search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதார துறை"

    • புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கூட்டத்தை நடத்தியுள்ளேன்.
    • 2, 3 நாட்களில் கொரோனாவின் தீவிரம் என்ன? என்பது தெரியவரும்.

    பெங்களூரு:

    இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் உருமாறிய ஜே.என்-1 வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அந்த மாநில அரசு புதிய வைரஸ் பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளதால் கர்நாடகத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி கர்நாடக சுகாதாரத்துறைக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து மாநிலம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கொரோனா பரவலை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் எல்லை மாவட்டங்களான குடகு, மங்களூரு, சாம்ராஜ்நகர் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவை ஒட்டியுள்ள எல்லை மாவட்டங்களில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கூட்டத்தை நடத்தியுள்ளேன். இதில் கொரோனாவை தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம். சில ஆலோசனைகளை அந்த குழு வழங்கியுள்ளது.

    60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட இணை நோய்கள் உள்ளவர்கள், சளி, காய்ச்சல் உள்ளவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வலியுறுத்தப்பட்டது. இன்னும் 2, 3 நாட்களில் கொரோனாவின் தீவிரம் என்ன? என்பது தெரியவரும். தற்போதைக்கு கர்நாடகம் சகஜ நிலையில் உள்ளது. பாதிப்பு அதிகரித்தால் மட்டும் பல்வேறு தடைகள் விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். தற்போது அத்தகைய சூழ்நிலை எழவில்லை. அதனால் யாரும் கவலைப்பட தேவை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று ஒரே நாளில் 16 ஆக உயர்ந்துள்ளது.
    • தொற்றுடன் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 50ஐ நெருங்கியது.

    தமிழகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்து இரட்டை இலக்கமாக உயர்ந்தது.

    கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தினசரி பாதிப்பு 9 வரை பதிவான நிலையில் இன்று ஒரே நாளில் 16 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 50ஐ நெருங்கியது.

    தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை பொது சுகாதாரத் துறை அதிகரித்துள்ளது. அதன்படி, தினசரி பரிசோதனை எண்ணிக்கை 300ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    • பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கேரளா அதிகாரிகள் தெரிவித்தாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
    • எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்டிபிசியார் சோதனை அதிகப்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

    சென்னை:

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,

    புதிய வைரஸ் தொற்று கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பரவி வருவதாகவும், கேரளாவில் 230 பேர் இது வரை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

    இது தொடர்பக தமிழ்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் கேரளா சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கேரளா அதிகாரிகள் தெரிவித்தாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    பெரிய அளிவில் பாதிப்பு இல்லை என்பதால் பொதுமக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

    தமிழ்நாட்டில் காய்ச்சல் எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்டிபிசியார் சோதனை அதிகப்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பல்வேறு விதமான உருமாற்றங்களை பெற்று வருகிறது. தற்போது இருப்பது எந்த மாதிரியான உருமாற்றம் என்பதை குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கான முடிவுகள் ஒரு வாரத்தில் தெரியவரும்  என்றார்.

    • டெங்கு காய்ச்சல் பாதிப்பு 61 ஆக உயர்ந்துள்ளது.
    • கிராம பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளில் சுகாதார துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    மதுரை

    உலக அளவிலும் இந்திய அளவிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் தமிழகத்திலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சுகாதாரத் துறையும் ஊரக உள்ளாட்சித் துறையும் இணைந்து வீடு வீடாக சென்று தேங்கி இருக்கும் நீரை அகற்றுவது தொடர் பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். நல்ல நீரில் தான் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் என்பதால் வீடு மற்றும் அருகில் உள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

    மேலும் குடிநீர் தொட்டி களை மூடி வைக்க வேண்டும் எனவும், தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் எனவும், அவர் கள் அறிவுறுத்தி வருகின்ற னர். காய்ச்சல் அறிகுறி இருந்தால் சுய மருத்துவம் செய்து கொள்ளாமல் உடனடியாக அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற வேண்டும் எனவும், மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை தரக்கூடாது என மருந்து கடைகளுக்கும் அறிவுரை தரப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மதுரை யில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 61 ஆக உயர்ந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக் கென சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வார்டில் 25 குழந்தை களுக்கான படுக்கைகள், 44 பெரியவர்களுக்கான படுக்கைகள், ஐ.சி.யூ. பிரிவில் பெரியவர்களுக்கு 20 படுக்கைகள், குழந்தை களுக்கு 15 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களை உடனடியாக இந்த வார்டில் அனுமதித்து சிறப்பு சிகிச்சை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வார்டில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் சிப்ட் முறையில் செயல்படும் சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இன்று ஒரு நாளில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள் ளது. அவர்கள் அரசு ஆஸ்பத்திரி சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மதுரை மாவட்டம் முழு வதிலும் 70-க்கும் மேற்பட் டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்ற னர். மாவட்ட அளவில் இன்று காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக் கப்பட்டுள்ளது.

    அவர்களுக்கு டெங்கு பாதிப்பு உள்ளதா? என்பதை உறுதி செய்வ தற்காக ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்ப பட்டுள்ளது. இதற்கிடையே நகர், கிராம பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளில் சுகாதார துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • கோழிக்கோடு நகரில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
    • நோயாளிகளுக்குத் தேவைப்படும் தடுப்பு மருந்தை வழங்க தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புக்கொண்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சலைத் தொடா்ந்து 2 போ் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, அவா்களுடன் தொடர்பில் இருந்த உறவினா்கள் 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களின் ரத்த மாதிரிகள், நிபா தொற்று பரிசோதனைக்காக புனேவில் அமைந்துள்ள தேசிய தீநுண்மியியல் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பரிசோதனையின் முடிவில், உயிரிழந்த 2 பேருக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் தெரிவித்தாா். உயிரிழந்தவா் ஒருவரின் 9 வயது மகன் மற்றும் உறவினா் என 2 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

    இதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கோழிக்கோடு நகரில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

    கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நிபா தொற்று பாதிப்பு தொடா்பாக பேரவையில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

    அதற்கு பதிலளித்துப் பேசிய மாநில சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜாா்ஜ், 'மாநிலத்தில் பரவும் நிபா வைரசானது அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட வங்கதேச வகையைச் சாா்ந்தது. ஆனால், தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது.

    தேசிய தீநுண்மியியல் கழகத்தின் (என்.ஐ.வி.) தொற்றுநோயியல் நிபுணா்கள் சென்னையில் இருந்து கேரளாவுக்கு வந்து தொற்று பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்வா். நிபா தொற்று பாதித்த நோயாளிகளுக்குத் தேவைப்படும் தடுப்பு மருந்தை வழங்க தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புக்கொண்டுள்ளது.

    கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் தற்காலிக ஆய்வகம் அமைத்து நிபா தொற்றைப் பரிசோதிக்கவும் மாநிலத்தில் வௌவால்கள் குறித்து கணக்கெடுத்து ஆய்வு நடத்தவும் புனே என்.ஐ.வி. குழு வருகின்றனா்.

    கண்காணிப்பு, மாதிரி பரிசோதனை, ஆராய்ச்சி மேலாண்மை, தொடா்பு கண்டறிதல், நோயாளிகளின் போக்குவரத்து மேலாண்மை மற்றும் பிற பணிகளுக்காக 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று பரவலைத் தடுப் பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திறம்பட மேற்கொள்ளப் பட்டு வருகிறது' என்றாா்.

    தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள கோழிக்கோடு மாவட்டத்தின் ஆத்தஞ்சேரி, மருதோங்கரா, திருவள்ளூா், குட்டியாடி, காயக்கொடி, வில்லியப்பள்ளி, கவிலும்பாறை ஆகிய 7 கிராமங்கள் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தவிர புறமேரி கிராமப் பஞ்சாயத்தில் ஒரு வாா்டு கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • தகவல் அறிந்த நகராட்சி சுகாதார துறையினர் அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடித்துச் சென்றனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்று வட்டாரத்தில் தெருநாய் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குமாரபாளையம் சின்னப்பநாயக்கன் பாளையத்தில் கும்பலாக சுற்றித்திரிந்த தெருநாய்கள் அவ்வழியாக வருவோர், செல்வோரை எல்லாம் கடித்து குதறியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த நகராட்சி சுகாதார துறையினர் அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடித்துச் சென்றனர்.

    இது குறித்து சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், வெறிநாய் பொதுமக்களை கடித்தது குறித்து தகவல் கிடைத்தவுடன் அதற்குரிய வாகனம் மற்றும் ஆட்களை அனுப்பி வைத்து நாய்கள் பிடிக்கப்பட்டன. நகரில் உள்ள நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, என்றார்.

    • மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது.
    • தினமும் 2, 3 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் மீண்டும் கொேரானா பாதிப்பு அதிக ரிக்க தொடங்கியுள்ளது.

    இதையடுத்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரு கிறது. பள்ளித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. கொரோ னாவை கட்டுப்படுத்தும் விதத் தில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண் டும் என்று அரசு வேண்டு கோள் விடுத்துள்ளது. மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்திலும் மருத்துவ முகாம்கள் நடை பெற்று வருகிறது. நடமாடும் மருத்துவ குழு மூலமாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளிலும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் ஏற்கனவே நடந்து வரும் மருத்துவ முகாம்களில் தினமும் 2, 3 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் சளி பாதிப் பால் 25-க்கும் மேற்பட் டோர் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இது ஒரு புறம் இருக்க கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருவதாக குமரி மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே கடந்த மாதத்தில் 15 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் இந்த மாதத்தில் இதுவரை 25-க்கும் மேற் பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவு றுத்தப்பட்டுள்ளது. அரசு தெரிவித்துள்ள விதிமுறை களை கடைபிடிக்க வேண் டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. குமரி மாவட்ட எல்லை பகுதிகளிலும் சுகா தா ரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

    வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    • சீனாவில் இருந்து சேலம் வந்த மகுடஞ்சாவடியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    • கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜவுளி வியாபாரியை கண்காணிப்பதற்காக மகுடஞ்சாவடியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.

    மகுடஞ்சாவடி:

    சீனாவில் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் நமது நாட்டிலும் அந்த வகை தொற்று பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவைக்கு விமானத்தில் வந்த சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த ஜவுளி வியாபாரிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அவருக்கு இருப்பது புதிய வகை கொரோனாவா? என்பது குறித்து கண்டறிய சளிமாதிரிகள் மரபணு சோதனைக்காக சென்னையில் உள்ள மாநில சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த ஜவுளி வியாபாரி, மகுடஞ்சாவடியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் நோய் தொற்று அறிகுறி இல்லை. எனினும் அவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

    மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவக்குழுவினர் கொரோனா பாதித்த ஜவுளி வியாபாரியை காலை மற்றும் மாலை இருவேளையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுதவிர, அந்த நபரின் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நோய் தொற்று அறிகுறியுடன் யாரேனும் வசிக்கிறார்களா? என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    எனவே, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மகுடஞ்சாவடி பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து மகுடஞ்சாவடி பகுதியில் கண்கா ணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது. சுகாதார, மருத்துவ துறை யினர் மகுடஞ்சாவடியில் முகாமிட்டுள்ளனர்.

    • சங்கராபுரம் அருகே சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 19 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சாா்பில் 2-வது தவணை செலுத்தி 6 மாதம் முடிந்த தகுதியுடைய அனை வருக்கும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. பேரூராட்சி மன்றதலைவர் ரோஜாரமணிதாகப்பிள்னள தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செங்குட்டுவன், பேரூராட்சி துணைத் தலைவர் ஆஷாபி ஜாகிர்உசேன் ஆகியோர் முன்னிலையில் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாசில், ராமச்சந்திரன், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதே போன்று தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சாா்பில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி வரவேற்றார். முகாமில் 19 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.

    ×