search icon
என் மலர்tooltip icon

    துனிசியா

    • கப்பலில் மொத்தம் 57 பேர் பயணம் செய்துள்ளனர்.
    • ஆண்டு கிட்டத்தட்ட 90,000 புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு வந்துள்ளனர்.

    துனிசியா மற்றும் மேற்கு சஹாரா கடற்கரையில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் அகதிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வட ஆபிரிக்கக் கடற்கரையின் பெரும்பகுதி புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான பிரதான நுழைவாயிலாக மாறியுள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தின் பிற பகுதிகளில் இருந்து, சிறந்த வாழ்க்கையின் நம்பிக்கையில் படகுகளில் ஆபத்தான முறையில் பயணங்கள் செய்கின்றனர்.

    இந்த கப்பலில் மொத்தம் 57 பேர் பயணம் செய்துள்ளனர். இதில், 16 பேர் உயிரிழந்த நிலையில் 44 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு பேர் மீட்கப்பட்டனர். இதில் அனைவரும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

    ஐநா அகதிகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு கிட்டத்தட்ட 90,000 புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் துனிசியா அல்லது அண்டை நாடான லிபியாவிலிருந்து வந்தவர்கள் என்று தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துனிசியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்று அரசை வழி நடத்தி வந்தார்.
    • நஜ்லா பவுடன் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.

    துனிசில்:

    வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் முதல் பெண் பிரதமராக 64 வயதான நஜ்லா பவுடன் ரோம்தனே கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார்.

    துனிசிய தேசிய பல்கலைக் கழகத்தில் புவி அறிவியல் பேராசிரியராக பணிபுரிந்த இவர், பிரான்ஸ் நாட்டின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். துனிசியாவில் பல்வேறு பேரிடர் தொடர்பான பணிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தார். கல்வி சீர்திருத்த பணிகளில் முக்கிய பங்காற்றினார். அவர் துனிசியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்று அரசை வழி நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நஜ்லா பவுடனை, பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாக அதிபர் கைஸ் சையத் திடீரென்று அறிவித்தார்.

    நஜ்லா பவுடன் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.

    இதையடுத்து துனிசியாவின் புதிய பிரதமராக அக்மத் ஹச்சானியை அதிபர் நியமித்தார். அக்மத் ஹச்சானி, துனிசியா மத்திய வங்கியில் பணிபுரிந்து வந்தார்.

    துனிஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர் ஆவார். அவர் அதிபர் முன்னிலையில் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் அதிபர் தனது அதிகார வரம்பை கூடுதலாக நீட்டித்து கொண்டதன் மூலம் அப்போதைய பிரதமரை பதவி நீக்கம் செய்து பாராளுமன்றத்தையும் கலைத்து உத்தரவிட்டார். அதன்பின் 2½ மாதங்களுக்கு பிறகு நஜ்லா பவுடனை பிரதமராக நியமிக்கப்பட்டார்.

    கடந்த ஆண்டு திருத்திய அரசியலமைப்பு மூலம் பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. மேலும் அதிபருக்கு வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

    இதற்கிடையே சுமார் 1¾ ஆண்டுகளில் பிரதமர் பதவி வகித்த நஜ்லா பவுடன் திடீரென்று நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக வெளி விவகார மந்திரி உள்பட பல மந்திரிகளை காரணம் தெரிவிக்காமல் பதவி நீக்கம் செய்து அதிபர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 5 பேர் கடலில் மூழ்கி இறந்தனர்.
    • 73 பேரை கடலோர ரோந்து படையினர் மீட்டதாக துனிசியா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    துனிசியா:

    துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு ஏராளமானோர் திருட்டுத்தனமாக படகுகளில் அகதிகளாக சென்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்படி அகதிகளாக தப்பி சென்ற போது 3 படகுகள் கடலில் கவிழ்ந்து மூழ்கியது.

    இதில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 5 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். 6 குழந்தைகள் உள்பட 47 பேர் மாயமாகி விட்டனர். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை.

    73 பேரை கடலோர ரோந்து படையினர் மீட்டதாக துனிசியா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • நீரில் தத்தளித்தப்படி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 17 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர்.
    • மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

    துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு 2 படகுகளில் 50-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக புறப்பட்டனர். அப்போது திடீரென அதிக காற்று வீசியதால் அந்த படகுகள் கடலில் கவிழ்ந்தன.

    இதுகுறித்து தகவலறிந்த கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    எனினும் இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். நீரில் தத்தளித்தப்படி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 17 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர்.

    இந்த விபத்தில் சிலர் மாயமானதாக கூறப்படுகிறது. அவர்களின் கதி என்ன என்பது தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. எனினும் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

    • பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள்.
    • 19 அகதிகள் உயிரிழந்தனர் என்று மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

    ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரால் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள்.

    அவர்கள் கடல் வழியாக படகுகளில் செல்கிறார்கள். வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு கடல் மார்க்கமாக படகில் அகதிகள் சென்றனர். அப்போது அந்த படகு துனிசியா கடலில் கவிழ்ந்தது.

    இதில் 19 அகதிகள் உயிரிழந்தனர் என்று மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

    • ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்ட அகதிகள் படகு விபத்து.
    • படகு கவிழந்து ஏற்பட்ட விபத்தில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 34 பேர் மாயமாகினர்.

    ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது அவர்கள் பெரும்பாலும் கடல் மார்க்கமாக படகுகளில் செல்ல முற்படுகின்றனர்.

    இதில் பல பயணங்கள் ஆபத்தில் முடிந்து விடுகின்றன. இருப்பினும் நாளுக்கு நாள் இவ்வாறு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்ட அகதிகள் படகு ஒன்று நேற்று துனிசியா கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 34 பேர் மாயமாகினர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

    துனிசியாவில் கடந்த 2 நாட்களில் நடந்த 5-வது அகதிகள் படகு விபத்து இதுவாகும். இந்த விபத்துகளில் மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். 67 பேர் மாயமாகி உள்ளனர்.

    ×