search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிபா வைரஸ்"

    • இதுவரை 6 பேர் நிபாவினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது
    • செப்டம்பர் 24 வரை கல்வி நிலையங்களை மூட உத்தரவு

    2019 கடைசியில் தொடங்கி 2020 ஆரம்பத்தில் உலக மக்களை அச்சுறுத்தி, உலக பொருளாதாரத்தையும் ஆட்டம் காண செய்தது கோவிட்-19 பெருந்தொற்று.

    தற்போது தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதல் மக்களிடையே பரவி வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்க பட்டுள்ளதையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கைய் 6 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை இத்தாக்குதலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் நோய் பரவல் அதிகரிப்பதனால் இதற்கான சிகிச்சைக்கு தேவையான மோனோகுளோனல் ஆன்டிபாடீஸ் (monoclonal antibodies) எனும் எதிர்ப்பு மருந்தை ஆஸ்திரேலியாவிடம் இந்தியா கேட்டிருக்கிறது.

    இதற்கிடையே இந்த நிபா தொற்று குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) தலைமை பொறுப்பிலுள்ள டாக்டர். ராஜிவ் பால் (Dr. Rajiv Bahl) தெரிவித்திருப்பதாவது:-

    கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறப்பவர்களின் விகிதாசாரம் 3 சதவீதம் எனும் அளவில் இருந்தது. ஆனால் நிபா தொற்றின் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இறப்பு சதவீதம் 70 வரை இருக்கும். இந்தியா நிபா வைரஸிற்கு எதிராக தடுப்பூசி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    2018-ல் ஆஸ்திரேலியாவிலிருந்து பெறப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்து 10 நோயாளிகளுக்கு பயன்படும் வகையில்தான் கையிருப்பு உள்ளது. இந்தியாவிற்கு வெளியே இந்த நோய்தொற்றில் பாதிப்படைந்தவர்களுக்கு இது தரப்பட்டபோது அவர்கள் முழுவதுமாக குணமடைந்தனர். இதுவரை இந்த மருந்தின் பயன்பாட்டிற்கான முதல் கட்ட ஆய்வு மட்டுமே நிறைவடைந்துள்ளது.

    இவ்வாறு டாக்டர். பால் கூறினார்.

    இதற்கிடையே நிபா வைரஸ் பரவுதல் அதிகரித்துள்ளதால், கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிலையங்களையும் செப்டம்பர் 24 வரை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    "தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் உடன் தொடர்பில் இருப்பவர்கள் எண்ணிக்கை சுமார் 1080 வரை இருக்கும். அதில் 327 பேர் சுகாதாரத்துறை பணியாளர்கள்" என நிலைமையை கண்காணித்து நிர்வகித்து வரும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியிருக்கிறார்.

    கேரளாவின் மற்றோரு அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளாவிற்கு பயணம் செய்வதை தவிர்க்கும்படி அங்குள்ள மக்களை வலியுறுத்தியுள்ளது.

    • கேரளாவையொட்டி உள்ள தமிழகத்திலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • கடந்த 3 நாட்களாக காய்ச்சல் பரிசோதனை எல்லை பகுதிகளில் நடந்து வருகிறது.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

    கேரளாவையொட்டி உள்ள தமிழகத்திலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள 5 சோதனை சாவடிகளிலும் போலீசாருடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கேரளாவில் இருந்து வருபவர்கள் காய்ச்சல் பரிசோதனைக்கு பிறகு குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக காய்ச்சல் பரிசோதனை எல்லை பகுதிகளில் நடந்து வருகிறது. இன்று காலையில் 3-வது நாளாக சோதனை நீடித்தது. இதுவரை கேரளாவில் இருந்து வந்த 2400 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    தெர்மல் ஸ்கேனர் கருவி மூலமாக சுகாதார பணியாளர்கள் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 3 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததையடுத்து அந்த 3 பேரையும் சுகாதார துறை அதிகாரிகள் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து காய்ச்சல் பரிசோதனை நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் மாநகர பகுதியில் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளதா? கொசு உற்பத்தி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். மேலும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    மாநகர பகுதியில் வழக்கத்தை விட தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் காய்ச்சல் பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து வருகிறார்கள்.

    குமரி மாவட்டம் முழுவதும் வழக்கமாக 30 முதல் 35 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தினசரி பாதிப்பு 40 முதல் 50 ஆக உயர்ந்துள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி, பத்மநாபபுரம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு தனிவார்டு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது
    • நேற்று வரை ஆறு பேர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் கேரள மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய குழு அம்மாவட்டம் சென்று ஆய்வு நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் வருகிற 24-ந்தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள், படிப்பு சார்ந்த நிறுவனங்கள், டியூசன் மையங்கள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் வகுப்புகளுக்கு தடையில்லை.

    கோழிக்கோடு மாவட்டத்தில் 1080 பேர், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாக கருதப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று மட்டும் 130 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 327 பேர் சுகாதார ஊழியர்கள் ஆவார்கள். 29 பேர் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

    22 பேர் மலப்புரம், ஒருவர் வயநாடு, தலா மூன்று பேர் கண்ணூர், திரிச்சூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இந்த தகவலை சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

    • கோழிக்கோட்டில் ஆறு பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு
    • இரண்டு பேர் உயிரிழந்துள்ளதால் மத்தியக் குழு ஆய்வு

    கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. நிபா வைரஸ் குறித்து மத்திய குழு கேரளாவில் ஆய்வு செய்து வருகிறது.

    இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுமாறு மாநில அரசுக்கு கேரள மாநில உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

    திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு ஆணையர், சுகாதார செயலாளருடன் ஆலோசனை நடத்தி இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

    ஒவ்வொரு கேரள மாதத்தின் ஐந்து நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்படும். அந்த வகையில் நாளை நடை திறக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் உயர்நீதிமன்றம் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது.

    கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை ஆறு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    • நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
    • 39 வயது மதிக்கத்தக்க அந்த நபர் தனியார் ஆஸ்பத்திரியில் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தற்போது மீண்டும் நிபா வைரஸ் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இருவர் காய்ச்சல் பாதித்து தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்தடுத்து இறந்தனர்.

    தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கோழிக்கோடு மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. தொற்று பரவலை கட்டுப்படுத்துவம் விதமாக கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை விடப்பட்டிருந்தது.

    நிபா வைரஸ் பாதிப்பு மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் கேரளா வந்தனர். மத்திய சுகாதாரக்குழுவின் மூத்த ஆலோசகரும், நுண்ணுயிரியல் நிபுணருமான மால சாப்ரா தலைமையிலான 6 பேர் குழு சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், கோழிக்கோடு மாலட்ட கலெக்டர் கீதா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    அவர்களிடம் கோழிக்கோடு மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்த மத்திய குழுவினர், தொற்று பாதித்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். தொற்று பாதிப்புக்கு உள்ளான மருதோன்கரை உள்ளிட்ட இடங்களில் மத்திய குழுவினர் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் நிபா வைரஸ் தொற்று கண்டறிவதை தீவிரப்படுத்தும் விதமாக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் இருந்து 2 நடமாடும் ஆய்வக வாகனங்கள் கோழிக்கோட்டுக்கு வந்துள்ளன. அதில் நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு நிபா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கேரளாவின் வடக்கு மாவட்டங்களான மலப்புரம், வயநாடு, திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

    அந்த மாவட்டங்களில் பொது இடங்களுக்கு செல்பவர்கள் முகக்கவசம் அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மருத்துவமனைகளுக்கு வரும் பார்வையாளர்களை கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.

    மேலும் மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறையினருக்கு மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    இந்நிலையில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 39 வயது மதிக்கத்தக்க அந்த நபர் தனியார் ஆஸ்பத்திரியில் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்தார். அவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரி, புனேவில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த நடமாடும் ஆய்வக வாகனத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அவருடன் தொடர்பில் இருந்து வந்த நபர்களின் பட்டியலை சுகாதாரத்துறையினர் சேகரித்து வருகின்றனர். மேலும் ஒரு நபருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

    • நிபா வைரஸ் தொற்றுக்கு முதலில் பலியான நபரின் 9 வயது மகன் மற்றும் மைத்துனருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
    • நோய் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஏதுவாக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தனி வார்டு தொடங்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதன்முதலாக நிபா வைரஸ் பரவியது. அப்போது நிபா ரைவஸ் தொற்று பாதித்து 17 பேர் பலியாகினர். அதன்பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒருசிலர் மட்டும் பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் கேரள மாநிலத்தில் தற்போது மீண்டும் நிபா வைரஸ் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இருவர் காய்ச்சல் பாதித்து தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்தடுத்து இறந்தனர்.

    மருதோன்கரை பகுதியை சேர்ந்த நபர் கடந்த மாதம் 30-ந்தேதியும், அயன்சேரி பகுதியை சேர்ந்த நபர் கடந்த 13-ந்தேதியும் பலியாகினர். அவர்களுக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் அந்த நபர்களின் குடும்பத்தினரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

    அதில் நிபா வைரஸ் தொற்றுக்கு முதலில் பலியான நபரின் 9 வயது மகன் மற்றும் மைத்துனருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநில சுகாதாரத்துறையினர் உஷார் அடைந்தனர். நிபா வைரஸ் பாதித்து இறந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயாரித்தனர்.

    அதில் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்தபோது சிகிச்சை அளித்தவர்கள் என 168 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அவர்கள் தங்கியிருந்த பகுதிகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. அதன்படி கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அயன்சேரி, மருதோன்கரை, திருவள்ளூர், குட்டியாடி, காயக்குடி, வில்லியம்பள்ளி, கவிழும்பாறை ஆகிய 7 ஊராட்சிகளில் 47 வார்டுகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

    கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செல்லவும், அந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. தொற்று பாதித்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டனர்.

    நிபா தொற்று பாதித்து இறந்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களாக பட்டியலிடப்பட்டவர்களில் சிலரது மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில் 24 வயது மதிக்கத்தக்க சுகாதார பணியாளர் ஒருவருக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் கேரளாவில் நிபா வைரஸ் பாதித்த நபர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள முதலில் பலியான நபரின் 9 வயது மகன், மைத்துனர், சுகாதார பணியாளர் உள்ளிட்ட 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    நோய் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஏதுவாக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தனி வார்டு தொடங்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள தாலுகா மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கோழிக்கோடு மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. தொற்று பரவலை கட்டுப்படுத்துவம் விதமாக கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை விடப்பட்டிருந்தது.

    அதனை நாளை வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மேலும் தனியார் பயிற்சி மையங்கள் மற்றும் டியூசன் மையங்களும் மூடப்பட்டன. அனைத்து பொது நிகழ்ச்சிகள், விழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்த வருகிற 24-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில் நிபா வைரஸ் பாதிப்பு மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் கேரளா வந்தனர். மத்திய சுகாதாரக்குழுவின் மூத்த ஆலோசகரும், நுண்ணுயிரியல் நிபுணருமான மால சாப்ரா தலைமையிலான 6 பேர் குழு சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், கோழிக்கோடு மாலட்ட கலெக்டர் கீதா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    அவர்களிடம் கோழிக்கோடு மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்த மத்திய குழுவினர், தொற்று பாதித்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். தொற்று பாதிப்புக்கு உள்ளான மருதோன்கரை உள்ளிட்ட இடங்களில் மத்திய குழுவினர் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் நிபா வைரஸ் தொற்று கண்டறிவதை தீவிரப்படுத்தும் விதமாக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் இருந்து 2 நடமாடும் ஆய்வக வாகனங்கள் கோழிக்கோட்டுக்கு வந்துள்ளன. அதில் நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு நிபா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கேரளாவின் வடக்கு மாவட்டங்களான மலப்புரம், வயநாடு, திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

    அந்த மாவட்டங்களில் பொது இடங்களுக்கு செல்பவர்கள் முகக்கவசம் அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மருத்துவமனைகளுக்கு வரும் பார்வையாளர்களை கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.

    மேலும் மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறையினருக்கு மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

    • எல்லையில் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
    • எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.

    பெங்களூரு:

    கேரளாவில் 'நிபா' வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்கு கேரளாவில் 2 பேர் உயிரிழந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேருக்கு 'நிபா' வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் நிபா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பீதி ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்திலும் நிபா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க கர்நாடக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடகத்தில் கேரள எல்லையில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல் கேரள மாநில எல்லையில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்திலும் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தட்சிண கன்னடா மற்றும் அண்டை மாநில எல்லையோர மாவட்ட அதிகாரிகளுக்கு காய்ச்சல் கண்காணிப்பை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கோழிக்கோடு வழியாக கர்நாடக வருபவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து தகுந்த மருந்து, மாத்திரைகள் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் கேரள எல்லையில் இருக்கும் குடகு, தட்சிண கன்னடா பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. எல்லையில் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் நோய்த் தொற்றுகளுக்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், உயர்சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
    • கொரோனா, பன்றிக் காய்ச்சல், காசநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் முன்எச்சரிக்கையாக அரசு மருத்துவமனைகளில் அதற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை, தேனி, கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் தனி அறைகள் அமைக்கப்பட்டு தனித்தனியே சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை நிபா வைரஸ் பாதிப்புடன் எவரேனும் அனுமதிக்கப்பட்டால் அவரிடம் இருந்து பிறருக்கு பரவாமல் தடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இதுகுறித்து மருத்துவ கல்வி ஆராய்ச்சி இயக்க அதிகாரிகள் கூறியதாவது:-

    ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் நோய்த் தொற்றுகளுக்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், உயர்சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில் கொரோனா, பன்றிக் காய்ச்சல், காசநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தற்போது நிபா வைரஸ் தொற்று கேரளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதன் தாக்கம் எதுவும் இல்லை. இதுவரை அந்த அறிகுறிகளுடன் எவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை.

    இருந்த போதிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதற்கென சிறப்பு அறைகள் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன. டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ உதவியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகள், கவசங்களும் இருப்பில் உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
    • கோழிக்கோடு நகரில் மக்கள் கூட்டமாக கூடுவதை வருகிற 24-ந்தேதி வரை தவிர்க்க உத்தரவு பிறப்பிக்க மாவட்ட கலெக்டருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இருவர் காய்ச்சல் பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்தடுத்து இறந்தனர். மருதோன்கரை பகுதியை சேர்ந்த நபர் கடந்த மாதம் 30-ந்தேதியும், அயன்சேரி பகுதியை சேர்ந்த நபர் கடந்த 13-ந்தேதியும் இறந்தனர்.

    அவர்களுக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய தொற்று நோயியல் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் அவர்கள் இருவருக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

    மேலும் முதலில் பலியான நபரின் குடும்பத்தினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து அந்த நபரின் மனைவி, குழந்தைகள் மற்றும் மைத்துனர் உள்ளிட்டோரிடம் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அவர்களில் அந்த நபரின் 9 வயது மகன் மற்றும் மைத்துனருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    நிபா வைரஸ் பாதிப்புக்கு 2 பேர் பலியானதை தொடர்ந்து, அவர்களது தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை மாநில சுகாதரத்துறையினர் சேகரித்தனர். குடும்பத்தினர், உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் மற்றும் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்தபோது சிகிச்சை அளித்தவர்கள் என 168 பேர் கண்டறியப்பட்டனர்.

    அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் தங்கியிருந்த பகுதிகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அயன்சேரி, மருதோன்கரை, திருவள்ளூர், குட்டியாடி, காயக்குடி, வில்லியம்பள்ளி, கவிழும்பாறை ஆகிய 7 ஊராட்சிகளில் 47 வார்டுகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

    கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அந்த பகுதிகளில் மருத்து, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகளை தவிர மற்ற கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில் நிபா தொற்று பாதித்து இறந்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களாக பட்டியலிடப்பட்டவர்களில் சிலரது மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில் 24 வயது மதிக்கத்தக்க சுகாதார பணியாளர் ஒருவருக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே 4 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சுகாதார பணியாளரும் பாதிக்கப்பட்டு உள்ளதால் கேரளாவில் நிபா வைரஸ் பாதித்த நபர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு கண்ட றியப்பட்டுள்ள முதலில் பலியான நபரின் மகன், மைத்துனர், சுகாதார பணியாளர் உள்ளிட்ட 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 789 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 157 பேர் சுகாதார பணியாளர்கள் ஆவர். காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு யாருக்கும் இருக்கிறதா? என்பதை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    நோய் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஏதுவாக கோழிக்கோடு பகுதியில் உள்ள ஏராளமான மருத்துவ மனைகளில் போதுமான அளவு அறைகள் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பு கவச உடையணிந்து பணியாற்றுகிறார்கள். தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 13 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    சிலர் தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களின் உடல்நிலை டாக்டர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. நிபா வைரஸ் பாதிப்புக்கு முதலில் இறந்த நபரின் மகன் கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    கோழிக்கோடு மாவட்டத்தில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட மருதோன்கரை மற்றும் அயன்சேரி ஊராட்சிகளில் உள்ள 313 வீடுகளில் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்நிலையில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கோழிக்கோடு மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்துவம் விதமாக கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.

    மேலும் அனைத்து பொது நிகழ்ச்சிகள், விழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் 10 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான ஆய்வு கூட்டம் முடிந்தபிறகு, சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் மற்றும் கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் இதனை தெரிவித்தனர்.

    கோழிக்கோடு நகரில் மக்கள் கூட்டமாக கூடுவதை வருகிற 24-ந்தேதி வரை தவிர்க்க உத்தரவு பிறப்பிக்க மாவட்ட கலெக்டருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. சமீபகால நிகழ்வுகளுக்கு முன்னதாக திட்டமிடப்பட்ட கோவில் திருவிழாக்கள், தேவாலய விருந்துகள் உள்ளிட்ட சமய நிகழ்வுகளை குறைந்தபட்ச மக்கள் பங்கேற்புடன் நடத்த வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

    • இன்றும் 2-வது நாளாக தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • கேரளாவில் இருந்து வரும் அந்த மாநில அரசு பஸ்களில் ஏறி, பயணிகளிடம் ‘நிபா’ வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    செங்கோட்டை:

    கேரள மாநிலத்தில் 'நிபா' வைரசால் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு அதற்கான அறிகுறிகள் இருக்கலாம் என்ற அச்சமும் அங்கு நிலவி வருகிறது.

    இதனால் தமிழகத்தில் கேரள மாநில எல்லைகளை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் நிபா வைரஸ் தமிழகத்தில் பரவிடாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் சுகாதாரத்துறையினர் நேற்று முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கேரளாவில் இருந்து புளியரை வழியாக தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை சாவடியில் நிறுத்தி அதில் இருப்பவர்களுக்கு உடல் வெப்பநிலையை கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்து வருகின்றனர். இன்றும் 2-வது நாளாக தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்காக புளியரை சோதனை சாவடியில் ஒரு சுகாதார ஆய்வாளர், 2 உதவியாளர்கள் என 3 பேர் கொண்ட மருத்துவக்குழு சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். வாகனங்களில் வருபவர்களை பரிசோதனை செய்யும்போது ஏற்படும் வாக்குவாதங்களை தடுக்க பாதுகாப்புக்கு சுழற்சி முறையில் போலீசாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

    மோட்டார் சைக்கிள், கார் என அனைத்து விதமான வாகனங்களிலும் வருபவர்களை நிறுத்தி உடல் வெப்பநிலை உள்ளிட்ட அனைத்து சோதனைகளும் கொரோனா பரிசோதனை போலவே மேற்கொள்ளப்படுகிறது. கேரளாவில் இருந்து வரும் அந்த மாநில அரசு பஸ்களில் ஏறி, பயணிகளிடம் 'நிபா' வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகிறது. பரிசோதனையில் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் புளியரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவர்களிடம் முகவரி பெறப்பட்டு தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் என்றனர்.

    • கோழிக்கோடு நகரில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
    • நோயாளிகளுக்குத் தேவைப்படும் தடுப்பு மருந்தை வழங்க தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புக்கொண்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சலைத் தொடா்ந்து 2 போ் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, அவா்களுடன் தொடர்பில் இருந்த உறவினா்கள் 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களின் ரத்த மாதிரிகள், நிபா தொற்று பரிசோதனைக்காக புனேவில் அமைந்துள்ள தேசிய தீநுண்மியியல் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பரிசோதனையின் முடிவில், உயிரிழந்த 2 பேருக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் தெரிவித்தாா். உயிரிழந்தவா் ஒருவரின் 9 வயது மகன் மற்றும் உறவினா் என 2 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

    இதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கோழிக்கோடு நகரில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

    கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நிபா தொற்று பாதிப்பு தொடா்பாக பேரவையில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

    அதற்கு பதிலளித்துப் பேசிய மாநில சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜாா்ஜ், 'மாநிலத்தில் பரவும் நிபா வைரசானது அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட வங்கதேச வகையைச் சாா்ந்தது. ஆனால், தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது.

    தேசிய தீநுண்மியியல் கழகத்தின் (என்.ஐ.வி.) தொற்றுநோயியல் நிபுணா்கள் சென்னையில் இருந்து கேரளாவுக்கு வந்து தொற்று பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்வா். நிபா தொற்று பாதித்த நோயாளிகளுக்குத் தேவைப்படும் தடுப்பு மருந்தை வழங்க தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புக்கொண்டுள்ளது.

    கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் தற்காலிக ஆய்வகம் அமைத்து நிபா தொற்றைப் பரிசோதிக்கவும் மாநிலத்தில் வௌவால்கள் குறித்து கணக்கெடுத்து ஆய்வு நடத்தவும் புனே என்.ஐ.வி. குழு வருகின்றனா்.

    கண்காணிப்பு, மாதிரி பரிசோதனை, ஆராய்ச்சி மேலாண்மை, தொடா்பு கண்டறிதல், நோயாளிகளின் போக்குவரத்து மேலாண்மை மற்றும் பிற பணிகளுக்காக 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று பரவலைத் தடுப் பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திறம்பட மேற்கொள்ளப் பட்டு வருகிறது' என்றாா்.

    தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள கோழிக்கோடு மாவட்டத்தின் ஆத்தஞ்சேரி, மருதோங்கரா, திருவள்ளூா், குட்டியாடி, காயக்கொடி, வில்லியப்பள்ளி, கவிலும்பாறை ஆகிய 7 கிராமங்கள் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தவிர புறமேரி கிராமப் பஞ்சாயத்தில் ஒரு வாா்டு கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுவை சுகாதாரத்துறை தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
    • ஒருவேளை வைரஸ் பரவும் சூழ்நிலை வந்தால் நிச்சயமாக புதுவை பிராந்தியமான மாகியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் கேரளா மாநிலத்தையொட்டி உள்ள புதுவை பிராந்தியமான மாகியில் புதுவை சுகாதாரத்துறை தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    குறிப்பாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

    இந்த வைரஸ் பற்றி மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை. புதுவையில் யாருக்கும் நிபா வைரஸ் அறிகுறிகள் இல்லை. அதேநேரத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    கேரளாவில் இருந்து வரும் ரெயிலை நிறுத்துவது ஊரடங்கு பிறப்பிப்பது போன்ற அவசரகால சூழ்நிலைகள் இப்போது எழவில்லை. அந்தளவுக்கு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கேரளத்தில் பரவும் வைரஸ் என்ன? என கண்டறிந்துள்ளனர். அது பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.

    ஒருவேளை வைரஸ் பரவும் சூழ்நிலை வந்தால் நிச்சயமாக புதுவை பிராந்தியமான மாகியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கேரளாவில் இருந்து வருவோரை பரிசோதனை செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை இப்போது இல்லை. அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், பரிசோதனை செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் புதுவை சுகாதாரத்துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் புதுவை பிராந்தியமான மாகியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி-கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×