அருண் விஜய் 36-வது படத்தின் டைட்டில் இன்று வெளியீடு

இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார்.அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.
அருண் விஜய் 36-வது படத்தின் டைட்டில்  இன்று வெளியீடு
Published on

கடந்த ஜனவரி மாதம் விஜய் ஏ.எல் இயக்கத்தில் அருண் விஜய் , எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இணைந்து நடித்து மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியாகியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வனங்கான், பார்டர், AV 36 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அருண் விஜயின் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

இப்படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகும் என படக்கிழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com