search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் 764 ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகள் நாளை முதல் வினியோகம்
    X

    கொட்டாரத்தில் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு லாரியில் பொங்கல் கரும்பு வந்து இறங்கியபோது எடுத்த படம் 

    குமரியில் 764 ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகள் நாளை முதல் வினியோகம்

    • தினமும் 200 பேருக்கு வழங்க ஏற்பாடு
    • பொது மக்களுக்கு ரூ.1000 ரொக்கப் பணத்தை வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    பொங்கல் பண்டிகையை யொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    இதையடுத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.குமரி மாவட்டத்தை பொருத்த மட்டில் 764 ரேசன் கடைகள் மூலமாக 5 லட்சத்து 74 ஆயிரத்து 764 ரேசன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியில் ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்தந்த ரேஷன் கடை ஊழியர்கள் ரேசன் கார்டு தாரர்களுக்கு டோக்கன் வழங்கி உள்ளனர். தினமும் காலை 100 பேருக்கும் மாலையில் 100 பேருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க டோக்கன் வழங்கப் பட்டுள்ளது. நாளை 9-ந் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

    இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் மேயர் மகேஷ், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதை தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுதொகுப்பு பொது மக்களுக்கு வழங்கப் படுகிறது. இதற்கு தேவையான பொருட்கள் அந்தந்த ரேஷன் கடை களுக்கு அனுப்பி வைக்கப் பட்டு வருகிறது.

    ஏற்கனவே அரிசி சீனி வகைகள் முழுமையாக அனைத்து ரேசன் கடை களுக்கும் அனுப்பி வைக்கப் பட்ட நிலையில் கரும்பு அனுப்பும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது.

    நாளை ரேஷன் கடை ஊழியர்களிடம் பொது மக்களுக்கு வழங்க உள்ள ரூ.1000 ரொக்கப் பணத்தை வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ரேஷன் கடை மூலமாக பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.

    கூட்டத்தினை கட்டுப்ப டுத்தும் வகையில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனின் அடிப்படையில் அந்தந்த ரேஷன் கடை களுக்கு சென்று பொங்கல் தொகுப்புகளை பெற்று செல்லுமாறு அதிகா ரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×