'ஒரு பொண்ணால எதுவும் செய்ய முடியாதா?' - படிக்காத பக்கங்கள் டிரைலர்

தற்பொழுது செல்வம் மாதப்பன் இயக்கத்தில் படிக்காத பக்கங்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் மே 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'ஒரு பொண்ணால எதுவும் செய்ய முடியாதா?' - படிக்காத பக்கங்கள் டிரைலர்
Published on

2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிரற்கு அறிமுகமாகினார் யாஷிகா ஆனந்த். 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து மக்கள் கவனத்தை பெற்றார்.

பின் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். சமீபத்தில் வெளிவந்த டபுள் டக்கர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

அதைத்தொடர்ந்து தற்பொழுது செல்வம் மாதப்பன் இயக்கத்தில் படிக்காத பக்கங்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரஜின், ஜார்ஜ் மர்யன், முத்து குமார், பாலாஜி, லொல்லுசபா மனோகர் மற்றும் பல இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. தாய்மை மற்றும் பெண்மையை மையமாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வரும் மே 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com