என் மலர்
டென்னிஸ்

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: 2வது சுற்றில் இத்தாலி வீரர் வெற்றி
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
- 2வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் டி மினார் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
துரின்:
உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.
அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் 16-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஜிம்மி கனோர்ஸ் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்டிஸ் டி மினார் இடம்பெற்றனர்.
ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
இந்நிலையில், 2வது சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய முசெட்டி முதல் செட்டை 7-5 என வென்றார். இதற்கு பதிலடியாக அலெக்ஸ் டி மினார் 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை முசெட்டி 7-5 என வென்றார்.






