search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "For bank loans"

    • கள்ளக்குறிச்சியில் தாட்கோ மூலம் வங்கிக்கடன் பெற்று சிறந்த தொழில் முனைவோராக திகழ வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • 50 சதவீத மானியத்துடன்கூடிய கடனுதவியும் வழங்கிட வங்கிகளுக்கு இசைவுக்கடிதம் மூலம் பரிந்துரை செய்யப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறுவதற்கான நேர்க்காணல் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது. அப்போது மாவட்ட கலெக்டர் கூறியதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடிய இனத்தைச் சேர்ந்த 210 பேர் தொழில் முனைவோர்களுக்கான கடன் வசதி, வாகன கடன்வசதி, சிறு தொழில் செய்ய கடன்வசதி, கால்நடைகள் வளர்ப்புத்தொழில் ஆகியவற்றிற்கான மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) இணையதளம் வழியே விண்ணப்பித்திருந்தனர்.

    அதன்படி தேர்வுக்குழு உறுப்பினர்கள் மூலமாக பல்வேறு கடனுதவி கோரி விண்ணப்பித்துள்ள தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பத்தினை ஆய்வு செய்து, ஆதிதிராவிடர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு 30 சதவீத மானியத்துடன் கடனுதவியும், பழங்குடியின பிரிவைச் சார்ந்தவர்களுக்கு 50 சதவீத மானியத்துடன்கூடிய கடனுதவியும் வழங்கிட வங்கிகளுக்கு இசைவுக்கடிதம் மூலம் பரிந்துரை செய்யப்படும். இந்த கடனுதவிகளை பெறுபவர்கள் சிறந்த தொழில்முனைவோராக உருவாகிட வேண்டும். அவ்வாறு சிறந்த தொழில்முனைவோராக உருவாகிட தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார். இதில் தேர்வுக்குழு உறுப்பினர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    ×