அளிப்பதாக பிரதமர் ஜார்ஜியா மெலோனி கூறி உள்ளார். மேலும் உயிரிழந்த விமானிகளின் குடும்பத்தினர் மற்றும் சக விமானப்படை வீரர்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
விமானிகள் பயிற்சியில் ஈடுபட்ட விமானம் U-208 என்ற இலகுரக, ஒற்றை என்ஜின் கொண்ட விமானம் ஆகும். இதில் விமானியுடன் சேர்த்து 5 பேர் பயணிக்க முடியும். அதிகபட்சமாக 285 கிமீ வேகத்தில் இந்த விமானத்தை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடற்கரைக்கு சில மீட்டர் தொலைவில் உள்ள பாறைகள் மீது படகு மோதியுள்ளது.
- இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இந்த கோர சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.
ரோம்:
இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரைக்கு அருகே புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்த இத்தாலி கடலோர காவல்படை மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை நிலவரப்படி 43 சடலங்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். 80 பேர் உயிர் பிழைத்தனர். அவர்களில் சிலர் படகு விபத்துக்குள்ளானதும் நீந்தி கரைக்கு வந்துள்ளனர்.
கலப்ரியா பிராந்தியத்தின் ரிசார்ட் அருகே கடற்கரைக்கு சில மீட்டர் தொலைவில் உள்ள பாறைகள் மீது படகு மோதியதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. வேறு யாரேனும் உயிர் பிழைத்திருக்கிறார்களா? என கடற்பகுதியில் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இந்த கோர சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். மேலும் கடலில் அதிக உயிரிழப்புகளைத் தவிர்க்க, முறையற்ற வகையில் புலம்பெயரும் பயணங்களை தடுத்து நிறுத்துவதாக உறுதியளித்தார்.
- மக்கள் அஞ்சலிக்காக வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் போப் உடல் வைக்கப்பட்டது.
- 600 ஆண்டுகால வரலாற்றில் பதவி விலகிய ஒரே போப் ஆண்டவர் இவர்.
வாடிகன் சிட்டி:
முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல்நலக் குறைவால் கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார். 600 ஆண்டுகால வரலாற்றில் பதவி விலகிய ஒரே போப் ஆண்டவரான இவர் அண்மை காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் வாடிகனில் அவரது உயிர் பிரிந்தது.
முன்னாள் போப் ஆண்டவரின் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரேசில் அதிபர் லூலா உள்பட உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்டின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். அதிகாலையில் இருந்தே மக்கள் பேராலயத்துக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முதல் நாளான நேற்று 10 மணி நேரம் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சுமார் 25 ஆயிரம் பேர் அஞ்சலி செலுத்தியதாக வாடிகன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரும் 5-ம் தேதி காலை இறுதிச்சடங்குகள் நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 600 ஆண்டுகால வரலாற்றில் பதவி விலகிய ஒரே போப் ஆண்டவர் இவர்
- இவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் இன்று முதல் வைக்கப்படுகிறது.
வாடிகன் :
முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.
600 ஆண்டுகால வரலாற்றில் பதவி விலகிய ஒரே போப் ஆண்டவரான இவர் அண்மை காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் வாடிகனில் அவரது உயிர் பிரிந்தது.
முன்னாள் போப் ஆண்டவரின் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரேசில் அதிபர் லூலா உள்பட உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்டின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் வைக்கப்படுகிறது.
அதை தொடர்ந்து வருகிற 5-ந் தேதி அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தாக்குதல் தொடர்பாக 57 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- இறந்த பெண்களில் நிகோலெட்டா என்பவர் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் தோழி ஆவார்.
ரோம்:
இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் சங்கக் கூட்டம், அங்குள்ள விடுதியில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று இருந்தனர். இந்த கூட்டத்தில் எதிர்பாராத விதமாக திடீரென நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியை வெளியே எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிலர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக 57 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. குடியிருப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கும் அவருக்கும் பிரச்சனை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கி சூட்டில் இறந்துபோன பெண்களில் நிகோலெட்டா என்பவர் தனது தோழி என்றும், அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் பிரதமர் ஜார்ஜியா மெலோனி கூறி உள்ளார்.
- உக்ரைனில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது.
- ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.
ரோம் :
உக்ரைனில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பையும் சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் வருடாந்திர கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.
அதை தொடர்ந்து, உரையாற்றிய போப் ஆண்டவர் உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பேசும்போது திடீரென கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவர் தன்னை தானே தேற்றிக்கொண்டு தொடர்ந்து பேசினார்.
அப்போது அவர், "உக்ரைன் மக்கள் அமைதிக்காக நாங்கள் நீண்டகாலமாக இறைவனிடம் கேட்டோம். தற்போது, அந்தத் தியாக பூமியின் குழந்தைகள், முதியவர்கள், தாய்மார்கள், அப்பாக்கள் மற்றும் இளைஞர்கள் என மிகவும் துன்பப்படுகிறவர்களின் வேண்டுகோளை நான் உங்களுக்கு முன்வைக்க விரும்புகிறேன்" என்றார்.
இதனிடையே உக்ரைன் போர் குறித்து பேசும்போது போப் ஆண்டவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
- இச்சியாதீவில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- மாயமானவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
இத்தாலியில் நடந்த நிலச்சரிவில் சிக்கி 7 பேர் இறந்தனர். அங்குள்ள இச்சியாதீவு சிறந்த சுற்றுலா தளமாக திகழ்கிறது. முற்றிலும் மலைபாங்கான இந்த இடத்துக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அதே போல விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
இந்த தீவில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பிறந்த குழந்தை, 2 சிறுமிகள் உள்பட 7 பேர் இறந்தனர். 5 பேரை காணவில்லை, அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. மாயமானவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
- இத்தாலியில் பெய்து வரும் கனமழையால் நேற்று அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.
- இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தை உள்பட 8 பேர் பலியாகினர்.
ரோம்:
இத்தாலி நாட்டின் இஷியா தீவில் உள்ள காசாமிச்சியோலா நகரில் கடந்த 2 தினங்களாக கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாது பெய்து வரும் பேய் மழையால் நேற்று அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் உள்பட பல கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. பெண்கள், சிறுவர்கள் உள்பட பலர் உயிரோடு புதைந்தனர்.
இதையடுத்து அங்கு உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 13 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக் குழு முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
- ஏடிபி பைனல்ஸ் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், காஸ்பர் ரூட் மோதினர்.
- ஜோகோவிச் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றி அசத்தினார்.
துரின்:
உலக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. பைனல்ஸ் எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் கடந்த 13-ம் தேதி தொடங்கியது.
குரூப் சுற்று முடிவில் நோவக் ஜோகோவிச், டெய்லர் பிரிட்ஸ், காஸ்பர் ரூட் மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். முதல் அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நார்வேயின் காஸ்பர் ரூட் ஆகியோர் மோதினர்.
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டை 6-3 என எளிதில் வென்றார்.
இதன்மூலம் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வீழ்த்திய ஜோகோவிச் கோப்பையை கைப்பற்றி அசத்தினார்.
- ஆபாச படங்கள் பார்ப்பது பலருக்கும் இருக்கும் ஒரு தீமையான பழக்கம்.
- ஆபாச படங்கள் பார்ப்பது தூய்மையான இதயத்தை பலவீனப்படுத்துகிறது.
வாடிகன் :
வாடிகன் நகரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்து பேசியதாவது:-
ஆபாச படங்கள் பார்ப்பது பலருக்கும் இருக்கும் ஒரு தீமையான பழக்கம். பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் கூட ஆபாச படங்களை பார்க்கிறார்கள். ஆபாச படங்கள் பார்ப்பது தூய்மையான இதயத்தை பலவீனப்படுத்துகிறது.
டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களை தேவைக்கு பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அதில் அதிக நேரத்தை வீணடிக்க வேண்டாம். சிற்றின்ப ஆபாசத்திற்காக அவற்றை பயன்படுத்தக்கூடாது. உங்களின் செல்போனில் இருந்து ஆபாச படங்களை நீக்குங்கள். எனவே உங்கள் கையில் சலனம் இருக்காது.
இவ்வாறு போப் ஆண்டவர் பிரான்சிஸ் பேசினார்.