search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய தீநுண்மியியல் கழகம்"

    • கோழிக்கோடு நகரில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
    • நோயாளிகளுக்குத் தேவைப்படும் தடுப்பு மருந்தை வழங்க தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புக்கொண்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சலைத் தொடா்ந்து 2 போ் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, அவா்களுடன் தொடர்பில் இருந்த உறவினா்கள் 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களின் ரத்த மாதிரிகள், நிபா தொற்று பரிசோதனைக்காக புனேவில் அமைந்துள்ள தேசிய தீநுண்மியியல் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பரிசோதனையின் முடிவில், உயிரிழந்த 2 பேருக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் தெரிவித்தாா். உயிரிழந்தவா் ஒருவரின் 9 வயது மகன் மற்றும் உறவினா் என 2 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

    இதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கோழிக்கோடு நகரில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

    கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நிபா தொற்று பாதிப்பு தொடா்பாக பேரவையில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

    அதற்கு பதிலளித்துப் பேசிய மாநில சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜாா்ஜ், 'மாநிலத்தில் பரவும் நிபா வைரசானது அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட வங்கதேச வகையைச் சாா்ந்தது. ஆனால், தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது.

    தேசிய தீநுண்மியியல் கழகத்தின் (என்.ஐ.வி.) தொற்றுநோயியல் நிபுணா்கள் சென்னையில் இருந்து கேரளாவுக்கு வந்து தொற்று பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்வா். நிபா தொற்று பாதித்த நோயாளிகளுக்குத் தேவைப்படும் தடுப்பு மருந்தை வழங்க தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புக்கொண்டுள்ளது.

    கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் தற்காலிக ஆய்வகம் அமைத்து நிபா தொற்றைப் பரிசோதிக்கவும் மாநிலத்தில் வௌவால்கள் குறித்து கணக்கெடுத்து ஆய்வு நடத்தவும் புனே என்.ஐ.வி. குழு வருகின்றனா்.

    கண்காணிப்பு, மாதிரி பரிசோதனை, ஆராய்ச்சி மேலாண்மை, தொடா்பு கண்டறிதல், நோயாளிகளின் போக்குவரத்து மேலாண்மை மற்றும் பிற பணிகளுக்காக 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று பரவலைத் தடுப் பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திறம்பட மேற்கொள்ளப் பட்டு வருகிறது' என்றாா்.

    தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள கோழிக்கோடு மாவட்டத்தின் ஆத்தஞ்சேரி, மருதோங்கரா, திருவள்ளூா், குட்டியாடி, காயக்கொடி, வில்லியப்பள்ளி, கவிலும்பாறை ஆகிய 7 கிராமங்கள் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தவிர புறமேரி கிராமப் பஞ்சாயத்தில் ஒரு வாா்டு கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×