search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் முனைவோர்"

    • இளையான்குடி கல்லூரியில் மாணவர்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர் நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், தொழில் முனைவு, புதுமை மற்றும் தொழில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து ''தமிழ்நாடு மாணவர் கண்டுபிடிப்பாளர்கள்'' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக உறுப்பினர் அப்துல் முத்தலீப் வரவேற்றார். வணிகவியல்துறை தலைவர் நைனா முகம்மது வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொழில் முனைவு, புதுமை மற்றும் தொழில் மைய, கள ஒருங்கிணைப்பாளர் அருமை ரூபன் கலந்துகொண்டு பேசினார். தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர் நன்றி கூறினார். இதில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    • அனைத்து பிரிவினருக்கும் 3 சதவீத பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.
    • ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    படித்த முதல் தலைமுறையினரை தொழில் முனைவோராக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத்திட்டம் என்ற திட்டத்தினை உருவாகியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் முதலாம் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வழிவகை செய்யப்படுகிறது.

    அதன்படி உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் 25 சதவீதம் மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.75 லட்சம்) நிதியுதவி வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு 25 சதவீத மானியத்துடன் கூடுதலாக 10 சதவீத மானியம் (அதிகபட்ச உச்சவரம்பு ரூ.75 லட்சம்) வழங்கப்படும். மேலும் அனைத்து பிரிவினருக்கும் 3 சதவீத பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.

    இத்திட்டத்தின்கீழ் கடன் பெற விண்ணபிக்கும்போது பொது பிரிவினருக்கு 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினரான பெண்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு வயது 45-க்குள் இருக்க வேண்டும்.

    கல்வித்தகுதியாக 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு, ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் தொழிற்சார்ந்த பயிற்சி பெற்ற இளைஞர்கள் மற்றும் மகளிர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் பொது பிரிவு பயனாளிகள் தங்களுடைய பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதம் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் 5 சதவிகிதம் செலுத்த வேண்டும்.

    இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்து பயன்பெற விரும்பும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், அவினாசி சாலை, அனுப்பர்பாளையம்புதூர், திருப்பூர் என்ற முகவரியிலோ அல்லது 0421-2475007 மற்றும் 9500713022 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • மானியங்கள் எவ்வளவு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
    • கீழ்கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    அரவேணு,

    கோத்தகிரி அருகே தேனாடு, கெங்கரை, அரக்கோடு மற்றும் கடினமாலா ஊராட்சிகளில் உள்ள சுய உதவி பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் யூ.என்.சி.எஸ் மூலம் கீழ்கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட தொழில் மையம் இயக்குனர், மாவட்ட தொழில் மையம் உதவி இயக்குனர், வாழ்வாதார திட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு புத்தாக்க திட்ட அலுவலர், மற்றும் யூ.என்.சி.எஸ். தலைமை அலுவலர் மற்றும் களப்பணி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட தொழில் மையம் மூலம் எந்தவிதமான தொழில்களுக்கு தனி நபர் கடன் வழங்கப்படுகிறது என்றும், ஒவ்வொரு தொழிற்கும் எவ்வளவு கடன் கொடுக்கப்படுகிறது அதற்கான மானியங்கள் (25 சதவீதம் மற்றும் 35 சதவீதம்) எவ்வளவு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

    வாழ்வாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் மூலம் மகளிர் சுய உதவி குழுவின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்து கூறப்பட்டது. இதில் வங்கி பொது மேலாளர் சண்முகம் சிவா, யூ.என்.சி.எஸ்.கள இயக்குனர்சிங்கராஜ், மகளிர் திட்ட அலுவலர்கள் பரமேஷ்வரி, சுமித்திரா,வாழ்ந்து காட்டுவோம் அமைப்பு அலுவலர்கள் பச்சையப்பன், ஜெயந்தி, களபணி சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • காளான் வளர்ப்பு , கம்ப்யூட்டர் டேலி போன்ற முப்பது வகையான தொழில் பயிற்சி பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டது.
    • மானியங்கள் குறித்து மகளிர் சுய உதவி பெண்களுக்கு எடுத்து கூறப்பட்டது.

    அரவேணு,

    கொணவக்கரை, ஜக்கனாரை ஆகிய இரு ஊராட்சி உட்பட்ட யூ.என்.சி எஸ் மூலம் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உள்ள பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கனரா வங்கி தொழிற் பயிற்சி இயக்குனர், மாவட்ட தொழில் மைய மேலாளர் வாழ்வாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் கலந்து கொண்டனர். கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் மூலம் தையல் பயிற்சி, மெழுகுவர்த்தி, சோப்பு ஆயில், பினாயில், சாக்லேட் ,காளான் வளர்ப்பு , கம்ப்யூட்டர் டேலி போன்ற முப்பது வகையான தொழில் பயிற்சி பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டது.

    மாவட்ட தொழில் மையம் மூலம் எந்தவிதமான தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகிறது ஒவ்வொரு தொழிற்கும் எவ்வளவு கடன் கொடுக்கப்படுகிறது அதற்கான மானியங்கள் எவ்வளவு வழங்கப்படும் என்று மகளிர் சுய உதவி பெண்களுக்கு எடுத்துரைத்தார்.

    வாழ்வாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் மூலம் மகளிர் சுய உதவி குழுவின் முக்கியத்துவம் ,பி எல் எம் மூலம் கிடைக்கக்கூடிய சலுகைகள், வங்கி கடன்கள், சுய உதவி பெண்கள் தொழில் செய்வதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

    • சிறிய அளவிலான தொழிற்பூங்காக்கள் அமைத்து நடுத்தர நிறுவனங்களின்மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும்.
    • தற்போது தொழில் முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து தகுதிவாய்ந்த திட்டமதிப்பீட்டில் ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்ப தற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

    ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின்கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பலதிட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காஅமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    தகுதிவாய்ந்த திட்டமதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின்மானியமாக வழங்கப்படுகிறது. தற்போது தொழில் முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து தகுதிவாய்ந்த திட்டமதிப்பீட்டில் ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்ப தற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    சிறிய அளவிலான தொழிற்பூங்காக்கள் அமைத்து நடுத்தர நிறுவனங்களின்மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும்.மேலும் அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இது முதல்அமைச்சரின் கனவுத் திட்டம் ஆகும்.

    எனவே சிறிய அளவிலானஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை மயிலாடுதுறை மாவட்டத்தில் பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் வேலை வாய்ப்புகளைப் பெருக்கவும் அனைத்து தொழில் முனைவோரும் முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: துணிநூல் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகம், 30/3 நவலடியான் காம்ப்ளக்ஸ் முதல் தளம்தாந்தோணிமலை கரூர் 639005. கைபேசி எண்: 9444656445ரூபவ் 9092590486.

    • தொழில் முனைவோர் அமைப்பு தொடக்க விழா நடந்தது.
    • ராமநாதபுரத்தைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வேலுமனோகரன் பெண்கள் கல்லூரியில் புத்தொழில் தொழில் முனைவோர் அமைப்பின் தொடக்க விழா நடந்தது.இந்நிகழ்ச்சியில் முதல்வர் காஞ்சனா வரவேற்றார்.

    அழகப்பா பல்கலைக்கழகத்தின் கல்லூரி வளர்ச்சி குழு முதன்மையர் சிவகுமார் இணையம் மூலம் கலந்து கொண்டு தொடக்க உரை ஆற்றினார். கல்லூரி செயலர் சகுந்தலா பார்த்தசாரதி வாழ்த்துரை வழங்கினார். ஆஸ்வா டெக்னாலஜிஸ் நிறுவனர் வானதி அமலன் புத்தொழில் தொடக்கம் குறித்தும், மாணவர்களுக்கு இந்த திட்டம் மூலம் எவ்வாறு பயனுள்ளதாக அமையக்கூடும் என்பது குறித்தும் பேசினார். ''இப்போ பே'' தலைமை நிர்வாக அதிகாரி மோகன் பேசினார். நிகழ்ச்சியில் பேராசிரியர் கிரிஜா நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை புத்தொழில் தொழில் முனைவோர் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அய்யப்பன் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சியில் தாட்கோ மூலம் வங்கிக்கடன் பெற்று சிறந்த தொழில் முனைவோராக திகழ வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • 50 சதவீத மானியத்துடன்கூடிய கடனுதவியும் வழங்கிட வங்கிகளுக்கு இசைவுக்கடிதம் மூலம் பரிந்துரை செய்யப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறுவதற்கான நேர்க்காணல் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது. அப்போது மாவட்ட கலெக்டர் கூறியதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடிய இனத்தைச் சேர்ந்த 210 பேர் தொழில் முனைவோர்களுக்கான கடன் வசதி, வாகன கடன்வசதி, சிறு தொழில் செய்ய கடன்வசதி, கால்நடைகள் வளர்ப்புத்தொழில் ஆகியவற்றிற்கான மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) இணையதளம் வழியே விண்ணப்பித்திருந்தனர்.

    அதன்படி தேர்வுக்குழு உறுப்பினர்கள் மூலமாக பல்வேறு கடனுதவி கோரி விண்ணப்பித்துள்ள தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பத்தினை ஆய்வு செய்து, ஆதிதிராவிடர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு 30 சதவீத மானியத்துடன் கடனுதவியும், பழங்குடியின பிரிவைச் சார்ந்தவர்களுக்கு 50 சதவீத மானியத்துடன்கூடிய கடனுதவியும் வழங்கிட வங்கிகளுக்கு இசைவுக்கடிதம் மூலம் பரிந்துரை செய்யப்படும். இந்த கடனுதவிகளை பெறுபவர்கள் சிறந்த தொழில்முனைவோராக உருவாகிட வேண்டும். அவ்வாறு சிறந்த தொழில்முனைவோராக உருவாகிட தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார். இதில் தேர்வுக்குழு உறுப்பினர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • தொழில் முனைவோர் மற்றும் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை கிராமத்தில் நடைபெற்றது.
    • விழிப்புணர்வு கருத்தரங்கத்தினை லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி தொடங்கி வைத்தார்.

    சாத்தான்குளம்:

    மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவனம், மதர் சமூக சேவை நிறுவனம், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் பனை பொருள் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு தொழில் முனைவோர் மற்றும் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை கிராமத்தில் நடைபெற்றது.

    தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் பனை தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநிலத் தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான கென்னடி தலைமை தாங்கினார். பஞ்சாயத்து துணை தலைவர் பிர்தவுஸ் முன்னிலை வகித்தார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி தொடங்கி வைத்தார்.

    சிறப்பு விருந்தினராக மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவன உதவி இயக்குனர் பிரபாகரன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் பிளாரன்ஸ் , குழந்தைகளின் உரிமைகள், பாதிக்கப்படும் சூழ்நிலைகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல், தண்டனைகள் என்ற தலைப்புகளில் கருத்துரை வழங்கினார். 

    ×