search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாளை"

    • மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில், வல்லன் குமாரன்விளை, தடிக்கா ரன்கோணம், வடசேரி மற்றும் ஆசாரிபள்ளம் உப மின் நிலையங்களிலும், அதனை சார்ந்துள்ள பகுதிகளிலும் நாளை (21-ந் தேதி) மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன் கோவில், எம்.எஸ்.ரோடு, காலேஜ் ரோடு, கோர்ட்டு ரோடு, கே.பி. ரோடு, பால் பண்ணை, நேசமணி நகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதி புரம், அனந்த நாடார்குடி. புத்தேரி, இறச்சக்குளம், பூதப்பாண்டி, கீரிப்பாறை, தடிக்கா ரன்கோணம், மாறாமலை, பால்குளம், அவ்வை யாரம்மன் கோவில், கனகமூலம் குடியிருப்பு, சீதப்பால், கடுக்கரை, காட்டுபுதூர், அருமநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களுக்கு நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாள் முதல் 12 நாட்கள் சந்தன களப அபிஷேகம் நடைபெறும்
    • பிரம்ப கலசம் எனப்படும் பெரிய கலசத்தில் சந்தன களபம் நிறைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    108 வைணவ திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாள் முதல் 12 நாட்கள் சந்தன களப அபிஷேகம் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு பின்னர் நடக்கும் முதல் களப பூஜை நாளை (14-ந்தேதி) தொடங்குகிறது.

    இதையொட்டி காலை நிர்மால்ய தரிசனத்துக்கு பின்னர் கோவில் கருவறையில் இருந்து ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய அர்ச்சனா மூர்த்தி சிலைகள் ஒற்றைக்கல் மண்டபத்துக்கு எடுத்து வரப்படுகிறது. அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து கருவறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து காலை 9 மணிக்கு கோவில் பிரகாரத்தை 3 முறை சுற்றி வரும் ஸ்ரீபலி பூஜை நடக்கிறது. 10 மணிக்கு மீண்டும் கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்துக்கு சிலைகள் எடுத்து வரப்படுகிறது.

    பின்னர் உதய மார்த்தாண்ட மண்டபத்தில் 12 கலசங்கள் வைத்து தந்திரி கலச பூஜை நடத்துவார். மேலும் பிரம்ப கலசம் எனப்படும் பெரிய கலசத்தில் சந்தன களபம் நிறைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. 12 மணிக்கு ஆதிகேசவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய அர்ச்சனா மூர்த்தி சிலைகளுக்கு களப அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    பின்னர் பட்டாடை அணிவிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்படும். இதேபோல் நாளை முதல் வருகிற 26-ந்தேதி வரை 12 நாட்கள் மதியம் களப அபிஷேகம் நடைபெறுகிறது.

    களப பூஜையின் இறுதி நாளான 27-ந்தேதி காலை 10 மணிக்கு 47 கலசங்கள் வைத்து பூஜை நடக்கிறது. பின்னர் மஞ்சள் களப அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து பெருந்திரு அமிர்து பூஜை நடைபெறுகிறது.களப பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், பக்தர்களும் செய்துள்ளனர்.

    • தியேட்டர்களில் கட் அவுட் வைக்க அனுமதி மறுப்பு
    • ரசிகர்கள் ஏமாற்றம்

    நாகர்கோவில்:

    பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாட பொதுமக்கள் தயாராகி வரும் நிலையில் பொதுமக்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பொங்கல் பண்டிகையை யொட்டி விஜய் நடித்த வாரிசு படமும், அஜித் நடித்த துணிவு படமும் வெளியாகிறது.

    இதையடுத்து விஜய், அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் அஜித் இருவரது படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவிலில் விஜய் நடிக்கும் வாரிசு படம் 2 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதே போல் அஜித் நடித்த துணிவு படமும் 2 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.

    இதையடுத்து ரசிகர்கள் தியேட்டர் முன்பு கட் அவுட்கள் வைக்க ஏற்பாடுகள் செய்தனர். 2 ரசிகர்களும் கட் அவுட்டு கள் வைக்க போலீசாரின் அனுமதி கேட்டனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து அனுமதி கேட்டனர்.அவர்களும் தியேட்டருக்கு வெளியே கட் அவுட் வைக்க அனுமதி மறுத்துள்ளனர்.

    தியேட்டருக்குள் கட் அவுட் வைத்தால் அதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் தியேட்டர் நிர்வாகமே முழு பொறுப்பு என்று தெரிவித்தனர். இத னால் தியேட்டர் உரிமை யாளர்களும் கட்அவுட் வைப்பதற்கு அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படு கிறது. வழக்கமாக புதிய படங்கள் வெளியானால் தியேட்டர்களின் வெளியே கட்அவுட்டுகள் வைப்பது வழக்கமாகும். ஆனால் தற்பொழுது கட்அவுட்டுகள் வைக்க அனுமதி மறுக்கப் பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    நாகர்கோவிலில் விஜய் நடித்த வாரிசு படம் நாளை 11-ந்தேதி அதிகாலை 6.00 மணிக்கு முதல் காட்சி வெளியிடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. இதே போல் அஜித் நடித்த வாரிசு படம் நாளை காலை 7.30 மணிக்கு திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    2 படத்திற் கான டிக்கெட்டுகளும் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள்.முதல் நாள் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாக ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர்.

    நாகர்கோவிலை தவிர்த்து வெள்ளிச்சந்தை, குழித்துறை பகுதியில் உள்ள தியேட்டர்களிலும் விஜய் அஜித் படங்கள் வெளியிடப்படுகிறது.

    • தினமும் 200 பேருக்கு வழங்க ஏற்பாடு
    • பொது மக்களுக்கு ரூ.1000 ரொக்கப் பணத்தை வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    பொங்கல் பண்டிகையை யொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    இதையடுத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.குமரி மாவட்டத்தை பொருத்த மட்டில் 764 ரேசன் கடைகள் மூலமாக 5 லட்சத்து 74 ஆயிரத்து 764 ரேசன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியில் ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்தந்த ரேஷன் கடை ஊழியர்கள் ரேசன் கார்டு தாரர்களுக்கு டோக்கன் வழங்கி உள்ளனர். தினமும் காலை 100 பேருக்கும் மாலையில் 100 பேருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க டோக்கன் வழங்கப் பட்டுள்ளது. நாளை 9-ந் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

    இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் மேயர் மகேஷ், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதை தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுதொகுப்பு பொது மக்களுக்கு வழங்கப் படுகிறது. இதற்கு தேவையான பொருட்கள் அந்தந்த ரேஷன் கடை களுக்கு அனுப்பி வைக்கப் பட்டு வருகிறது.

    ஏற்கனவே அரிசி சீனி வகைகள் முழுமையாக அனைத்து ரேசன் கடை களுக்கும் அனுப்பி வைக்கப் பட்ட நிலையில் கரும்பு அனுப்பும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது.

    நாளை ரேஷன் கடை ஊழியர்களிடம் பொது மக்களுக்கு வழங்க உள்ள ரூ.1000 ரொக்கப் பணத்தை வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ரேஷன் கடை மூலமாக பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.

    கூட்டத்தினை கட்டுப்ப டுத்தும் வகையில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனின் அடிப்படையில் அந்தந்த ரேஷன் கடை களுக்கு சென்று பொங்கல் தொகுப்புகளை பெற்று செல்லுமாறு அதிகா ரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • 5-ம் திருநாளில் கருட தரிசனம் விமரிசையாக நடந்தது.
    • மார்கழி திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. 3-ம் திருவிழா நாளில் இரவு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிர மணிய சுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் சுசீந்திரம் கோவிலுக்கு வந்ததும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    5-ம் திருநாளில் கருட தரிசனம் விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 7-ம் திருநாளான நேற்று இரவு கைலாச பர்வதம் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இன்று காலை சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா நடந்தது.

    9-ம் திருவிழா நாளான நாளை (5-ந் தேதி) தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர், பிட்சாடனராக திருவீதி உலா செல்கிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் மற்றும் விநாயகர் தேர்கள் இழுக்கப் படுகின்றன.

    முன்னதாக 3 சாமிகளும் சிறப்பு அலங்காரத்துடன் தேர்களுக்கு எழுந்தருளு கின்றனர்.தொடர்ந்து தீபா ராதனை நடைபெற்றதும் தேர்கள் இழுக்கப்படு கின்றன. மாலையில் மண்டகப்படிக்கு தங்க பல்லக்கில் சுவாமி எழுந்தரு ளுகிறார்.

    இரவு 12 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிர மணிய சுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் விடைபெறும் சப்தாவர்ண நிகழ்ச்சி நடக்கிறது. 10-ம் நாள் நிறைவு விழாவில் காலை 10 மணிக்கு ஆரூத்ரா தரிசனம், அஷ்டாபிஷேகம் நடக்கிறது. மாலையில் நடராஜர் வீதி உலா, இரவில் ஆராட்டு போன்றவை நடக்கிறது.

    • மார்கழி திருவிழா கடந்த 28-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது
    • திருவெம்பாவை இசை நிகழ்ச்சி நடந்தது.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் மார்கழி திருவிழா கடந்த 28-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 3-ம் திருவிழாவான நேற்று காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, 8.30 மணிக்கு திருவெம்பாவை இசை நிகழ்ச்சி நடந்தது.

    மாலை 5.30 மணிக்கு பக்தி இன்னிசை மற்றும் மண்டகபடிக்கு சுவாமி எழுந்தருளல், இரவு 10 மணிக்கு கற்பக விருச்ச வாகனத்தில் சுவாமி திரு வீதி உலா வருதல் நடந் தது. தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங் கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் தனது தாய் தந் தையருக்கு நடக்கும் திருவி ழாவில் பங்கெடுக்கும் 'மக் கள் மார் சந்திப்பு' நிகழ்ச்சி நடந்தது.

    4-ம் திருவிழாவான இன்று காலை 8 மணிக்கு பூதவாகனத்தில் சுவாமி திரு வீதி உலா நடந்தது. இரவு 10மணிக்கு பக்தி இன்னிசை, 10.30 மணிக்கு மேளதா ளங்கள் முழங்க பரங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    5-ம் திருவிழாவான நாளை ஜனவரி 1-ந்தேதி காலை 6 மணிக்கு வீர மார்த்தாண்ட விநாயகர் கோவில் முன், சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோரை கருடன் வலம் வரும் 'கருட தரிசன நிகழ்ச்சி' நடக்கிறது. 9-ம் திருவிழாவான ஜனவரி 5-ந்தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    • அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம் நிகழ்ச்சி நடக்கிறது.
    • அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையும் மாலை 5.30 மணி முதல் இரவு 8.45 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் கட்டப்பட்டு உள் ளது.

    இந்த கோவிலில் நாளை புத்தாண்டு தரிச னத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழ மை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து 4.30 மணிக்கு நிவேத்திய பூஜை நடக்கிறது. பின்னர் அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அதைத்தொடர்ந்து 8 மணி முதல் 9 மணி வரை தோமாலை சேவை, நிவேத்திய பூஜை, அர்ச்சனை போன்றவை நடக்கிறது. அதன்பிறகு 9 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை சர்வ தரிசனத்துக்காக நடை திறந்து வைக்கப்படுகிறது.

    அதன் பிறகு 5 மணி முதல் 5.30 மணி வரை தோமாலை சேவை, நிவேத்திய பூஜை, அர்ச்சனை போன்றவை நடக்கிறது. பின்னர் 5.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 8.45 மணி முதல் 9 மணி வரை வெங்கடேஸ்வர பெருமாள் பள்ளியறை எழுந்தருளும் ஏகாந்த சேவை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த தகவலை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி தெரிவித்து உள்ளார்.

    • பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்
    • ஓட்டல்களில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாட வேண்டும்

    நாகர்கோவில்:

    கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

    கடந்த 2 ஆண்டு களாக புத்தாண்டு கொண்டாட் டங்கள் எளிய முறை யில் நடந்தது. இந்த ஆண்டு புத் தாண்டு கொண்டாட் டத்தை வெகு விமர்சை யாக கொண்டாட பொது மக்கள் தயாராகி வரு கிறார்கள். குமரி மாவட் டத்தில் புத்தாண்டு கொண் டாட்டத்தையடுத்து கோவில் களில் சிறப்பு பூஜை கள் நடந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை நடக்கிறது. நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் ஆலயத்தில் நடைபெறும் நள்ளிரவு பிரார்த்தனையில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்து செய்தி வழங்கு கிறார்.

    இதே போல் அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலிநடக்கிறது. சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆல யங்களிலும் புத்தாண்டு யொட்டி சிறப்பு பிரார்த்த னைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டை வரவேற்கும் வகையில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் மின்விளக்கு அலங்காரத் தில் ஜொலிக்கிறது.

    கன்னியாகுமரியில் ஓட்டல்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டு வருகின்றன. இதையடுத்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட் டங்களில் இருந்தும் புத்தாண்டை கொண்டாட குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தையடுத்து மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் 1500 போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியா குமரி யில் புத்தாண்டையொட்டி கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கடற்கரை பகுதி களில் போலீஸ் பாதுகாப்பு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 ஷிப்டுகளாக மாவட்ட முழு வதும் போலீசார் ரோந்து சுற்றி வருவ தற்கும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    முக்கிய சந்திப்புகள் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளப்பட உள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டினால் அவர் கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரித்துள்ளார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு ஒரு மணிக்கு பிறகு கொண்டாடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாட வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
    • நையாண்டி மேளம், வில்லிசை, முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்ச்சி, சாமிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    நாகர்கோவில்:

    சாமிதோப்பு அருகே செட்டிவிளை முத்தாரம்மன் கோவில் மார்கழி கொடை விழா நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

    20-ந்தேதி காலையில் 5 மணிக்கு கடல் தீர்த்தம் கொண்டு வருதலும் இதைத் தொடர்ந்து நடைதிறப்பும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு நையாண்டி மேளம், திருவிளக்கு பூஜை வழிபாடு நடக்கிறது. 9.30 மணிக்கு வில்லிசை, இரவு 11 மணிக்கு சாஸ்தாவுக்கு பூஜை, 12 மணிக்கு சாமிக்கு பூஜை, 2.30 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூஜை நடக்கிறது.

    21-ந்தேதி காலை 8 மணிக்கு நையாண்டி மேளம், 10 மணிக்கு வில்லிசை, 10.30 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்ச்சி, 12 மணிக்கு மஞ்சள் மாரியம்மன்,வெள்ளை மாரியம்மன் சாமிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சமபந்தி விருந்து நடைபெறும். 2.30 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

    இரவு 8 மணிக்கு நையாண்டி மேளமும், 9 மணிக்கு வில்லிசையும், 12 மணிக்கு உச்சினிமாகாளி அம்மனுக்கு பூப்படைப்பு அலங்கார பூஜையும், 2 மணிக்கு செங்கடகர சாமி, வழி வேட்டைக்கார சாமிக்கு பூஜையும், அதி காலை 5 மணிக்கு பிரம்ம சக்தி மற்றும் சுடலை மாட சாமிக்கு பூஜையும் நடக்கிறது.

    • நெடுஞ்சாலைத்துறை சார்பில் நாளை சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது.
    • இதனால் ஈங்கூர் துணை மின் நிலையம் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின்சாரம் இருக்காது.

    ஈரோடு:

    நெடுஞ்சாலைத்துறை சார்பில் நாளை (வியாழக்கிழமை) சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஈங்கூர் துணை மின் நிலையம் பாலப்பாளையம், நெசவாளர் காலனி மற்றும் புலவனூர் மின் பாதை பகுதிகளான ஈங்கூர், பாலப்பாளையம், முகாசி பிடாரியூர், வேலாயுதம்பாளையம், புலவனூர், கூரபாளையம், கோவில்பாளையம், கொளத்துப்பாளையம், சென்னியங்கிரிவலசு, நெசவாளர் காலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • இன்று அதிகாலை வரை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு
    • நிலுவைதொகை 2 தவணைகளில் வழங்கப்படுகிறது

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக, அமைச்சர்கள் முன்னிலை யில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது ரூ.40 தினக்கூலி வழங்குவது, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இதனை செயல்படுத்த அரசு ரப்பர் கழகம் முன்வரவில்லை. இதனால் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். குமரி மாவட்ட த்தைப் பொறுத்த வரை, கீரிப்பாறை,மணலோடை, பரளியாறு, காளிகேசம், சிற்றாறு, மருதம்பாறை, குற்றியார், கோதையார் பகுதிகளில் அரசுக்கு 3 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன.

    இங்குள்ள 9 கோட்ட ங்களில் பணியாற்றும் சுமார் 2 ஆயிரத்து 500 தொழிலாளர்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 7-ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். சுமார் 30 நாட்கள் இரவு பகலாக போராட்டம் நடைபெற்ற நிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    நாகர்கோவில் வடசேரி யில் உள்ள அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குநர் தின்கர்குமார், சேர்மன் கவுசல், பொது மேலாளர் குருசாமி ஆகியோர் முன்னி லையில் இந்த பேச்சு வார்த்தை நடந்தது. தொழிற் சங்க நிர்வாகிகள் பால்ராஜ் (ஐ.என்.டி.யூ.சி), வல்சகுமார் (சி.ஐ.டி.யூ), சுகுமாரன் (தொ.மு.ச), மகேந்திரன் (அ.தி.மு.க.), இளங்கோவன் (ரப்பர் தோட்ட தொழிலாளர் பேரவை) ஆகியோர் பங்கேற்ற இந்த பேச்சுவார்த்தையில் ரூ.40 தினக்கூலி வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டது.

    மேலும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை நடத்து வது எனவும் முடிவு செய்ய ப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தை தொழிலாளர் நல அதிகாரி முன்னிலையில் கையெழுத்திட வேண்டும் என தொழிற்சங்க நிர்வாகி கள் தரப்பில் வலியுறுத்த ப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஊதிய நிலுவைத் தொகையை எப்போது இருந்து வழங்கு வது என்பது குறித்த பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் இருந்து அதனை வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. ஒருவழியாக இன்று அதிகாலை 2.30 மணிக்கு பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்தது. வருகிற 15 மற்றும் 22-ந் தேதி என 2 தவணைகளில் ஊதிய நிலுவை தொகையை வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

    ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகை போன்ற பிரச்சினைகள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புவதென முடிவு செய்தனர். அதன்படி நாளை (7-ந் தேதி) அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு திரும்ப உள்ளனர்.

    • பொங்கலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜி.ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.

    வீரபாண்டி :

    பொங்கலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை பொங்கலூர், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிக்காளிபாளையம், தெற்கு அவினாசிபாளையம், வடக்கு அவினாசிபாளையம் ஒரு பகுதி, உகாயனூர், என்.என். புதூர், காங்கேயம்பாளையம், ஓலப்பாளையம் மற்றும் எல்லப்பாளையம் புதூர் துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இத்தகவலை பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜி.ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின்பர்மான வட்ட செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-வீரபாண்டி துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை குறிஞ்சிநகர், ஆலங்காடு, வீரபாண்டிபிரிவு, வீரபாண்டி ரோடு, புளியங்காடு, ஜே.ஜே.நகர், எம்.பி.எஸ்.முத்துநகர், சவுடேஸ்வரி நகர், கிருஷ்ணாநகர், லட்சுமிநகர் கார்டன் கிழக்கு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இ்வ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×