விஜய் 69 : படத்தின் புது 'அப்டேட்'

விஜய்யின் பிறந்த நாளை யொட்டி ஜூன் 22- ந்தேதி இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 14 - ந் தேதி தமிழ் புத்தாண்டில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய் 69 : படத்தின் புது 'அப்டேட்'
Published on

ஏஜிஎஸ்' பட நிறுவன தயாரிப்பில் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இது விஜய் க்கு 68- வது படமாகும்.இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

இந்த படத்தில் பிரசாந்த்,பிரபுதேவா, மோகன், மீனாட்சி சௌத்ரி,சினேகா, லைலா, ஜெயராம்,யோகிபாபு, ஆகியோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கோட் படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட 2 வேடத்தில் நடிக்கிறார்.மேலும் கடந்த மாதம் கேரளாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் விஜய் பங்கேற்று நடித்தார். அப்போது விஜய்க்கு கேரள ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் 'கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் துபாய் சென்றார். 'கோட்' படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ந்தேதி தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் விஜயின் 69 -வது படத்தை எச்.வினோத் இயக்குவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படம் குறித்து புது அப்டேட் வெளியாகி உள்ளது. விஜய்யின் பிறந்த நாளை யொட்டி ஜூன் 22- ந்தேதி இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த ஆண்டுக்குள் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பு முடித்து விட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 - ந் தேதி தமிழ் புத்தாண்டில் தியேட்டர்களில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com