search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படம்"

    • மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இந்த படத்தை இயக்குகிறார்.
    • நடிகர் அருண் விஜய் நடிக்கும் அவரின் 36 வது படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் அருண் விஜய் நடிக்கும் அவரின் 36 வது படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

    தனக்கென கதைகளை தேர்ந்தெடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். அவர் நடிப்பில் ஜனவரி மாதம் ஏ.எல். விஜய் இயக்கத்தில் மிஷன் சாப்டர்-1 படம் வெளியாகியது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

    இதைத்தொடர்ந்து அருண் விஜய் அடுத்த படம் நடிக்கவிருக்கிறார். மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

    இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

     

    படத்தின் பூஜை விழா இன்று சென்னையில் நடந்தது. அதில் பேசிய இயக்குனர் திருக்குமரன் " எப்படி சிவகார்த்திகேயனுக்கு மான் கராத்தே ஒரு திருப்பு முனை படமாக அமைந்ததோ , அதேப் போல் அருண் விஜய் - க்கும் ஒரு முக்கியமான படமாக அமையும். இது ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக அமையும்" எனக் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருந்தார்
    • கதிர், மாணவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்

    நடிகர் கதிர் 2013-ம் ஆண்டு வெளியான மதயானைக்கூட்டம் படத்தின் மூலமாக நாயகனாகி அறிமுகமானார். அதன் பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம், நல்ல நடிகர் என்ற பெயர் வாங்கினார்.

    பின்னர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருந்தார். அடுத்ததாக அமேசான் பிரைமில் வெளியான சூழல் வெப் தொடரில் நடித்திருந்தார். விரைவில் சுழல் 2-ம் பாகம் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் கதிர், மாணவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்..இப்படத்தை எஸ்.எல்.எஸ் ஹென்றி இயக்குகிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றிந்தது. இப்படத்தை பார்ச்சூன் ஸ்டுடியோஸ் மற்றும் எமினன்ட் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

    தற்போது, இப்படத்தின் முதல் பாடலாக கொல்லுறாளே என்கிற பாடல் இன்று மாலை வெளியாகியது. இப்பாடலை சந்துரு வரிகளில் பிரதீப் குமார் பாடியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • நுழைவுச்சீட்டு இருந்தும் நரிக்குறவர் இனமக்கள் திரையரங்க வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
    • அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் திரைப்படம் பார்க்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    சென்னையில் உள்ள திரையரங்கில் புதிய படம் பார்க்க சென்ற நரிக்குறவர் இன மக்கள் நுழைவுச்சீட்டு இருந்தும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    இது சர்ச்சையானது.

    இந்நிலையில், தஞ்சை நகர பகுதிகளில் வாழும் சுமார் 55 நரிக்குறவர்கள் நேற்று வெளியான புதிய படத்தை திரையரங்கத்தில் கட்டண முதல் வகுப்பில் அமர்ந்து பார்க்க ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதுகுறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில்:-

    உரிய நுழைவுச்சீட்டு இருந்தும் நரிக்குறவர் இன மக்கள் சென்னை திரையரங்க வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டது வருத்தத்துக்குரியது.

    அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நரிக்குறவர் இன மக்களுடன் ஒன்றாக அமர்ந்து தஞ்சை நகர பொதுமக்கள் திரையங்கத்தில் திரைப்படம் பார்க்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    சென்னை திரையரங்கத்தில் நடைபெற்றது போன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என்பதே அனைவரின் விருப்பம் என்றனர்.

    ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • தியேட்டர்களில் கட் அவுட் வைக்க அனுமதி மறுப்பு
    • ரசிகர்கள் ஏமாற்றம்

    நாகர்கோவில்:

    பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாட பொதுமக்கள் தயாராகி வரும் நிலையில் பொதுமக்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பொங்கல் பண்டிகையை யொட்டி விஜய் நடித்த வாரிசு படமும், அஜித் நடித்த துணிவு படமும் வெளியாகிறது.

    இதையடுத்து விஜய், அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் அஜித் இருவரது படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவிலில் விஜய் நடிக்கும் வாரிசு படம் 2 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதே போல் அஜித் நடித்த துணிவு படமும் 2 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.

    இதையடுத்து ரசிகர்கள் தியேட்டர் முன்பு கட் அவுட்கள் வைக்க ஏற்பாடுகள் செய்தனர். 2 ரசிகர்களும் கட் அவுட்டு கள் வைக்க போலீசாரின் அனுமதி கேட்டனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து அனுமதி கேட்டனர்.அவர்களும் தியேட்டருக்கு வெளியே கட் அவுட் வைக்க அனுமதி மறுத்துள்ளனர்.

    தியேட்டருக்குள் கட் அவுட் வைத்தால் அதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் தியேட்டர் நிர்வாகமே முழு பொறுப்பு என்று தெரிவித்தனர். இத னால் தியேட்டர் உரிமை யாளர்களும் கட்அவுட் வைப்பதற்கு அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படு கிறது. வழக்கமாக புதிய படங்கள் வெளியானால் தியேட்டர்களின் வெளியே கட்அவுட்டுகள் வைப்பது வழக்கமாகும். ஆனால் தற்பொழுது கட்அவுட்டுகள் வைக்க அனுமதி மறுக்கப் பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    நாகர்கோவிலில் விஜய் நடித்த வாரிசு படம் நாளை 11-ந்தேதி அதிகாலை 6.00 மணிக்கு முதல் காட்சி வெளியிடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. இதே போல் அஜித் நடித்த வாரிசு படம் நாளை காலை 7.30 மணிக்கு திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    2 படத்திற் கான டிக்கெட்டுகளும் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள்.முதல் நாள் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாக ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர்.

    நாகர்கோவிலை தவிர்த்து வெள்ளிச்சந்தை, குழித்துறை பகுதியில் உள்ள தியேட்டர்களிலும் விஜய் அஜித் படங்கள் வெளியிடப்படுகிறது.

    ×