search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகதி"

    • மலேசியா நோக்கிச் சென்ற படகில் சுமார் 50க்கும் மேற்பட்ட அகதிகள் பயணித்தனர்.
    • விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து வெளியேறிய ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வங்காளதேசம் மற்றும் மியான்மரில் உள்ள முகாம்களில் இருந்து தப்பித்து ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு மலேசியா மற்றும் இந்தோனேசியாவை அடைய முயற்சிக்கின்றனர்.

    அந்த வகையில், மலேசியா நோக்கிச் சென்ற படகில் சுமார் 50க்கும் மேற்பட்ட அகதிகள் பயணித்தனர். இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி இதுவரை 17 சடலங்களை மீட்டுள்ளதாகவும், எட்டு பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    இவர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கிரேக்க கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.
    • சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து பலத்த காற்றினால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

    கலாமட்டா:

    கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

    தகவலறிந்து கடற்படைக் கப்பல்களுடன் ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர், 6 படகுகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

    இந்த விபத்தில் சிக்கி 59 அகதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து பலத்த காற்றினால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், கிரேக்க கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாயமான பலரை தேடி வருகின்றோம் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    • சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து பலத்த காற்றினால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
    • அகதிகள் லிபியாவிலிருந்து புறப்பட்டு இத்தாலி நோக்கிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகு கவிழ்ந்த தகவலை அடுத்து, கடற்படைக் கப்பல்களுடன் ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர், 6 படகுகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

    இந்த விபத்தில் சிக்கி 59 அகதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து பலத்த காற்றினால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து கடலோர காவல் படையினர் கூறுகையில், " அகதிகளை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, இன்று அதிகாலை முதல் விரிவான மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது. கப்பலில் யாரும் லைஃப் ஜாக்கெட் அணியவில்லை. அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை உடனடியாக தெரியவில்லை.

    ஆனால், இவர்கள் லிபியாவிலிருந்து புறப்பட்டு இத்தாலி நோக்கிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார்.

    • ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டில் தங்கி இருப்பதாக தெரிகிறது.
    • சுமார் 68 ஆயிரம் பேர், நூற்றுக்கு மேற்பட்ட அரசு முகாம்களில் தங்கி உள்ளனர்.

    கொழும்பு :

    இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 1983-ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது. அப்போது முதல், இலங்கையில் இருந்து ஏராளமான தமிழர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து தஞ்சம் அடைந்தனர்.

    தற்போது ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டில் தங்கி இருப்பதாக தெரிகிறது. அவர்களில் சுமார் 68 ஆயிரம் பேர், நூற்றுக்கு மேற்பட்ட அரசு முகாம்களில் தங்கி உள்ளனர்.

    இதற்கிடையே, போர் முடிந்து விட்டதால், இந்தியாவில் வசித்து வரும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பு கோரிக்கை விடுத்தது.

    அதை ஏற்று இலங்கை அதிபர் அலுவலகத்தில் ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது. அதிபரின் செயலாளர் சமன் ஏகநாயகே தலைமையில் இந்த ஆலோசனை நடந்தது. அதில், இலங்கை தமிழர்களை அழைத்து வருவது பற்றி விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாட்டில் இருந்து இலங்கை தமிழர்களை அழைத்து வந்து இலங்கையில் மீண்டும் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை கவனிக்க ஒரு குழுவை இலங்கை அரசு நேற்று அமைத்தது.

    அதிபரின் கூடுதல் செயலாளர் சண்டிமா விக்ரமசிங்கே தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குடியேற்றப்பிரிவு உயர் அதிகாரி, வெளியுறவு அமைச்சக உயர் அதிகாரி, பதிவாளர் ஜெனரல் துறையின் உயர் அதிகாரி, நீதித்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

    இலங்கை தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான பணிகளை சென்னையில் உள்ள இலங்கை துணை தூதர் அலுவலகம் ஒருங்கிணைக்கும் என்று இலங்கை அரசின் இணையதளம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களில் 3 ஆயிரத்து 800 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    • மண்டபம் முகாமை சேர்ந்த இலங்கை அகதி தற்கொலை செய்து கொண்டார்.
    • வேலைக்கு செல்லாமல் செல்போனில் வீடியோ கேம் விளையாடியதை கண்டித்ததால் விபரீத முடிவு எடுத்துள்ளார்.

    ராமநாதபுரம்

    இலங்கையை சேர்ந்த அந்தோணி என்பவரின் மகன் நிரோஜன் (வயது22). இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து செல்போனில் கேம் விளையாடி கொண்டு திரிந்துள்ளார்.

    இதனை இவரது தாய் கண்டித்து வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதில் மனவேதனை அடைந்த நிரோஜன் வீட்டிலிருந்த எலி பேஸ்டை தண்ணீரில் கலந்து குடித்து விட்டு வீட்டிற்கு பின்புறம் படுத்துக்கொண்டார். இதனை பார்த்த அவரது நண்பர்கள், நிரோஜனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்பு மண்டபம் கேம்ப் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்குஅவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார்.

    பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிரோஜன் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×